காசிமேடு கடலில் மூழ்கி தொழிலாளி பலி

ராட்சத அலையில் சிக்கிய முருகானந்தம் கடலில் மூழ்கி பலியானார்.போலீசார் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காசிமேடு கடலில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

ராயபுரம்:

புது வண்ணாரப்பேட்டை, தேசிங்கு நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 53). கூலித்தொழிலாளி. நேற்று இரவு அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் காசிமேடு கடற்கரை பகுதிக்கு சென்றார்.

அப்போது ராட்சத அலையில் சிக்கிய முருகானந்தம் கடலில் மூழ்கி பலியானார். இன்று காலை அவரது உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. காசிேமடு மீன்பிடிதுறைமுக போலீசார் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com