search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup 2019"

    உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதை விட அவர்களை களத்தில் வீழ்த்தி வெளியேற்ற வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். #SunilGavaskar #WorldCup2019 #INDvsPAK
    புதுடெல்லி:

    சமீபத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் கொதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு புறம் உலக கோப்பை தொடரில் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆடக்கூடாது என்று முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தால் யாருக்கு வெற்றி கிடைக்கும்? நான் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி குறித்து கூட பேசவில்லை. லீக்கில் அவ்வாறு நடந்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அந்த அணி 2 புள்ளியை எளிதில் பெறும்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நாம் இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது கிடையாது. ஒவ்வொரு முறையும் நாம் அவர்களை வீழ்த்தி (6 முறை) இருக்கிறோம். 2 புள்ளியை வழங்கி, அவர்களது கையை ஓங்க விடக்கூடாது. களம் இறங்கி பாகிஸ்தானை சாய்த்து, அரைஇறுதிக்கு அந்த அணி முன்னேறக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.

    அதே சமயம் இந்த முறை நாம் பாகிஸ்தானுடன் விளையாடுவோமோ என்ற கேள்விக்கு நான் நாட்டின் பக்கமே இருக்க விரும்புகிறேன். தேசத்தின் நலனே முதலில் முக்கியம். இந்திய அரசாங்கம் எந்த முடிவு எடுத்தாலும் அதை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்வேன். பாகிஸ்தானுடன் நாம் விளையாடக்கூடாது என்று நாடு விரும்பினால், அந்த முடிவுக்கு ஆதரவாக நிற்பேன்.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2007-ம் ஆண்டுக்கு பிறகு முழுமையான நேரடி தொடரில் நாம் விளையாடவில்லை. நேரடி தொடரில் ஆடாமல் தவிர்க்கும் போது, பாகிஸ்தானுக்கு நிறைய பாதிப்பு (கோடிக்கணக்கில் நஷ்டம்) ஏற்படுகிறது. ஆனால் உலக கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் அவர்களுடன் மோதுவதை புறக்கணித்தால், இழப்பு இந்தியாவுக்கு தான். இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அனைவரின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடாமல் இரண்டு புள்ளியை இழந்தாலும் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அளவுக்கு நமது அணி வலிமையாக இருப்பதை அறிவேன். ஆனால் இந்த போட்டியில் அவர்களை தோற்கடித்து அடுத்த சுற்றை எட்டாமல் இருக்க நாம் ஏன் முட்டுக்கட்டை போடக்கூடாது?

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் முறையிடலாம். ஆனால் அது போன்று நடக்காது. ஏனெனில் ஐ.சி.சி.யின் மற்ற நாட்டு உறுப்பினர்களும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற நாடுகள் இந்தியாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வாய்ப்பில்லை.

    துபாயில் வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை நடக்கும் ஐ.சி.சி. கூட்டத்தின் போதும் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மற்ற நாடுகள் இது இரு நாட்டு உள்விவகாரம், தயவு செய்து எங்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.

    பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் எனது நண்பர் ஆவார். பதவி ஏற்கும் போது, ‘இது புதிய பாகிஸ்தானாக இருக்கப்போகிறது என்று நீங்கள் (இம்ரான் கான்) சொன்னீர்கள். நட்புறவுக்கு இந்தியா முதல் அடி எடுத்து வைத்தால் நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம் என்றும் சொன்னீர்கள். அரசியல்வாதியாக அல்லாமல் உங்களை ஒரு சராசரி விளையாட்டு வீரராக நான் கேட்க விரும்புவது, முதலில் நீங்கள் ஆக்கப்பூர்வமான முதல் அடியை எடுத்து வையுங்கள் என்பது தான். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். இந்தியாவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் உங்கள் நாட்டவரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள். இல்லாவிட்டால் ஐ.நா.விடம் ஒப்படையுங்கள். நீங்கள் இந்த இரண்டு அடியை எடுத்து வையுங்கள். அதன் பிறகு இந்தியாவிடம் இருந்து பல நட்புறவான நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கலாம்.

