search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலகம்"

    • அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
    • இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் 4 ரோடு அருகே பெரமனூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டி தரப்படும் என ஆணைகள் வழங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே இருந்த வீடுகளையும் இடித்து பயனாளிகள் தயாராகினர். ஆனால் 6 மாதமாகியும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை.

    குறிப்பாக அந்த அலுவலக நிர்வாக பொறியாளர், அரசியல் ‌பிரமுகர்களுக்கு மட்டும் வீடுகள் கட்டிக் கொடுப்பதாகவும், மற்றவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க மறுப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

    இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த வீட்டை இடித்து விட்டோம். புதிய வீடும் கிடைக்காததால் வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும், உடனே வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் கூறி அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். வீடுகளை கட்டி தராவிட்டால் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறினார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தும், அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வீட்டுமனை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி
    • தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது.

    பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார். மனுக்கள் வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    அப்போது திட்டுவிளை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினார்கள்‌. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வீட்டுமனை பிரச்சனை இருந்து வந்த நிலையில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மனு அளிக்க வந்த பொதுமக்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த பிறகு கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.

    பாட்டில்களில் என்ன உள்ளது என்பதை குறித்து முகர்ந்து பார்த்து சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள். கார்களில் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பும் டிரைவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்றும் முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்.
    • குறைகள் இருப்பின், மேற்கண்ட கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை (வியாழக்கிழமை) நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் 1 மணி வரை தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1, வல்லம் ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடத்தப்பட உள்ளது.

    ஆகவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் புறநகர் பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், மேற்கண்ட கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
    • போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நடவடிக்கைகள் குறித்து அவினாசியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    பல்வேறு வகையான குற்றங்கள், கைது நடவடிக்கைகள், சமூகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் பற்றி அறிவுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகர்கோவில்:

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 26-ந் தேதி அன்று உள்ளாட்சி அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உறுதிமொழி எடுக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவக்குமார், செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, லூயிஸ், பரமேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.
    • விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இம்மாதம் 30-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை யின் மூலம் 2022-23ஆம் ஆண்டிற்கு " டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது" ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளுவர் திருநாளில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 2022ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது 2023ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது.

    இந்த விருதுக்காக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான உரிய படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.

    பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை இந்த மாதம் 30-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை.
    • ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சநதி க்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள்நேர்காணல் முகாம் கலெ க்டர்அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசி யதாவது:-

    இந்த ஊராட்சியில் கடந்த முறை கணபதிதேவன்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு சாலையை ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட சாலை அமைக்கவும், சிறுதலைக்காடு சாலையை ரூ.14.84 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கவும், கணபதிதேவன்காடு அடப்போடை சாலையை ரூ.14.05 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்றும் பணியையும் வழங்கியுள்ளது.

    அதனை தொடர்ந்து தற்போது ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை, ஆவடைக்கோன் காடு மயான சாலையில் ரூ.27.76 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு ஜல்லி சாலையாக மாற்றுவதற்கும், கணபதி தேவன் காடு மயான கொட்டகையின் கூரை அமைக்கும் பணிக்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும் மூன்று பணிகள் நடைபெறுவதற்கான ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் மாற்றுத்தி றனாளி நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 59,150 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். முகாமில் வருவாய் அலுவலர் ஷகிலா, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், வேளாண் இணை இயக்குனர் அகண்டாராவ், ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சத்தியகலா, தேவி தமிழரசி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி, மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் உதயம் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராஜ், பாஸ்கர் தாசில்தார் ஜெயசீலன் தனி வட்டாட்சியர்கள் ரமேஷ், வேதையன், மாதவன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானார் வந்து மனு கொடுத்து செல்கி றார்கள். மற்ற நாட்களிலும் பொது மக்களும், அரசியல் கட்சியினரும் மனு அளிக்க வருகிறார்கள்.

