search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு"

    • அருண்பாண்டி புதுப்பட்டி காட்டுப் பகுதியில் கிடை அமைத்து ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார்.
    • அருண் பாண்டிக்குச் சொந்தமான ஆட்டை சந்தையில் விற்பனை செய்வதற்காக 2 பேர் வைத்திருந்தது தெரிய வந்தது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகேயுள்ள கீழக் குத்தப்பாஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டி(வயது 26). இவர் புதுப்பட்டி காட்டுப் பகுதியில் கிடை அமைத்து ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த சுமார் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள சினை ஆடு ஒன்று நேற்று முன்தினம் காணவில்லை. காணாமல் போன தனது ஆட்டைத் தேடி அருண்பாண்டி, கடையம் சந்தையில் சென்று பார்த்த போது, 2 பேர் அருண் பாண்டிக்குச் சொந்தமான ஆட்டை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து அருண்குமார் கடையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். கடையம் போலீசார் ஆலங்குளம் போலீசாரைத் தொடர்பு கொண்டு இரு ஆடு திருடர்கள் மற்றும் ஆட்டை ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஆலங்குளம் அருகேயுள்ள லெட்சுமியூர் பொன்னுசாமி(58) மற்றும் அருணாசலம்(60) ஆகியோர் என்பதும், ஆட்டைத் திருடி விற்பனைக்குக் கொண்டு சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து,2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    • சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் காரில் வந்து ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்
    • காரை வழிமறித்து சத்தம் போட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் பிள்ளை வன ஊரணி அருகே சிவப்பு கலர் காரில் 3பேர் வந்தனர். காரில் இருந்து இறங்கி நோட்டமிட்டபடி இருந்த அவர்கள் அந்தப் பகுதியில் மேய்ச்சலில் இருந்த 2 ஆடுகளை காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காரில் ஆடு கத்தும் சத்தம் கேட்டதால் காரை வழிமறித்து சத்தம் போட்டனர். உடனடியாக காரை திருப்பிச் செல்ல முயன்றனர்.

    ஆனால் கார் ஸ்டார்ட் ஆகாததால் 3 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். அதில் 2 பேர் ஊர் மக்களிடம் கையும் களவுமாக சிக்கினர். ஊர் மக்கள் காரில் இருந்த ஆட்டை மீட்டு சிக்கிய வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி போலீசார் ஆடு திருடியவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் திருப்புவனம் பாப்பாகுடியை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜா என்பதும், தப்பி ஓடியவர் மணி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புலியை பிடிக்க வனத்துறையினர் புதுவியூகம்
    • குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    பேச்சிப்பாறை அருகே முக்கறைக்கல் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக புலிகள் அட்டகாசம் செய்து வருகிறது. அங்குள்ள ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருகிறது.

    குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து நாய், ஆடுகளை கொன்றதால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் சுற்றி தெரியும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 2 இடங்களில் கூண்டு அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் புலி சிக்கவில்லை.

    இந்த நிலையில் புலியை பிடிக்க புது வியூகம் வகுத்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையிலான குழுவினர் நேற்று அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது ஆடு, மாடுகளை ஆங்காங்கே கட்டுவதால் புலிகள் கடித்து கொன்று வருகிறது. எனவே அவற்றை ஒரே இடத்தில் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் காம்பவுண்டின் உள்பகுதியில் ஆடு, மாடுகள் கட்டப்பட்டுள் ளது. சுமார் 20 மாடுகள், 40 ஆடுகள் ஒரே இடத்தில் கட்டப்பட்டு உள்ளது. அந்த பகுதியை வனத்துறை அதி காரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் புலியை பிடிக்கும் வகையில் ஆட்டுக்கொட்டகை போன்ற தோற்றம் உடைய கூண்டு ஒன்றை வடிவமைத்து 2 இடங்களில் வைத்துள்ளனர். அந்த கூண்டுக்குள் 2 ஆடுகளையும் கட்டி வைத்துள்ளனர். 24 மணி நேரமும் அந்த கூண்டை வனத்துறை கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் புலி பிடிப்பதற்கு வெளியூரிலிருந்து சிறப்பு குழுவினரை அழைத்து வரவும் நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    கோவையில் இருந்து புலியை பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற குழுவினர் விரைவில் இங்கு வர உள்ளனர். அவர்கள் குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.

    • கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் ஆட்டை மீட்டனர்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மைலன்கோன்படி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மினி. விவசாயியான இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சம்பவத்தன்று ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றபோது அருகில் இருந்த கிணற்றில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. இதனை கண்ட பத்மினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கறம்பக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை அதிகாரி மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் ஆட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

    • ராமநாதபுரத்தில் ஆடுகளை திருடும் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
    • திருட்டு கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆடு வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தை அடுத்துள்ள தேவிப்பட்டி னத்தை சோ்ந்தவர் சரவணன். இவர் தனது ஆடுகளை கழனிக்குடி கண்மாயில் வழக்கம் போல மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது ஒரு ஆட்டை காணவில்லை. அப்போது அந்த ஆட்டை 2 போ் இரு சக்கர வாகனத்தில் திருடிச் சென்றனர்.

    இதைப்பாா்த்த சரவணன் அவா்களை விரட்டி சென்று பிடித்து தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீசார் நடத்திய விசாரணையில் ஆடு திருடியது தாமரை ஊரணி முனீஸ்வரன் (34), தேர்போகி முத்துமாரி என்ற பாப்பா (32) என தெரிய வந்தது. இதைத்தொ டா்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனா்.

    இதே போல தனது 3 ஆடுகளை காணவில்லை என்று முருகேசன் என்பவா் ஏா்வாடி போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புத்தேந்தல் பகுதியை சோ்ந்த பூமிநாதன் தனது ஆடுகளை மா்மநபா்கள் திருடிச்சென்று விட்டதாக அளித்தாா். ராமநாதபுரம் பகுதியில் மர்மகும்பல் தொடர்ந்து ஆடுகளை திருடி வருகிறது.

    எனவே மாவட்ட காவல்துறை ஆடுகள் திருடப்படுவதை தடுக்கவும், திருட்டு கும்பலை பிடிக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆடு வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆர்.எஸ்.மங்கலம் அருகே வீட்டில் கட்டி இருந்த 5 ஆடுகள் திருடப்பட்டது.
    • திருட்டுப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்,மங்கலம் உப்பூர் அருகே உள்ள கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது60). இவரது வீட்டு தொழுவத்தில் கட்டி இருந்த 5 ஆடுகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்லத்துரை திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய வர்களை தேடி வருகிறார். திருட்டுப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.

    • ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆவல்சூரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி லதா. இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேலும் தங்களது வீட்டில் உள்ள காலி இடத்தில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வளர்த்து வந்த 6 ஆடுகளை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடி சென்றுவிட்டனர்.

    அதே போல் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வளர்த்து வந்த ஆட்டையும் மர்ம நபர்கள் திருடிவிட்டனர்.

    இது குறித்து லதா கொடுத்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.
    • இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது அதிகரித்துள்ளது.

     உடுமலை :

    உடுமலை அருகே தாந்தோணி, துங்காவி, இந்திராநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக தோட்டங்களில், பராமரிக்கப்படும் ஆடுகள் மர்மவிலங்குகளால் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. சின்னவீரம்பட்டி இந்திராநகர் பகுதியில், கந்தவேல் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கடிபட்டு உயிரிழந்து கிடந்தது.அப்பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சில கன்றுக்குட்டிகள் இவ்வகையில் உயிரிழந்து ள்ளது.வனத்துறை சார்பில் மர்மவிலங்கு நடமாட்டம் குறித்து கண்காணிக்க பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது.

    இது குறித்து உடுமலை வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது:- தாந்தோணி சுற்றுப்பகுதியில் குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.சம்பவ இடத்தில் கால்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடினால் இறை ச்சியை அவ்விடத்திலேயே விட்டு செல்லாது.எனவே குறிப்பிட்ட சுற்றளவில் சுற்றித்திரியும் நாய்களே ஆடுகளை குறிவைத்து தாக்குவது உறுதியா கியுள்ளது என்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில் இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொ ட்டுவது அதிகரித்துள்ளது. இத்தகைய கழிவுகளை உண்ணும் நாய்கள் தோட்டங்களில், வளர்க்கப்படும் கோழி, ஆடு, கன்றுக்குட்டிகளை குறிவைத்து தாக்குகின்றன.

