search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடித்திருவிழா"

    • துளசி மாலை சார்த்துங்கள்.
    • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.

    அம்பாள் மட்டுமின்றி, மகாவிஷ்ணுவும் தன் பக்தர்களின் தேவைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார், இந்த ஆடி மாதத்தில்!

    ஆமாம்... அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் விரதம் இருந்து(துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.

    துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள் துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம். காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.

    ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடுங்கள். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும். உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து அருளுவார் வேங்கடாசலபதி.

    ஏகாதசி திதியில், மகாவிஷ்ணுவை வழிபட்ட பின்னர், ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தனம் - தானியம் பெருகும். அசையாப் பொருட்கள் வீடு மனை என வாங்கும் யோகம் கிட்டும்.

    வீட்டில் சிக்கல், பிரச்சினை என்றிருந்த கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். நல்ல உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி, துவாதசி என்றில்லாமல், மாதந்தோறும் ஏகாதசி, துவாதசியில் பெருமாள் வழிபாடு செய்வதும் ஏகாதசி திதி நாளில், ஐந்து பேருக்கோ உங்களால் முடிந்த அளவுக்கோ ஏதேனும் உணவுப்பொட்டலம் வழங்கி வருவதும் பாவங்களையெல்லாம் போக்கும். புண்ணிய பலன்கள் பெருகும்.

    வேங்கடவனை ஏகாதசியிலும் துவாதசியிலும் வேண்டுங்கள். வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீமந் நாராயணர்.

    • தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.
    • ஆடித்தபசு திருவிழா திங்கட்கிழமை நடக்கிறது.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 7-ம் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பூம்பல்லக்கில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    • வேம்புக்கு சக்தி விருட்சம் என்று பெயர் உண்டு.
    • அம்மன் வழிபாட்டில் அவ்வளவு முக்கியத்துவமானது எலுமிச்சை பழம்.

    அரிசி மாவும் வெல்லமும் அல்லது நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து பிசைந்து, நெய் விட்டு விளக்கை ஏற்றுகிற வழிபாடு மாவிளக்கு. ரேணுகா பரமேஸ்வரியை காப்பாற்றிய சேரிமக்கள், வறுமை காரணமாக, ரேணுகா தேவிக்கு தினைமாவும் தேனும் தான் உணவாகக் கொடுத்தனர். சிலசமயம் ''கூழ்'' கொடுத்தும் காத்தனர். அதை நினைவுபடுத்துகிற மாதிரியான வழிபாடுதான் மாவிளக்குப் போடுவது. கூழ் ஊற்றுவது, ஆடி மாதத்தில் வசதி படைத்தவர்களும் எளிமையான கூழை அம்மனுக்கு படைப்பதும் பிரசாதமாக பிறருக்கு தந்து தானும் குடிப்பதும் அதை நினைவுபடுதுகிற மாதிரியான வழிபாடுதான்.

    பண்டைக்காலம் முதல் ஆடி மாதம் மருந்துக்கஞ்சி தயாரித்து குடிக்கும் வழக்கம் இருந்தது. அதிமதுரம், ஜீரகம், சின்ன வெங்காயம் திருகடுகு, திப்பிலி குன்னிவேர், உழிஞ்சைவேர், சிற்றாமுட்டி இதை கேப்பையில் (கேழ்வரகு) இட்டு கஞ்சி வைத்து துணிப்பையை பிழிந்து பின் அருந்துவதே மருந்துக்கஞ்சி.

    வேம்பு

    பச்சை வண்ணமானவள், பராசக்தி எப்போதும் பசுமையாகவே காட்சியளிக்கக் கூடியது வேம்பு. அதனால் வேம்புக்கு சக்தி விருட்சம் என்று பெயர் உண்டு. அக்னி வடிவான ரேணுகாதேவி தீயினால் காயம் அடைந்த போது அவளுக்கு மருந்தாகவும், ஆடையில்லாமல் அவள் தவித்த போது அவளது உடையாகவும் இருந்து உதவியது வேம்பு.