    மனு அளிக்க வரும் பொது மக்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடந்து வரு வதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அலுவலகத்தின் முன் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரு பவர்களை சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் பெண் போலீ சாரும் ஈடுபட்டு உள்ளனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்க ளது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது. மேலும் உணவு அருந்துவதற்கும் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

    இந்த நிலையில் போலீ சாருக்கு கலெக்டர் அலுவல கத்தின் முன் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதி யில் காலியாக இருந்த அறை ஒன்று போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடு படும் போலீசார் அந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இன்று காலை முதல் அந்த அறை யில் போலீசார் தங்களது உடமைகளையும், பொருட்களையும் வைத்தி ருந்தனர். மழை மற்றும் வெயில் நேரங்களில் இந்த அறை எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்
    • ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது. 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும்.

    14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ராணி தோட்டத்தில் உள்ள அரசுபோக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கினார். செயல் தலைவர் லட்சுமணன் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் லியோ, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி சுந்தர்ராஜ், நிர்வாகிகள் ஸ்டீபன் ஜெயக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், சுரேஷ்குமார் ஆகியோர் முற்றுகை போராட்டம் குறித்து பேசினர்.

    இதில் நிர்வாகிகள் மனோஜ், ஜஸ்டின், அசோக் குமார், தோமஸ், சேவியர்ஜார்ஜ், சிங்காரன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்தார்.
    • நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது.

    கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.

    இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, மாநில ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவி ந்தன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் உமர் முகமத், நாகை பாராளுமன்ற பொறுப்பாளர் அப்பு அகஸ்டீன் அற்புதராஜ், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் அலாவூதீன், தொகுதி தலைவர் பிஸ்மி கார்த்திக், செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், கமலகண்ணன், ஒன்றிய தலைவர்கள் சந்திரமோகன், மதன் குமார், பொருளாளர் ராஜா, நகர தலைவர் மகேஷ்குமார், நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • புங்கனூரில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
    • அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கம் சட்டமன்ற தொகு–தியை உள்ளடக்கிய மணி–கண்டம் ஊராட்சி ஒன்றி–யத்திற்குட்பட்டது புங்க–னூர் ஊராட்சி.

    அமைச்சர் திறந்துவைத்தார்

    2,975 ஆண்கள் மற்றும் 3,094 பெண்கள் என மொத்தம் 6,069 மக்கள் தொகை கொண்ட புங்க–னூரில் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்திற்கென ரூ.17.64 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள் ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பி–ரதீப்குமார் தலைமை தாங்கினார். புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றார் ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்துவைத்து குத்து–விளக்கேற்றினார்.

    அறைகள்

    ஊராட்சி மன்றத் தலைவ–ருக்கான அறை, வார்டு உறுப்பினர்களுக்கான கூட்ட அறை மற்றும் ஊராட்சி செயலருக்கான அறைகளுடன் இந்த ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கமலம் கருப்பையா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் கங்காதாரணி, புங்கனூர் ஊராட்சி மன்றத்தலைவர் தாமோதரன்,

    ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாத்தூர் கருப்பையா, புங்கனூர் கவுன்சிலர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் வயலூர் மணிமேகலை முருகேசன், சேதுராபட்டி வசந்தா தங்கரத்தினம் , ஆளுந்தூர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி, சோமரசம்பேட்டை குணவதி துரைப்பாண்டியன், அம்மாபேட்டை தமிழ்ச்செல்வி காந்தி மற்றும் புங்கனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் கண்ணன்,

    தி.மு.க. பிரதிநிதிகள் கைக்குடி சாமி, ரெத்தினமூர்த்தி சுப்பிரமணி, சண்முகம், முருகேசன், அய்யாதுரை, சண்முகப்பிரியா, கருப்பையா, சண்முகம், தங்கவேல், அமிர்தராஜ், பாலன், கார்த்திக், சுதாகர், அன்பு, மூக்கன், தீனன், ரமேஷ், வசந்த், முன்னாள் துணைத் தலைவர் வெங்கட் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எடுத்துச் சென்றனர்.
    • அதிரடி படையினருடன் இணைந்து போலீஸ் சூப்பிரண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    ஆய்வின் போது போலீஸ் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தூய்மை பணி நடந்தது.அதிரடி படை யினருடன் இணைந்து வளா கத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை போலீ சாருடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் அகற்றி னார். பின்னர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த குப்பைகளை எடுத்துச் சென்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் ஆங்காங்கே பூந்தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

    ×