    எனவே இறைச்சிக்க ழிவுகளை திறந்தவெளியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சத்திலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக சம்பவ இடங்களில் கூண்டு வைத்து நாய்களை பிடிக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆட்டுப்பட்டியில் தனது வெள்ளாடுகளை அடைத்து வைத்து விட்டு இரவு வீட்டுக்கு சென்று விட்டார்.
    • அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ரங்கப்பையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் நல்லக்கண்ணன். கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் வருமானம் ஈட்டுவதற்காக வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நல்லக்கண்ணன் சேரம்பாளையம் அஷ்–ட–லட்–சுமி நகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து உள்ளார்.

    இந்த ஆட்டுப்பட்டியில் தனது வெள்ளாடுகளை அடைத்து வைத்து விட்டு இரவு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் காலை ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்த போது உள்ளே இருந்த 10 வெள்ளாடுகளும் ரத்தம் சிந்திய நிலையில், தலை, கழுத்து, உடம்பு பகுதி முழுவதும் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் , நல்லக்கண்ணன் ஆட்டுப்பட்டிக்குள் நள்ளிரவு நேரத்தில் ஏதோ மர்ம விலங்கு அல்லது வெறி நாய் உள்ளே புகுந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை கடித்து குதறி விட்டு சென்றதும், இதனால் 10 வெள்ளாடுகளும் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து முத்தூர் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து உயிரிழந்த வெள்ளாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இறந்த அனைத்து வெள்ளாடுகளும் அப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டன. ஆட்டுப்பட்டிக்குள் மர்ம விலங்கு அல்லது வெறி நாய் புகுந்து கடித்து குதறியதில் உயிரிழந்த 10 வெள்ளாடுகளின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் ஆகும்.

    மேலும் உயிரிழந்த வெள்ளாடுகளுக்கு மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை அதிகாரிகள் மூலம் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று நல்லக்கண்ணன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே செம்மங்காளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவர் 15-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை பார்க்க வந்துள்ளார். அப்போது 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 4 ஆடுகள் செத்துவிட்டன. 6 ஆடுகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அவற்றை மீட்டு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு என்னவாக இருக்கும் என சந்தேகத்தில் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் வெறிநாய்கள் கடித்தது போல் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.இதேபோல் ஊதியூர் பகுதியிலும் ஒரு விவசாயியின் பட்டியில் இருந்த ஒரு ஆட்டையும் மர்ம விலங்கு கடித்து கொன்று சிறிது தொலைவில் போட்டுவிட்டு சென்றுள்ளது. இதுகுறித்து காங்கயம் வனத்துறையினர் கூறும்போது " செம்மங்காளிப்பாளையம் மற்றும் ஊதியூர் பகுதியில் ஆடுகளை கடித்து குதறியது வெறிநாய்களாக இருக்க வாய்ப்புள்ளது. சிறுத்தையாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் வெறிநாய்கள் தவிர வேறு ஏதாவது மர்ம விலங்கு நடமாட்டம் தெரிகிறதா? என கண்காணிக்க உள்ளோம். இருப்பினும் பொதுமக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றார். செத்துப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடமான காங்கேயம் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் ஏ.சி. மணி சம்பவ இடத்தை பார்வையிட்டு விவசாயிக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.

    • அர்ஜுனன் தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(வயது 42). இவர், தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர். நாய்களை விரட்டியுள்ளனர். ஆனால் நாய்கள் கடித்ததால் பலத்த காயம் அடைந்திருந்த ஆடுகள் ஒவ்வொன்றாக இறந்தன.மொத்தம் 6 ஆடுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம். ஆடுகளை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய வாலிபர்கள்.
    • அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார்.

    காடையாம்பட்டி:

    காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 50),இவர், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தோட்டம் தார் சாலை அருகே ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார். அங்கிருந்த பொதுமக்கள் மேட்டார்சைக்கிளை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு வாலிபரை பிடித்த பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து எஸ்.ஐ. கருப்பண்ணனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆடு திருட்டில் ஈடுப்பட்டவர் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த மெக்கானிக் கோவிந்தராஜ் (25), என்பதும் இவர் ஏற்கனவே கஞ்சநாயக்கன்பட்டி, கருவள்ளி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆடுகளைத் திருடி விற்பனை செய்து மது குடித்து வந்ததும் தெரிய வந்தது. இவருடன் வந்தவர் பொம்மிடி பகுதியை சேர்ந்த வேடியப்பன் மகன் பாபு என்பதும் தெரிய வந்தது. கோவிந்தராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×