    ஒரு கிரிக்கெட் வீரராக இம்ரான் கான், இந்தியாவில் நிறைய நேரம் செலவிட்டு இருக்கிறார். மற்ற பாகிஸ்தானியரை விட இந்திய மக்கள் பற்றி அவருக்கு அதிகமாக தெரியும். எனவே இந்த அடியை எடுத்து வைப்பதில் தகுதியானவர் இம்ரான் கான் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
    உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்த உள்ளது. #BCCI #ICC #WorldCup2019 #PulwamaAttack
    மும்பை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது. இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுத்தார். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று தெரிவித்தார்.

    புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று முன்னாள் கேப்டன் அசாருதீன், ஹர்பஜன்சிங் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    மற்றொரு முன்னாள் கேப்டனான கங்குலி “பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

    இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருக்கிறது. அப்படி தடை விதிக்காவிட்டால் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுக்கும்.



    இது தொடர்பான கடிதத்தை பி.சி.சி.ஐ.யின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகி தயாரித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவின் தலைவர் வினோத் ராயன் ஒப்புதலின் பேரில் இந்த கடிதம் தயாரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் இன்று இறுதி முடிவு செய்கிறது. அதன்பிறகு இந்த கடிதம் ஐ.சி.சி.க்கு அனுப்பப்படும்.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது. வினோத்ராய் இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான் செஸ்டரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று விட்டது. #BCCI #ICC #WorldCup2019 #PulwamaAttack
    இங்கிலாந்து அணி இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் அலஸ்டர் கூக் தெரிவித்துள்ளார். #AlastairCook #England #WorldCup2019
    லண்டன்:

    உலககோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்குகிறது. இந்த முறை இங்கிலாந்து உலக கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் அலஸ்டர் கூக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி தற்போது ஒருநாள் போட்டியில் மிகவும் அபாரமாக ஆடிவருகிறது. அணியில் உள்ள 15 வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர். ஒவ்வொருவரது பங்களிப்பும் நன்றாக இருக்கிறது. இதனால் இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.



    இவ்வாறு கூக் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இதுவரை உலககோப்பையை வென்றது கிடையாது. 1939, 1987, 1992-ல் அந்த அணி இறுதிப்போட்டியில் தோற்று இருந்தது. #AlastairCook #England #WorldCup2019
    ஐபிஎல் - உலகக்கோப்பை இடையே சுமார் 3 வார இடைவெளி இருப்பதால் வீரர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்ட வாய்ப்பில்லை என்று கேகேஆர் தெரிவித்துள்ளது. #IPL2019
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கி, மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் மே 30-ந்தேதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    முக்கியமான தொடரான உலகக்கோப்பை தொடர் ஐபிஎல் முடிந்த உடன் வருவதால் வீரர்களின் பணிச்சுமை (Workload) கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஐபிஎல் உரிமையாளர்களிடம் பேசினோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இரண்டு தொடர்களுக்கும் இடையில் சுமார் மூன்று வார இடைவெளி இருப்பதால் பணிச்சுமைக்கு வாய்ப்பில்லை. மேலும், இதுகுறித்து எங்களுக்கு எந்தவித வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்படவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா அணியில் குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடுகிறார்கள். இவர்கள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறுகையில் ‘‘பிசிசிஐ-யிடம் இருந்து இதுபோன்ற எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. ஐபிஎல் தொடர் போதுமான காலத்திற்கு முன்னதாகவே முடிவடைகிறது. மே 12-ந்தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கிறது. உலகக்கோப்பையில் இந்தியா ஜூன் 5-ந்தேதிதான் விளையாடுகிறது.

    இதனால் போதுமான இடைவெளி இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் நாங்கள் எந்தவொரு வழிகாட்டி நெறிமுறைகளையும் பெறவில்லை” என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ChrisGayle #ChrisGayleRetire #ODIs #ICCWorldCup2019
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல்.டெஸ்டில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.

    இந்த நிலையில் 39 வயதான கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    கெய்ல் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவர் உலக கோப்பையில் தான் விளையாட உள்ளார். உலக கோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இது அவருக்கு 5-வது உலக கோப்பை ஆகும்.

    கிறிஸ் கெய்ல் 284 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9727 ரன் எடுத்துள்ளார். சராசரி 37.12 ஆகும். 23 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன் குவித்துள்ளார்.

