பெரியகுளத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே காந்திநகரை சேர்ந்தவர் குமார்(48). தகரசெட் அமைக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com