search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி பலி"

    • தள்ளு வண்டி மீது பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சின்னமடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 64). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அங்கு ரோட்டை கடக்க முயன்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராத விதமாக பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பழனிசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பழனிசாமி மீது மோதி விட்டது.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார்.

    பெருந்துறை:

    திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் ஓடக்காட்டைச் சேர்ந்த கருப்பன் மகன் பழனிசாமி (வயது 50). இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 27-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே காந்திநகரை சேர்ந்தவர் குமார்(48). தகரசெட் அமைக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராட்சத அலையில் சிக்கிய முருகானந்தம் கடலில் மூழ்கி பலியானார்.
    • போலீசார் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை, தேசிங்கு நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 53). கூலித்தொழிலாளி. நேற்று இரவு அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் காசிமேடு கடற்கரை பகுதிக்கு சென்றார்.

    அப்போது ராட்சத அலையில் சிக்கிய முருகானந்தம் கடலில் மூழ்கி பலியானார். இன்று காலை அவரது உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. காசிேமடு மீன்பிடிதுறைமுக போலீசார் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ேகாவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 32). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டின் அருேக உள்ள முருங்கை மரத்தை வெட்டினார். அப்போது முருங்கை மரம் அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார வயர் மீது விழுந்தது. இதனை பார்க்காமல் ஹரிதாஸ் மரத்தை பிடித்து இழுத்தார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் உடல் கருகிய அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய ஹரிதாசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஹரிதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரைவர் பழனிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பஸ் தாறுமாறாக சாலையில் ஓடியது.
    • சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மத்தூர்,

    கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டம், தேக்கம்பாடி பகுதியை சேர்ந்த பழனி (வயது56) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக செங்கம் முடியனூர் பகுதியை சேர்ந்த சிவக்கு மார் என்பவர் இருந்தார்.

    இந்த நிலையில் இந்த பஸ் இன்றுகாலை 6.30 மணி அளவில் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் வந்தது.

    அப்போது திடீரென டிரைவர் பழனிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பஸ் தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

    இதனை கவனித்த அருகில் இருந்த நடத்துனர் எழுந்து பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் சாலையோரம் வலதுபக்கம் நிறுத்தி இருந்த 5 மோட்டார் சைக்கிள் மீது மோதி பஸ் இழுத்து சென்றது.

    அப்போது அந்த வழியாக டீ அருந்த சைக்கிளில் வந்த மத்தூர் நாகம்பட்டியை சேர்ந்த கமலநாதன் என்பவர் மீதும் அரசு பஸ் மோதி தரதரவென பஸ் இழுத்து சென்றது. ஒரு வழியாக பஸ்சை நடத்துனர் சிவக்குமார் பிரேக் போட்டு நிறுத்தினார்.

    இந்த விபத்தால் பஸ்சின் அடியில் சக்கரத்தில் சிக்கி கமலநாதன் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பஸ்சில் மயங்கிய நிலையில் இருந்த பழனியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    விபத்தில் இறந்த கூலித்தொழிலாளி கமலநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை கிரேன் மூலம் அகற்றினர்.

    இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று அதிகாலை 6 வாகனங்கள் மீது அரசு பஸ் அடுத்தடுத்து மோதிய சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கட்டிட உரிமையாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    • சிவமணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கோவை,

    திண்டுக்கல் மாவட்டம் திம்மண்ணநல்லூரை சேர்ந்தவர் சிவமணி முத்து (வயது26). கட்டிட தொழிலாளி.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த துர்க்காதேவி(19) என்பவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் கோவை சோமனூர் சாமளாபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர்.

    சம்பவத்தன்று இவர் சின்னியம்பாளையம் தங்கம்மன் நகரில் ஒரு கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிவமணியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகி உயிருக்கு போராடினார்.

    இதனைப்பார்த்த சக ஊழியர்கள் சிவமணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து உடனே அவரது காதல் மனைவி துர்க்காதேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்துசென்று தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து துர்க்கா தேவி பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக என்ஜினியர் சுரேஷ்(36) மற்றும் கட்டிட உரிமையாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 மாதத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அருகில் இருந்த ஜல்லி குவியல் மீது விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் அரசு மரத்து வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (52) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டிலிருந்து குருவரெட்டியூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அருகில் இருந்த ஜல்லி குவியல் மீது விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அருணாச்சலத்திற்கு ஞானசுந்தரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • ரவி 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்.
    • மடிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆதம்பாக்கத்தை அடுத்த உள்ளகரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்காக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

    இன்று அதிகாலை 1 மணியளவில் சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த ரவி(வயது45) உள்ளிட்ட தொழிலாளர்கள் கழிவுநீர் கால்வாய் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரவி 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ரவி மீது மண் முழுவதுமாக சரிந்து விழுந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வேலை பார்த்த மற்ற தொழிலாளிகள் சுமார் அரைமணி நேரம் போராடி மண்ணுக்குள் சிக்கிய ரவியை மீட்டனர். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ரவியை மீட்டதும் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சரக்கு ஆட்டோவிலேயே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தொழிலாளி ரவிக்கு, செல்லக்கொடி, சுகன்யா என்ற 2 மனைவிகள் உள்ளனா்.

    ×