என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமாட்சி பரமேஸ்வரி கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
    X

    காமாட்சி பரமேஸ்வரி கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம்

    • சிங்கம்புணரி அருகே காமாட்சி பரமேஸ்வரி கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • மழுவேந்தி கருப்புசாமி கோவிலில் ஆடி களரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி அருகே வேட்டையன் பட்டியில் உள்ள காமாட்சி- பரமேஸ்வரி கோவிலில் ஆடி திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் சிம்மக்கொடி ஏற்றி விழா தொடங்கியது. அதை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

    விழாவில் வருகிற 29-ந் தேதி அன்னைக்கு ஊஞ்சல் தரிசனமும் நடக்கிறது. பக்தர்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு நிகழ்வும், 2-ந் தேதி திருவிளக்கு பூஜை, முளைப்பாரி விழாவும் நடை பெறும் அதைத் தொடர்ந்து 3-ந் தேதி அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

    விழா ஏற்பாடுகளை வேட்டையன் பட்டி விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மழுவேந்தி கருப்புசாமி கோவிலில் ஆடி களரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    விழாவில் நேற்று 6 பேர் அரிவாளை சுமக்க அதன் மேல் நின்று பக்தர் ஒருவர் அருள்வாக்கு கூறினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இரவு பால்குடம், கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவிலில் அன்னதானம் நடந்தது.

    Next Story
    ×