search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வின்"

    • இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
    • இதன் மூலம் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 ரன்னில் இருந்து தப்பிய கிராலி 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
    • பேர்ஸ்டோ 35 பந்தில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இடம் பிடித்தார்.

    ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்தின் ஸ்கோர் 8 ரன்னாக இருக்கும்போது ஆகாஷ் தீப் பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் கிராலி க்ளீன் போல்டானார். ஆனால் நோ-பால் என நடுவர் அறிவிக்க கிராலி அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    அதன்பின் கிராலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிராஜ் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் கிராலி தொடர்ந்து மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் சிராஜ் 19 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இங்கிலாந்து அணி 47 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ஆகாஷ் தீப் பந்தில் டக்கெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் வீசிய அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்னில் க்ளீன் போல்டானார். 4 ரன்னில் தப்பிய கிராலியை 42 ரன்னில் வீழ்த்தினார்.

    அப்போது இங்கிலாந்து 57 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இந்தஜோ ஓரவிற்கு நிலைத்து நின்று விளையாடியது. பேர்ஸ்டாவ் விரைவாக ரன் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    பென் ஸ்டோக்ஸ்

    22-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 35 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.

    5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து 24.1 ஓவரில் விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது.

    ஜோ ரூட் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
    • 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.

    சென்னை:

    சென்னை:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின். சென்னையைச் சேர்ந்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்டத்தில் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் அஸ்வின் 500 விக்கெட் கைப்பற்றிய சாதனையை படைத்தார்.

    37 வயதான அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.

    இந்நிலையில், 500-க்கும், 501-வது விக்கெட்டுக்கும் இடையே அஸ்வினுக்கு நிறைய நடந்துவிட்டது என்று அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அஸ்வினின் 500-வது விக்கெட்டை எதிர்நோக்கி இருந்தோம். அது நிறைவேறாத நிலையில் விசாகப்பட்டினம் போட்டியிலும் 500-வது விக்கெட் கிடைக்கவில்லை. அதனால் 499 விக்கெட்டை வீட்டில் இனிப்பை பகிர்ந்து கொண்டாடினோம். 500-வது விக்கெட் அப்படியே அமைதியாக நடந்தது.

    500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது. அது எங்கள் வாழ்க்கையில் நீண்ட நெடிய 48 மணி நேரமாகும். 500 விக்கெட் வீழ்த்தியது அபாரமான சாதனையாகும். உங்களை (அஸ்வின்) நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
    • டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் எடுத்த 9-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    இந்திய அணியின் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    • அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜூரேல் 46 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ஸ்கோர் 408 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 37 ரன்னில் வெளியேறினார்.

    ஜுரேல்

    அடுத்து பும்ரா களம் இறங்கினார். அறிமுக வீரர் ஜுரேல் அரைசதம் நோக்கி சென்றார். ஆனால் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரேஹன் பந்தில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அப்போது இந்திய 415 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா கிடைத்தது வரை லாபம் என்ற வகையில் அதிரடியாக விளையாடினார். இன்று பந்து நன்றாக அவரது பேட்டில் பட ரன்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் இந்தியா 450 ரன்களை நோக்கி சென்றது. ஆனால் 26 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹன் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஜடேஜா 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் அவுட்.
    • அறிமுக வீரர் ஜுரேல் 31 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோரின் சதங்கள், சர்பராஸ் கான் அரைசதத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 112 ரன்னில் ஆட்டம் இழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ஜுரேல் முதலில் திணறினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார். அஸ்வின் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்த ஜோடி அரைசதம் ரன்களை கடந்தது.

    மேலும், இன்றைய 2-வது நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா தற்போது 7 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்துள்ளது. ஜுரேல் 31 ரன்னுடனும், அஸ்வின் 25 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

    • முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன்.
    • எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்நிலையில் எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதே விதி என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அஸ்வினுடன் நிறைய ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்துவார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன். பரவாயில்லை எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 முதல் 8 விக்கெட்டுகள் வரை எடுத்தால் 5 சாதனைகளை படைப்பார். அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    நாளை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரரான பகவத் சந்திரசேகரின் (95 விக்கெட்டுகள்) சாதனையை அஸ்வின் (93 விக்கெட்டுகள்) முறியடிப்பார்.

    4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 97 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார். முன்னதாக இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை கடந்த 2006 -ம் ஆண்டு கைப்பற்றினார்.

    அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டால் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்துவார்.

