search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்ட்: 5 சாதனைகளை குவிக்க விருக்கும் அஸ்வின்
    X

    இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்ட்: 5 சாதனைகளை குவிக்க விருக்கும் அஸ்வின்

    • அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 முதல் 8 விக்கெட்டுகள் வரை எடுத்தால் 5 சாதனைகளை படைப்பார். அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    நாளை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரரான பகவத் சந்திரசேகரின் (95 விக்கெட்டுகள்) சாதனையை அஸ்வின் (93 விக்கெட்டுகள்) முறியடிப்பார்.

    4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 97 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார். முன்னதாக இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை கடந்த 2006 -ம் ஆண்டு கைப்பற்றினார்.

    அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டால் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்துவார்.

    இதேபோன்று இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை அஸ்வின் (தற்போது வரை 34 முறை) கைப்பற்றினால் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே (35 முறை) சாதனை தகர்ப்பார்.

    7 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2-வது வீரர் அஸ்வின்(93) ஆவார். முதல் இடத்தில் ஆண்டர்சன் (139 விக்கெட்டுகள்) உள்ளார்.

    8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை எடுத்த கும்ப்ளேவை (350) பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை அஸ்வின்(343) பிடிப்பார்.

    Next Story
    ×