    10 ஆயிரம் ரன்னை தொட கெய்லுக்கு இன்னும் 273 ரன் தேவையாகும். லாராவின் சாதனையை முறியடிக்க 677 ரன்கள் தேவை. இந்த இரண்டு சாதனைகளில் ஒன்றை அவர் உலக கோப்பையில் முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கெய்ல் கடைசியாக 2014-ம் ஆண்டு டெஸ்டில் விளையாடினார். 103 டெஸ்டில் விளையாடி 7214 ரன் எடுத்து இருந்தார்.  #ChrisGayle #ChrisGayleRetire #ODIs #ICCWorldCup2019
    2019-க்கான 50 ஓவர் உலக கோப்பை அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெற வாய்ப்பு குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #2019WorldCup #Dineshkarthik
    மும்பை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டிணத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ந் தேதி நடைபெறும்.

    ஒரு நாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ந்தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லி ஆகிய இடங்களில் முறையே நடக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணியை எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்து அறிவித்தது.

    கே.எல். ராகுல் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியில் மீண்டும் தேர்வாகி இருக்கிறார். பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த அவர் உள்ளூர் போட்டியில் அபாரமாக ஆடியதால் வாய்ப்பை பெற்றார்.

    இதேபோல கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீரர் பும்ரா ஆகியோரும் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் ஒருநாள் போட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அணியின் 2-வது விக்கெட் கீப்பர் என்ற முறையில் ரிசப்பந்த்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தினேஷ்கார்த்திக் கழற்றிவிடப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அணி நிர்வாகம் தன்னை முழுவதும் ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி போட்டி ஆஸ்திரேலியா தொடர் ஆகும். இதில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு இருப்பது உலக கோப்பையில் அவரது இடம் குறித்த ஐயங்களை எழுப்பி உள்ளது. உலக கோப்பை அணியிலும் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    கடந்த 2 ஆண்டுகளில் இலக்கை வெற்றிகரமாக முடித்த 10 போட்டியில் தினேஷ் கார்த்திக் 7 முறை அவுட் ஆகாமல் இருந்தார். ஜோரூட் 9 முறையும், விராட்கோலி, டோனி தலா 8 முறையும், வெற்றி இலக்கை எடுத்த போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து இருக்கிறார்.

    தினேஷ் கார்த்திக்குடன் ஒப்பிடுகையில் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் எந்த வரிசை நிலையிலும் ஆடக் கூடியவர். அப்படி உள்ள தினே‌ஷ கார்த்திக்கை கழற்றி விட்டது அதிர்ச்சியானதே.

    தினேஷ் கார்த்திக்கை அணியில் இருந்து நீக்க முடியும் என்றால் அதன் பின்னணியையும் அணி தேர்வு குழுவுடன் செயல்பாடுகளும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

    ஆஸ்திரேலிய தொடரில் ரிசப்பந்த், ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே தினேஷ் கார்த்திக் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார்.

    உலக கோப்பை போட்டிக்கான 15 வீரர்களில் 13 பேரை தேர்வு குழு அடையாளம் கண்டுள்ளது அவர்கள் விவரம்:

    விராட்கோலி, தவான், ரோகித்சர்மா, அம்பதிராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ‌ஷமி.

    மீதியுள்ள 2 இடத்துக்கு 4 வீரர்கள் உள்ளனர். 1-வது விக்கெட் கீப்பரில் ரிசப் பண்ந்துக்கே கூடுதல் வாய்ப்பு உள்ளது. மற்றொரு வீரர் வேகப்பந்து வீச்சாளரா? 3-வது தொடக்க வீரரா, என்பதை முடிவு செய்ய வேண்டும். #2019WorldCup #Dineshkarthik
    உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என்று முன்னாள் கேப்டன் மொயின்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MoinKhan #2019WorldCup
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொயின்கான் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும். அந்த அளவுக்கு எங்கள் அணி வீரர்களிடம் திறமையும், நம்பிக்கையும் இருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கிலாந்தில் 2 வருடத்திற்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எங்கள் அணியினர் இந்திய அணியை வீழ்த்தினார்கள். இங்கிலாந்தில் ஜூன் மாதம் இருக்கும் சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். எங்கள் அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது.