    மஞ்சளைப் போலவே வேப்பிலையும் கிருமிகளை ஓட்டி நோய் நீக்கும் தன்மை உடையது. ரேணுகாம்பாளுக்கு உதவிய சேரி பெண், மஞ்சளும் வேப்பிலையும் சேர்த்து அரைத்து தீக்காயத்தை ஆற்ற பயன்படுத்தினாளாம். அதனால்தான் அம்மன் விழாவில் வேம்பும், மஞ்சளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    எலுமிச்சை

    எலுமிச்சை மாலை சாத்தப்படாத மாரியம்மன் கோவில்களோ, எலுமிச்சை தீபம் ஏற்றப்படாத காளி, துர்க்கை, மாரியம்மன் சன்னதிகளோ இருக்காது எனக்கூறலாம். அம்மன் வழிபாட்டில் அவ்வளவு முக்கியத்துவமானது எலுமிச்சை பழம். துர்சக்திகளை தூரவிரட்டுகிற சக்தி எலுமிச்சைக்கு உண்டு. அது மட்டுமல்ல அம்பிகையோட அம்சம் எலுமிச்சை பழத்திலும் கலந்துள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு. பொதுவாகவே குளிர்ச்சியான பார்வையும், வெப்பமான திருமேனியும் உடையவள், கனிவான அருளை நமக்கு வழங்குகிற அம்பிகையோட மேனி வெப்பத்தைக் குறைத்து அவளைக் குளிர்விக்க சாற்றப்படுவதுதான் எலுமிச்சைக்கனி மாலை.

    • அம்மனை ஆடி மாதம் விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்கள் பறந்தோடும்.
    • ஆடி மாதம் இந்த போற்றியை சொன்னால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஓம் அன்னையே போற்றி

    ஓம் அன்னை மாரியே போற்றி

    ஓம் அக்கினி சட்டி வளர்ந்தாய் போற்றி

    ஓம் அகிலம் ஆண்ட ஈஸ்வரியே போற்றி

    ஓம் அம்மை முத்தின் மூலமே போற்றி

    ஓம் அபிராமி அன்னையே போற்றி

    ஓம் அஷ்டலட்சுமியும் நீயே போற்றி

    ஓம் ஆயிரம் கண்ணுடை போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி

    ஓம் இமயத்தரசியே போற்றி

    ஓம் இளநீர்ப் பிரியை போற்றி

    ஓம் ஈஸ்வரன் துணைவி போற்றி

    ஓம் ஊஞ்சல் விழா உமையே போற்றி

    ஓம் ஊத்துக்காடு அன்னையே போற்றி

    ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஐயப்பன் மாதா போற்றி

    ஓம் ஓங்காரப்பெருமாளே போற்றி

    ஓம் கனக துர்க்கா போற்றி

    ஓம் கன்னி வல்லித்தாயே போற்றி

    ஓம் கன்னிகா பரமேஸ்வரி போற்றி

    ஓம் கருமாரித்தாயே போற்றி

    ஓம் கங்கா தேவி தாயே போற்றி

    ஓம் கன்னியாகுமரியே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கண்ணின் மணியே போற்றி

    ஓம் கன்னபுரத்தாளே போற்றி

    ஓம் கலைமகளும் நீயே போற்றி

    ஓம் கரகத்தழகியே போற்றி

    ஓம் காத்யாயன்யளே போற்றி

    ஓம் காயத்திரி தேவி நீ போற்றி

    ஓம் காசி விசாலாட்சி போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் குங்கும அர்ச்சனை பிரியை போற்றி

    ஓம் கூஷ்மாண்டினி தேவியே போற்றி

    ஓம் காஞ்சி காமாட்சி போற்றி

    ஓம் கோட்டை மாரி போற்றி

    ஓம் கோபிநாதன் தங்காய் போற்றி

    ஓம் கவுமாரி கவுரி போற்றி

    ஓம் சமயபுர சக்தி போற்றி

    ஓம் சங்கரன் துணைவி போற்றி

    ஓம் சர்வேஸ்வரி போற்றி

    ஓம் சந்திரகண்டினி போற்றி

    ஓம் சாம்பிராணி வாசகி போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரி போற்றி

    ஓம் சிவகாம சுந்தரி போற்றி

    ஓம் சவுபாக்கியம் அருள்வாய் போற்றி

    ஓம் கொடியேற்றம் விழைவாய் போற்றி

    ஓம் ஞானப் பிரசன்னாம்பிகை போற்றி

    ஓம் தட்சிணி தேவி போற்றி

    ஓம் தண்டினி தேவி போற்றி

    ஓம் தாழங்குறைக்கூடை தழைப்பாய் போற்றி

    ஓம் திண்டி நகருறை தேவி போற்றி

    ஓம் திருவிளக்கின் ஒளியே போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருமகள் உருவே போற்றி

