search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை தொழிலாளி பலி"

    • மனைவியை மிரட்டுவதற்காக மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார்.
    • சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனாவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43). எஸ்டேட் தொழிலாளி. இவரது மனைவி மாதவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    பாலகிருஷ்ணன் தினசரி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். அப்போது மனைவியிடம் அடிக்கடி தற்கொலை செய்து கொ ள்வேன் என கூறி மிரட்டி வந்தார்.சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மது குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் மனைவியை மிரட்டுவத ற்காக வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பாலகிருஷ்ணனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மகன் கண்முன்பே இறந்த பரிதாபம்
    • மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கரும்புகடையை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 36). இவர் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது 13 வயது மகன் சாகலை அழைத்து கொண்டு மொபட்டில் உக்கடம்- ஆத்துப்பாலம் ரோட்டில் சென்றார்.

    அப்போது அவரது முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்தது. இதனால் நிலை தடுமாறிய ஷாஜகான் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதினார். 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஷாஜகானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஷாஜகானை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கண் முன்னே தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை நியூ சித்தாபுதூர் நந்தகோபால் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கேரளா லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மணிகண்டன் வந்த மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கோவில்பாளையம் சேரயம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (47). இவர் தனது நண்பர் குணசேகரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி-அரசூர் ரோட்டில் சென்றார்.

    மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டினார். அப்போது வெள்ளானப்பட்டி அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரோம் நடந்து சென்ற நரேஷ் மஜித் என்பவர் மீது மோதியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மோகனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×