    கடந்த பல வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணி நன்றாக செயல்பட்டு வருகிறது. மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நிலவும் வானிலையை கணிக்க முடியாது. ஆடுகளம் ஈரப்பதம் கொண்டதாக இருக்கும். இவையெல்லாம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அம்சமாகும்.

    எங்கள் அணி வீரர்கள் நல்ல உத்வேகத்துடன் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு நாங்கள் உலக கோப்பை போட்டிக்கு செல்வது நல்ல விஷயமாகும். கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை சிறுவயது முதல் எனக்கு தெரியும். தற்போது பாகிஸ்தான் அணியை வழிநடத்த அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை.

    இவ்வாறு மொயின்கான் கூறினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்-இந்தியா அணிகள் இதுவரை 6 முறை சந்தித்துள்ளன. இதில் ஒரு முறை கூட பாகிஸ்தான் வென்றது இல்லை. வரும் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் ஜூன் 16-ந் தேதி லீக்கில் மோதுகின்றன.  #MoinKhan #2019WorldCup

    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன என்று துணைக்கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #TeamIndia
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சிட்னியில் நாளைமறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா பேட்டிளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கு முன் நாங்கள் 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுடன் செல்ல முடியுமா? அல்லது வீரர்களின் எண்ணிக்கை குறையுமா? என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் காயம் மற்றும் பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் இருக்கலாம்.

    இந்த வருடத்தில் நாங்கள் ஏராளமான போட்டியில் விளையாட இருக்கிறோம். அதனால் காயங்கள் ஏற்படலாம். காயங்களால் வீரர்கள் இடம்பெற முடியாமல் போவதை தவிர்த்து மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இருப்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு இடத்தையும் (Slots) பார்த்தீர்கள் என்றால், தனிப்பட்ட வீரர்களால் சிறப்பான வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் ஒவ்வொரு வீரர்களின் பார்ம்-ஐ பொறுத்துதான் அணியில் இடம் கிடைக்கும். இங்கிலாந்து செல்வதற்கு யாருக்கும் உத்தரவாதம் கிடையாது.

    முன்னதாகவே ஆடும் லெவன் அணி குறித்து கூற இயலாது. ஆனால் நாங்கள் விளையாடும் 13 போட்டிகளில் இடம்பிடிக்கும் வீரர்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஐபிஎல் உள்பட இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட இருப்பதால் உலகக்கோப்பைக்கான 11 அல்லது 12 பேர் கொணட இந்திய அணியை தெரிவிப்பது கடினம்’’ என்றார்.
    உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும் என விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். #ViratKohli
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது. இப்போட்டிக்கு தயாராவது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் விராட் கோலி பேசும்போது, அடுத்தடுத்த தொடர்களால் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சோர்வடைவார்கள். இதனால் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக நடக்கும் ஐபிஎல் போட்டி தொடரில் இருந்து முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.



    அவர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது சிறந்த முடிவாக இருக்கும். இல்லையென்றால் 7 அல்லது 8 போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
    சரியாக விளையாடாத வீரர்களுக்கு உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காது என பயிற்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #WorldCup2019
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது. அடுத்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

    ஐந்தாவது போட்டியில் இலங்கை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிக்வெல்லா (95), சமரவிக்ரமா (54), சண்டிமல் (80), குசால் மெண்டிஸ் (56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்தது.

    மழை பெய்ததால் இங்கிலாந்து அணிக்கு 26.1 ஓவரில் 352 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஸ்கோரை எட்டுவது முடியாத காரியம் என்றாலும், இங்கிலாந்து சிறப்பாக விளையாடி கவுரவமான ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் 219 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதை இங்கிலாந்து ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை.

    அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. உலகக்கோப்பைக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளதால் அனைத்து அணிகளும் தங்களை தயார் படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இதுவரை உலகக்கோப்பையை கைப்பற்றாத இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை வெல்ல விரும்புகிறது. அதற்கேற்றபடி இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியும் விளையாடி வருகிறது.



    இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் யோசனையில் உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான டிரெவர் பெய்லிஸ் ‘‘இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடாவிட்டால், உலகக்கோப்பைக்கான அணியில் இருக்கமாட்டார்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் மோர்கன், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் குர்ரான், ரஷித், பிளங்கெட், பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், வுட், டேவிட் வில்லே போன்றோர் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×