search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australia Pakistan series"

    • ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது.
    • அந்த பட்டியலில் 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது. அதில் தலைசிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் பட்டியல் இருந்தது. அதில் ஷகிப் அல் ஹசன், டிராவிஸ் ஹெட், சமித் பாட்டீல், ரிச்சி பெனாட், டேனியல் வெட்டோரி மற்றும் சர் கேரி சோபர்ஸ் போன்ற சில பெயர்கள் பட்டியலில் இருந்தது.

    இந்த பட்டியலில் அஸ்வின், அக்சர் படேல், 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் பாக்சிங் டே என்று அழைக்கப்படும் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும்.

    ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் (டிசம்பர் 26-ந்தேதி) பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் நாளை 'பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.

    ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது, அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கம் இருந்தது. அதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்த ஆண்டு மெல்போர்னில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்டில் பாகிஸ்தானுடன ஆஸ்திரேலியா மோதுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி, கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கினர். அவர்களின் குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×