search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபம்"

    • ஆடிக் கிருத்திகையிலோ, கார்த்திகை மாதம் கிருத்திகை தீபத்தன்றோ தொடங்க வேண்டும்.

    கிருத்திகை விரதம் அனுஷ்டிக்க விரும்புபவர்கள் ஆடிக் கிருத்திகையிலோ, கார்த்திகை மாதம் கிருத்திகை தீபத்தன்றோ தொடங்க வேண்டும்.

    காலை முதல் விரதம் இருந்து மாலையில் சூரிய அஸ்தமனம் முடியும் போது வீட்டில் விளக்குகளால் அலங்கரித்து கிழக்கு வாசலில் தோன்றும் கிருத்திகை நட்சத்திரத்தைத் தரிசனம் செய்து பிறகு முருகப் பெருமானையும் மகாலட்சுமியையும் வழிபட்டு உணவு அருந்தலாம்.

    • தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    • மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    நீல நிற சேலை அணிந்தும் தீபமிடலாம்.

    அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.

    மற்ற நாட்களில் நீலநிற சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும்.

    பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.

    சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.

    சிவப்பு சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும்.

    பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.

    வெள்ளை சேலையை சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம்.

    வெள்ளை சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.

    வெள்ளை சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.

    திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும்

    திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம்.

    அவ்வாறு வழிபடுகையில் இன்னென்ன தெய்வங்களுக்கு இன்னென்ன தீபங்கள்

    ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

    • லிங்கபைரவி சந்நிதியில் பெளர்ணமி அபிஷேகம்.
    • நந்தி முன்பு லிங்கபைரவி மஹா ஆரத்தியும் நடைபெற்றது.

    கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ 26) ஒட்டுமொத்த ஈஷாவும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்தது.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, சூரிய குண்டம், நந்தி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும், பொதுமக்களும் அகல் விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். 

    மேலும், சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 24வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு நாத ஆராதனையும் நடைபெற்றது.

    லிங்கபைரவி சந்நிதியில் பெளர்ணமி அபிஷேகமும், அதை தொடர்ந்து நந்தி முன்பு லிங்கபைரவி மஹா ஆரத்தியும் நடைபெற்றது.

    • உடல் முழுவதும் தீப விளக்கேற்றி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
    • முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பதஞ்சலி யோகா மையம் சார்பில் பள்ளி மாணவர்கள் பாத விருச்சிகாசனம், விளக்கா சனம் முறையில் யோகா சனம் செய்து உடல் முழுவ தும் விளக்குகளை ஏற்றி கார்த்திகை தீபத்திருநாளை நடத்தி சாதனை படைத்தனர்.

    எட்டாம் வகுப்பு மா ணவர் நரேஷ், ஆறாம் வகுப்பு மாணவர்கள் ரசூல் மற்றும் அன்பரசன் ஆகி யோர் உடல் முழுவதும் ஆச னம் செய்து விளக்கு களை ஏற்றி சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பயிற்சி ஆசிரியர் நீராத்தி லிங்கம் தலைமையில் முத்து வேல், வீர சோழ திருமாவ ளவன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் உட்பட முக் கிய பிரமுகர்கள் பங்கேற்று சாதனையை பாராட்டினர்.

    • ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
    • ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும்.

    ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

    செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும்.

    உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர்.

    ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன.

    என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம்.

    நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே.

    ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும்.

    கோவில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

    • கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
    • குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் கிடைக்கும். வாழ்வில் வளம் பெருகும்.

    கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

    தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும்.

    மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும்.

    திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு

    திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.

    மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும்.

    குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

    • 1000 வேப்பெண்ணெய் தீபங்கள் = 1 இலுப்பெண்ணெய் தீபம்
    • இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும்போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.