    ஓம் திருமாலழகன் தங்காய் போற்றி

    ஓம் துர்க்கையும் நீயே போற்றி

    ஓம் துலக்கணத்தீஸ்வரி போற்றி

    ஓம் தெப்போற்சவம் விழைந்தனை போற்றி

    ஓம் நல்லமுத்துமாரி போற்றி

    ஓம் நவகாளி அம்மா போற்றி

    ஓம் நவதுர்க்கா தேவியே போற்றி

    ஓம் நாரணார் தங்காய் போற்றி

    ஓம் நாககுடைக்கொள் நாயகியே போற்றி

    ஓம் நான்முகி போற்றி

    ஓம் நாராயிணி போற்றி

    ஓம் நீலிகபாலி போற்றி

    ஓம் பர்வதபுத்திரி போற்றி

    ஓம் நீலாம்பிகை போற்றி

    ஓம் பவானி தேவி போற்றி

    ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி

    ஓம் பவளவாய் கிளியே போற்றி

    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மராம்பிகை போற்றி

    ஓம் புவனேஸ்வரி போற்றி

    ஓம் பூச்சொறிதல் பெற்றனை போற்றி

    ஓம் பெரியபாளையத்தம்மை போற்றி

    ஓம் மணிமந்தர சேகரி போற்றி

    ஓம் மஹேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள ரூபணி போற்றி

    ஓம் மஞ்சள் நீராடல் மகிழ்ந்தனை போற்றி

    ஓம் மகிஷா சூரமர்த்தினி போற்றி

    ஓம் மஞ்சள் மாதா போற்றி

    ஓம் மாளி மகமாயி போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் மாங்காடு போற்றி

    ஓம் மாசி விழா மாதா போற்றி

    ஓம் மாவிளக்குப் பிரியை போற்றி

    ஓம் மீனாட்சித் தாயே போற்றி

    ஓம் முண்டினி தேவி போற்றி

    ஓம் முனையொளி சூலி போற்றி

    ஓம் முக்கண்ணி போற்றி

    ஓம் முக்கோண சக்கர மூலமே போற்றி

    ஓம் மூகாம்பிகையே போற்றி

    ஓம் ராஜராஜேஸ்வரி போற்றி

    ஓம் லலிதாம்பிகை போற்றி

    ஓம் வஜ்ரமணித்தேராள் போற்றி

    ஓம் வளம் சேர்க்கும் தாயே போற்றி

    ஓம் விராட் புரவி மலி போற்றி

    ஓம் விஷ்ணு துர்க்கா போற்றி

    ஓம் வேப்பம்பால் உண்டவளே போற்றி

    ஓம் வேப்பிலைக்காரியே போற்றி

    ஓம் வேலவனுக்கு வேல் தந்த வித்தகி போற்றி.

    • ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம்.
    • மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம்.

    ஆடி மாத வெள்ளி கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக்காலமாக இதனை கருதுவர். ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்குமாடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.

    உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாக தரும் மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகள் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி செவ்வாய் என்பது, கோவில்களுக்கு சென்று அம்மனை முறைப்படி வழிபட வேண்டிய தினம். ஆடி வெள்ளி என்பது, நம் முன்னோர்களோடு சேர்த்து அம்மனை வழிபடவேண்டிய தினம். ஆடி ஞாயிறு என்பது, அன்னதானத்திற்கு உகந்த தினம்.

    ஆடி மாதம் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுவார் என்பது ஐதீகம். முதன்மையான சிறப்பு ஆடி மாதம் அம்மனுக்கு உரியது. ஆடி மாத அம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று. ஆடி மாதம்முழுவதும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட உகந்தது. மாரியம்மன் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தான்.

    பக்தர்கள் கூட்டத்திற்கு எப்போதும் குறைவில்லை என்றாலும், ஆடி வெள்ளிகிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காது. பக்தர்கள் வேண்டியதை நிறைவேற்றும் கோட்டை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். அன்றையதினம் மாரியம்மனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து பக்தி பரவசம் அடைவர்.

