search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker killed"

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுதன் சேகர்தக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஒடிசா மாநிலம் மொசிந்தா பகுதியை சேர்ந்தவர் சுதன் சேகர்தக்கு (33). இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலூத்து பாளையம் பகுதியில் தங்கி, அங்கு இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மில்லில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மொடக்குறிச்சியில் இருந்து பூந்துறை செல்லும் வழியில் ஆலுத்து பாளையம் பிரிவு அருகே சுதன் சேகர்தக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் சுதன் சேகர்தக்குவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி சுதன் சேகர்தக்கு இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னர் மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கரூருக்கு புறப்பட்டனர்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை–பகுதியை சேர்ந்தவர் துரைசாமி.இவர் கரூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலைப்பார்த்து வந்தார்.

    நேற்று இவர் தனது மருமகன் சரவணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொடுமுடிக்கு ஒரு வளை–காப்பு நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கரூருக்கு புறப்பட்டனர்.

    அப்போது அவர்கள் சோளக் காளி பாளையம் என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த னர். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.அப்போது எதிர்பாராத வகையில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டது.

    இந்த விபத்தில் துரைசாமி படுகாயம் அடைந்தார். இதை யடுத்து கொடுமுடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொடு முடிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பிளாஸ்டிக் பொருள்களை எடுப்பதற்காக எட்டியான் ெரயில் நிலையம் வந்தார்.
    • மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் எட்டியான் (வயது 65). கூலித்தொழி லாளி. இவர் தினமும் திண்டிவனம் ெரயில்வே நிலை யத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து விற்று வந்தார்.

    அதேபோன்று இன்றும் பிளாஸ்டிக் பொருள்களை எடுப்பதற்காக எட்டியான் ெரயில் நிலையம் வந்தார். அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எட்டியான் உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் எட்டியான் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திண்டி வனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிட உரிமையாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    • சிவமணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கோவை,

    திண்டுக்கல் மாவட்டம் திம்மண்ணநல்லூரை சேர்ந்தவர் சிவமணி முத்து (வயது26). கட்டிட தொழிலாளி.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த துர்க்காதேவி(19) என்பவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் கோவை சோமனூர் சாமளாபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர்.

    சம்பவத்தன்று இவர் சின்னியம்பாளையம் தங்கம்மன் நகரில் ஒரு கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிவமணியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகி உயிருக்கு போராடினார்.

    இதனைப்பார்த்த சக ஊழியர்கள் சிவமணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து உடனே அவரது காதல் மனைவி துர்க்காதேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்துசென்று தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து துர்க்கா தேவி பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக என்ஜினியர் சுரேஷ்(36) மற்றும் கட்டிட உரிமையாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 மாதத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோபால கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி- கோவில்பாளையம் ரோட்டில் சென்றார்.
    • லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் வந்த கோபால கிருஷ்ணன் மீது மோதியது.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி பெருமால் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 40). தொழிலாளி.சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி- கோவில்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் வந்த கோபால கிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த குடியான குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52). கூலி தொழிலாளி.

    இவர் நேற்று டொமஸ்டிக் அருகே உள்ள தனியார் கல்லூரி பின்புறம் மது பாட்டிலால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாககிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் கோவிந்தராஜ் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் கொலை செய்யப் பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு செங்குத்தம் பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் முருகன் (55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    முருகன் பவானி-பெருந்துறை ரோட்டில் சைக்கிளில் ெசனறு கொண்டு இருந்தார். அப்போது அநத வழியாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் குமார் (25) என்பவர் ெமாட்டில் வந்தார். அப்போது மொபட் எதிர்பாராத விதமாக முருகன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.

    இதில் சைக்கிளில் இருந்து முருகன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் கனேஸ்வரர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
    • மாதவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கொளத்தூர்:

    சென்னை புழல், கிருஷ்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாதவன் (42). எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். நேற்று காலை 11 மணிக்கு கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். அப்போது மின்சாரம் தாக்கி மாதவன் மயங்கி விழுந்தார்.

    அவரை தியாகராஜன் ஆட்டோவில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாதவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே மினி சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஆசிலாபுரம் கீழ தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மனைவி நாகஜோதியுடன் முறம்பு பகுதிக்கு சென்றிருந்தார். அங்குள்ள மெயின் ரோட்டை இருவரும் கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து கணவன்-மனைவி மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாரியப்பனின் உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்ைச பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். நாகஜோதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

    இந்த விபத்து குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி சரக்கு லாரி டிரைவர் தென்காசி கடையநல்லூரை சேர்ந்த யோவானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம் சக்கரராஜா கோட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அட்டைமில் முக்கு ரோட்டில் சென்ற போது எதிரே வந்த மொபட் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    மொபட்டில் வந்த அய்யனார்புரத்தை சேர்ந்த குருமூர்த்தி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.
    • இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானி அடுத்த ஒலகடம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் கார்த்தி (38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    கார்த்தி அவரது தந்தை சண்முகத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கார்த்தி கடந்த 8-ந் தேதி ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.

    இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கார்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்கிரவாண்டி அருகே லாரி மோதி செங்கல் தொழிலாளி பலி ஆனார்.
    • புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர்கள் அய்யனார் மகன் குரு ( 35 ) , குப்புசாமி மகன் தீர்த்தமலை ( 40 )ஆகிய இருவரும் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறு வள்ளிக்குப்பம் கிராமத்தில் அருகே செங்கல் சூலையில் செங்கல் அறுக்கும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று மதியம் அவர்களுடைய சொந்த ஊரில் உறவினரின் மஞ்சள் நீர் சுப விசேஷத்திற்கு குரு தீர்த்தமலை இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு விசேஷத்தை முடித்துக் கொண்டு இரவு 10 மணிக்கு மீண்டும் செங்கல் அறுக்கும் இடத்திற்கு மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்,

    அப்பொ ழுது பனையபுரம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது பாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது இதில் குரு தீர்த்தமலை ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார் ,அதில் குரு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இது தொடர்பாக புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இறந்தகுருவிற்கு சரிதா என்ற மனைவியும் திரிஷா, யோகேஸ்வரன், இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என குறிப்பிடத்தக்கது.

    • மகன் கண்முன்பே இறந்த பரிதாபம்
    • மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கரும்புகடையை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 36). இவர் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது 13 வயது மகன் சாகலை அழைத்து கொண்டு மொபட்டில் உக்கடம்- ஆத்துப்பாலம் ரோட்டில் சென்றார்.

    அப்போது அவரது முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்தது. இதனால் நிலை தடுமாறிய ஷாஜகான் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதினார். 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஷாஜகானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஷாஜகானை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கண் முன்னே தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை நியூ சித்தாபுதூர் நந்தகோபால் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கேரளா லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மணிகண்டன் வந்த மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கோவில்பாளையம் சேரயம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (47). இவர் தனது நண்பர் குணசேகரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி-அரசூர் ரோட்டில் சென்றார்.

    மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டினார். அப்போது வெள்ளானப்பட்டி அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரோம் நடந்து சென்ற நரேஷ் மஜித் என்பவர் மீது மோதியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மோகனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×