    1000 நெய் தீபங்கள் = 1 தேங்காய் எண்ணெய் தீபம்

    1000 தேங்காய் எண்ணை தீபங்கள் = 1 நல்லெண்ணை தீபம்

    1000 நல்லெண்ணை தீபங்கள் = 1 விளக்கெண்ணெய் தீபம்

    1000 விளக்கெண்ணெய் தீபங்கள் = 1 வேப்பெண்ணெய் தீபம்

    1000 வேப்பெண்ணெய் தீபங்கள் = 1 இலுப்பெண்ணெய் தீபம்

    தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும்,

    குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.

    நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    • தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும்.
    • சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.

    குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

    தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும்.

    ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு

    திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம்,

    சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக,

    பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக  தீபம் ஏற்ற வேண்டும்.

    • கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
    • அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

    கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

    ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க

    அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி தாலாட்டினர்.

    சிவபெருமான் பிராட்டியாருடன் சரவண பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க,

    ஆறு உருவங்களும் ஒரு உருவாய் ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.

    அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

    சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி "உங்களுக்கு மங்களம் உணடாகுக.

    உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தை சூட்டுகிறோம்.

    உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டவதாகு"

    என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாயினும்,

    அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

    • மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
    • இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவது.

    மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வற்றில் தீபத் திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை விரதம் மிக முக்கியமானதாகும்.

    இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    நாரத மகரிஷி 12 ஆண்டுகள் இந்த விரதமிருந்ததால், எல்லா முனிவர்களுக்கும் மேலான பதவி பெற்றார்.

    இந்த நாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டி கவசம்,

    சண்முகக் கவசம் படிப்பதும், கந்தபுராணம் கேட்பதும் நல்லது.

    • தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
    • சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.

    தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

    கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.

    இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

    கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்ரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றி குறிப்புகள் உள்ளன.

    பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.

    இதுதான் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். தீபங்கள் நமது கர்மவினைகளை நீக்கக் கூடியவை.

    சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.

    தீபங்கள் தீய சக்திகளை அண்டா வண்ணம் காக்கக் கூடியவை. வேண்டும் பலனைத் தரக்கூடியவை.

    சிவத்தலத்தில் தீபம் ஏற்றுபவரும், ஏற்ற உதவியவரும் சிவலோக பதவி அடைவார்கள் என்பது திண்ணம்.

    தொடர்ந்து தீபம் ஏற்றியவர்களின் பரம்பரையில் யாருக்கும் கண்பார்வை குறைபாடு வராது.

    மிகுந்த புண்ணியம் சேரும்.

    சிவன் சந்நிதியில் அணைய இருந்த தீபத்தை தன்னை அறியாமல் தூண்டி விட்ட எலி மறுவிறவியில் மகாபலி சக்கரவரத்தியாக பிறந்தது என்றால் தீபத்தின் பெருமையினை நாம் உணரலாம்.

    திருக்கார்த்திகை திருநாளன்று அவரவர் இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருளை பெறலாம்.

    ஏற்றப்படும் தீபம் சிவபெருமானின் வடிவம் ஆகும்.

    எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை தீப வடிவில் வழிபடும் நாள் இந்த கார்த்திகை தீபத்திருநாள்.

    • கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
    • இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்ப ட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

    அந்த உற்சவத்தின் போது, ராமர் கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். அந்த வகையில் 2017 ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019 ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், கடந்தாண்டு 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது.

    இந்த ஆண்டு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் உலக சாதனை நிகழ்ச்சி போல 24 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளது. இது ராமர் கோவில் சுற்று பகுதியில் 51 இடங்களில் ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.

    இந்தப் பணிக்காக 25 ஆயிரம் தன்னார்வலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு திரண்டு உள்ளார்கள்.

    இதில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றுவதே இலக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அதில் சுமார் 3 லட்சம் தீபங்கள் ஆங்காங்கே அணைந்தாலும் 21 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தீப உற்சவத்தில் முந்தைய சாதனைகளை முறியடிக்க உத்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்படஉள்ளது. இதனை லோகியா அவத் பல்கலைக்கழகத்தினர் முன்னின்று கவனித்து வருகின்றனர். இந்த தீப உற்சவத்திற்காக ரூ.3கோடி செலவிடப்படுகிறது.

    இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    ×