    இந்நாளில் அம்மனிடம் என்ன வேண்டினாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி, அங்கு ஊழியம் செய்து, நேற்றிக்கடனை நிறைவேற்றலாம். உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள் , கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி குணமாகின்றனர். வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    • தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
    • ஆடி மாதம் மிக சிறப்பானது.

    பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது

    அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன

    வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிக சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்

    பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்றனர். "முளைப்பாலிகை" என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாக சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சை பயிறு போன்ற விதைகளை தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து அங்கு வைத்து வளர்ப்பார்கள்

    ஒவ்வொரு நாள் இரவும் அதனை தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பார்கள்

    முளைப்பாரி எடுப்பதால் கிராமத்திலுள்ள நீர்நிலைகள் நிறையும் என்பதும், நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை

    மேலும் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் முளைப்பாரி எடுக்கும் வைபவம் கருதப்படுகிறது

    முளைப்பாரியில் பயிர்கள் செழித்து வளர்வதைப் போலவே, தங்கள் வம்சமும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவும் முளைப்பாரி வைபவம் கொண்டாடப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
    • அம்மன் வழிபாடு நம் துன்பங்களை போக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.

    * ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

    * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    * ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    * அம்மனை வழிபடும் போது மறக்காமல் 'லலிதாசகஸ்ர நாமம்' சொல்ல வேண்டும்.

    * ஆடி மாதத்தை "பீடை மாதம்" என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், "பீட மாதம்" என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

    * ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    * ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    * பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    * ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    * பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

    * ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    • மிகவும் சக்திவாய்ந்த இந்த தீபத்தை நீங்களும் ஏற்றி பலன் அடையுங்கள்.
    • மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் உண்டு.

    பொதுவாகவே மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான ஒரு நிகழ்வாகும். மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் உண்டு. அதுவும் ஆடி மாதம் மாவிளக்கு போடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். ஆடி மாதம் மாவிளக்கு போடுவதால் மழை பொழியும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    ஆடி மாதத்தில் அம்மனுக்கு மிகவும் விசேஷமான விளக்காக மாவிளக்கு கருதப்படுகிறது. பக்தர்கள் ஏதாவது தவறு செய்யும் பொழுது அம்மனிடம் மன்னிப்பு கேட்பதற்கு மாவிளக்கு போட்டு மனதார மன்னிப்பு கேட்பார்கள். உடனே அம்மனும் மனமிறங்கி மன்னித்து அருள்வதாக புராண வரலாறுகள் உண்டு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மகாலட்சுமிக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் சுகபோக வாழ்வு அமையும்.

    மாவிளக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்: பச்சரிசி – கால் கிலோ, வெல்லம் 100 கிராம், ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன், சுக்குப்பொடி 1/2 டீஸ்பூன், பச்சை கற்பூரம் சிறிதளவு.

    மாவிளக்கு செய்யும் முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வெயிலில் அல்லது மின்விசிறி காற்றில் உலர வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி மாவுடன் வெல்லம் பாகு காய்ச்சி ஊற்றலாம் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு சேர்க்கலாம். அதன் பின் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளலாம். இதை சேர்த்தால் தெய்வீக வாசமாக இருக்கும். எல்லாம் ஒன்றாக கலந்துவிட்டு தேவையான அளவிற்கு நெய் சேர்த்து உருண்டை பிடிக்க வேண்டும்.

    உருண்டையாக இல்லாமல் ஒரு உருளையாக தட்டி வைத்துக் கொண்டால் தீபம் செய்வதற்கு வசதியாக இருக்கும். உருளை வடிவத்தில் கொண்டு வந்து பின் இரண்டாக ஆக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் மாவிளக்கு ஒற்றையில் போடக்கூடாது. 2 தீபங்கள் அல்லது 4 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது நெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டும். ஏனென்றால் இதை நிவேதனமாக சாப்பிட இருப்பதால் வேறு எண்ணெய்களை உபயோகிக்கக்கூடாது.