    இதேபோன்று இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை அஸ்வின் (தற்போது வரை 34 முறை) கைப்பற்றினால் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே (35 முறை) சாதனை தகர்ப்பார்.

    7 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2-வது வீரர் அஸ்வின்(93) ஆவார். முதல் இடத்தில் ஆண்டர்சன் (139 விக்கெட்டுகள்) உள்ளார்.

    8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை எடுத்த கும்ப்ளேவை (350) பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை அஸ்வின்(343) பிடிப்பார்.

    • சமீபத்தில் நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பங்கேற்றார்.
    • திறமைகள் இருந்தும் சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிபெறும் அணியாக இந்தியா திகழ்கிறது என்றார்.

    புதுடெல்லி:

    தனியார் விளையாட்டு சேனல் நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பங்கேற்றார்.

    அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா பயணம் திட்டமிட்டபடி அமையவில்லை. இந்திய அணி முதல் டெஸ்டில் அதிக வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவில் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை அந்த அணி இழந்தது. ஏராளமான திறமைகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இந்தியா திகழ்கிறது. சமீபத்திய காலங்களில் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில் அதிகம் வெற்றி பெறவில்லை. அவர்கள் மேலே வர தவறுகிறார்கள். திறமைகள் மற்றும் திறன்கள் அனைத்தையும் கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக சாதித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    வாகனின் இந்தக் கருத்துக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    சர்வதேச கிரிக்கெட்டில், குறிப்பாக டெஸ்ட் வடிவத்தில் இந்தியா எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்து சிரிக்க வைக்கிறது.

    ஆம், நாங்கள் பல ஆண்டுகளாக ஐ.சி.சி. கோப்பையை வென்றதில்லை. விளையாட்டின் பவர் ஹவுஸ் என்று இந்தியாவை குறிப்பிடுகிறோம். இந்திய டெஸ்ட் அணி வெளிநாடுகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. நாங்கள் பல சிறந்த முடிவுகளைப் பார்த்திருக்கிறோம்.

    விளையாட்டின் நீண்ட வடிவத்தில் வெளிநாடுகளில் இந்திய அணி வியக்கத்தக்க வகையில் செயல்பட்டுள்ளது. நல்ல மன உறுதியும், மனத்திறனும் கொண்ட ஒரு நல்ல கிரிக்கெட் அணி எங்கிருந்தும் மீண்டும் களமிறங்க முடியும் என்பதுதான் உண்மை. நாங்கள் இரு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோற்றோம். நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் ஒரு டெஸ்ட் தொடரின்போது மீண்டும் திரும்புவது எப்போதும் சாத்தியமாகும் என தெரிவித்தார்.

    • இந்திய அணியில் ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • தென்ஆப்பிரிக்கா அணியில் மகாராஜ், லுங்கி நிகிடி இடம் பிடித்துள்ளனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீல் எல்கர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் அஸ்வின், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம:-

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.

    தென்ஆப்பிரிக்கா அணி:

    டீன் எல்கர், மார்க்கிராம், ஜோர்சி, ஸ்டப்ஸ், பெடிங்காம், வெர்ரைன், யான்சென், மகாராஜ், ரபாடா, பர்கர், லுங்கி நிகிடி.

    • முதல் டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை.
    • ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தான் ஜடேஜா இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த 26 ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது.

    இதில், டீன் எல்கர் அதிகபட்சமாக 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸ் செய்தது. ஆனால், இதில், தென் ஆப்பிரிக்கா பவுலர்களின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக விராட் கோலி மட்டுமே 76 ரன்கள் எடுக்க, இந்திய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

    இதுவரையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒருமுறை கூட கைப்பற்றவில்லை. ஆனால், இந்த முறை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலேயும் இந்திய அணி கோட்டைவிட்டது. 2-வது போட்டியில் எப்படியும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக இடம் பெறாத ரவீந்திர ஜடேஜா, 2-வது போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தான் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஜடேஜா தற்போது கேப்டவுனில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    • ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது.
    • அந்த பட்டியலில் 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது. அதில் தலைசிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் பட்டியல் இருந்தது. அதில் ஷகிப் அல் ஹசன், டிராவிஸ் ஹெட், சமித் பாட்டீல், ரிச்சி பெனாட், டேனியல் வெட்டோரி மற்றும் சர் கேரி சோபர்ஸ் போன்ற சில பெயர்கள் பட்டியலில் இருந்தது.

    இந்த பட்டியலில் அஸ்வின், அக்சர் படேல், 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    ×