    தனித்தனியாக இப்போது தீப வடிவில் மேலே குழியாக கைவிரல் வைத்து அழுத்திக் கொள்ளுங்கள். சந்தனம் குங்குமம் இட்டு, அதில் நெய் ஊற்றி 2 திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும். மாவிளக்கு ஏற்றுவதால் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக நீங்குவதை நீங்களே உணரலாம். மிகவும் சக்திவாய்ந்த இந்த தீபத்தை நீங்களும் ஏற்றி பலன் அடையுங்கள்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சிங்கம்புணரி அருகே காமாட்சி பரமேஸ்வரி கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • மழுவேந்தி கருப்புசாமி கோவிலில் ஆடி களரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி அருகே வேட்டையன் பட்டியில் உள்ள காமாட்சி- பரமேஸ்வரி கோவிலில் ஆடி திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் சிம்மக்கொடி ஏற்றி விழா தொடங்கியது. அதை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

    விழாவில் வருகிற 29-ந் தேதி அன்னைக்கு ஊஞ்சல் தரிசனமும் நடக்கிறது. பக்தர்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு நிகழ்வும், 2-ந் தேதி திருவிளக்கு பூஜை, முளைப்பாரி விழாவும் நடை பெறும் அதைத் தொடர்ந்து 3-ந் தேதி அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

    விழா ஏற்பாடுகளை வேட்டையன் பட்டி விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மழுவேந்தி கருப்புசாமி கோவிலில் ஆடி களரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    விழாவில் நேற்று 6 பேர் அரிவாளை சுமக்க அதன் மேல் நின்று பக்தர் ஒருவர் அருள்வாக்கு கூறினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இரவு பால்குடம், கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவிலில் அன்னதானம் நடந்தது.

    • கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
    • எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. அதில் எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்:

    2 விளக்கு- குடும்பம் மேன்மைபெறும்.

    3 விளக்கு- எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.

    4 விளக்கு- நற்கல்வி, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

    5 விளக்கு- விநாயகர் அருள் கிடைக்கும்.

    6 விளக்கு- நோய்கள் குணமாகும்.

    7 விளக்கு- திருமணத்தடை நீங்கும்.

    8 விளக்கு- மாங்கல்ய பலம் கூடும்.

    9 விளக்கு- நவக்கிரக பிணிகள் நொடியில் அகலும்.

    10 விளக்கு- தொழில் மேன்மை பெறும். கடன் தொல்லைகள் அகலும்.

    11 விளக்கு- செய்தொழிலில் லாபம் கிட்டும். போட்டியில் வெற்றி வசப்படும்.

    12 விளக்கு- ஜென்மராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

    13 விளக்கு- பில்லிசூனியபாவம் விலகும்.

    14 விளக்கு- குலதெய்வபலம், சந்தான பலன் கிடைக்கும்.

    15 விளக்கு- வழக்கில் வெற்றி வசப்படும்.

    16 விளக்கு- வாழ்வில் 16 செல்வங்களும் கிட்டும்.

    17 விளக்கு- வாகனம், வண்டி யோகம் கிடைக்கும்.

    27 விளக்கு- நட்சத்திர தோஷம் நீங்கும்.

    48 விளக்கு- தொழில் வளரும், பயம் நீங்கும்.

    108 விளக்கு- நினைத்த காரியம் நடக்கும்.

    508 விளக்கு- தீராத திருமண தோஷங்கள் அகலும்.

    1008 விளக்கு- சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

    • 1-ந்தேதி இரவு 12 மணிக்கு சாம கொடை விழா நடக்கிறது.
    • 2-ந்தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    கோவை சங்கனூர்-நல்லம்பாளையம் ரோட்டில் ஞானமூர்த்தீஸ் வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 20-ம் ஆண்டு கொடை விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முகூர்த்தகால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் பக்தர்கள் சூழ முகூர்த்த கால் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு 501 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பட்டி மன்றம் நடக்கிறது. 31-ந் தேதி இரவு வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் அம்மனுக்கு குடியழைப்பு பூஜை மற்றும் மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, மதிய கொடை விழா மற்றும் அம்மன் திருவீதி உலா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் அழைப்பு நடக்கும். அன்று இரவு 12 மணிக்கு சாம கொடை விழா மற்றும் வான வேடிக்கை நடக்கிறது. 2-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    • ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற்றது, இதையொட்டி நிறைவு நிகழ்ச்சியாக புஷ்பயாகம் நேற்று நடைபெற்றது. இதை யொட்டி ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×