search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman murder"

    • கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    • அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    கோபி:

    சேலம் சின்னசீரகா பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (47). இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வண்டிபேட்டை கோவில் பகுதியை சேர்ந்த ரகு என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது லட்சுமி வெட்டிக்கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் 2-வது கணவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை தேடிவந்தனர்.

    இதற்கிடையே ரகு கோபி செட்டிபாளையம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தமிழரசு முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்.

    • விசாரணையில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது.
    • ஆத்திரமடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கி உள்ளார்.

    தென்காசி:

    தென்காசி நடுமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா (வயது 50). இவர் பீடி சுற்றும் தொழிலாளி.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த சித்ராவின் தம்பி குற்றாலநாதன், சந்திரனின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது அக்கா குறித்து கேட்டதாகவும், அதற்கு சித்ராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும், தானும் அங்கேயே அவருடன் இருப்பதாக கூறி சந்திரன் போன் இணைப்பைத் துண்டித்துள்ளார். தொடர்ந்து மீண்டும் சந்திரனை தொடர்பு கொண்ட போது போன் இணைப்பு சுவிட்ச்-ஆப் என வந்துள்ளது.

    இதனால் சந்தேகம் அடைந்த குற்றாலநாதன், அக்காவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் உடனடியாக தென்காசி போலீசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.

    தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கர் மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி ஆகியோர் அடங்கிய போலீசார் நேரடியாக வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு கட்டிலில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். அவரது முகமும் சிதைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர் விசாரணையில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கை-கால்களையும் கை, கால்களை கட்டி முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் திருச்செந்தூர் பகுதியில் சந்திரன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் 15 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் திருச்செந்தூர் விரைந்தனர். அங்கு அன்னசத்திரம் அருகே நின்ற சந்திரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    சந்திரனை தென்காசிக்கு அழைத்து வந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது.
    • துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). இவரது மனைவி துர்கா தேவி (வயது 42). இவர்களது மகன் தினேஷ் (20) . இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து தங்கி விவசாய தொழிலை செய்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தியின் மனைவி துர்கா தேவி 18-ந்தேதி இரவு வீட்டில் இருந்து 8 மணிக்கு மகளிர் சுயஉதவி குழுவிற்கு கடன்தொகை கட்டி விட்டுவருவதாக சென்றுள்ளார். இரவு 11 மணி ஆகியும் தூர்காதேவி வீட்டுக்கு வராதால் கணவரும் அவரது மகனும் அக்கம்பக்கம் தேடி பார்த்து உள்ளனர்.

    எங்குதேடியும் கிடைக்காததால் காலையில் தேடிக் கொள்ளலாம் என இருவரும் தூங்கிவிட்டனர். பின்பு காலையில் எழுந்து தேடி பார்க்கும் பொழுது புஷ்பவனம் கடற்கரையில் ஒரு பெண் பிணம் படுகாயத்துடன் கிடப்பதாக வாட்ஸ்அப்பில் வந்த தகவலை பார்த்த கணவன் சுந்தரமூர்த்தி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று போய் பார்த்தபோது இறந்தது துர்காதேவி தான் என தெரிய வந்தது. இது குறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார்.

    வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பசுபதிமற்றும் போலீசார் புஷ்பவனம் கடற்கரைக்குச் சென்று பிணத்தை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு நாகையிலிருந்து தடவியியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர்.

    நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்பு போலீசார் சம்பவம் நடைபெற்ற புஷ்பவனம் செம்போடை, தேத்தாகுடி தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று குழுவிற்கு பணம் கட்டி விட்டு வருவதாக கூறிச் சென்ற தூர்காதேவியை யாரேனும் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்து கடற்கரையில் பிணத்தை வீசினார்களா? அல்லது தேத்தாகுடி தெற்கில் கொலை செய்து வாகனத்தில் வந்து புஷ்பவனம் கடற்கரையில் பிணத்தை வீசிவிட்டு சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துர்கா தேவி வீட்டில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரம் அவரது செல்ஃபோன் வேலை செய்துள்ளது. பின்பு அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது என்பது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தனி படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நேற்று காலை வேதாரண்யம் தென்னம்புலம் பெட்ரோல் பங்கு அருகே புஷ்பவனத்தை சேர்ந்த அழகுக்கண்டர் காட்டை சேர்ந்த சுந்தரவடிவேலுவின் மகன் அருண் (வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அருண் சேலம் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு மயக்கவியல் படித்து வருகிறார். இவர் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து வேதாரண்யம் பகுதியில் விற்பனை செய்வதற்கு தனது வாட்ஸ்அப் மூலம் விளம்பரபடுத்தி இருந்தார். இதில் தூர்கா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளனர். இதில் அருண் பிறந்தநாள் அன்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். அப்பொழுது அருண் தூர்கா தேவிக்கு 1 பவுன் நகை பரிசாக கொடுத்துள்ளார். இது போல் பலமுறை பணம் கொடுத்து தூர்கா தேவியுடன் உல்லாசமாக இருந்து உள்ளார்.

    இதே போல் சம்பவத்தன்று தூர்காதேவியை புஷ்பவனம் கடற்கரைக்கு அழைத்து சென்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். பின்பு துர்கா தேவி அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறி காரை எடுக்கும் பொழுது துர்கா தேவிக்கும் அருணுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்கவில்லை என்றால் தங்களின் உறவை வெளியே சொல்லி விடுவேன் என துர்கா தேவி மிரட்டி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருண் மூன்று முறை காரை விட்டு துர்கா தேவியை மோதி உள்ளார். இதில்சம்பவ இடத்திலேயே துர்கா தேவி இறந்து விட்டார். பின்பு அருண் துர்கா தேவி பிணத்தை எடுத்து கடற்கரையில் போட்டு சென்று விட்டார் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து அருணை போலீசார் கைது செய்து உள்ளனர். கள்ளக்காதலில் உல்லாசமாக இருந்து விட்டுஅதை வெளியில் சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதால் கொலை செய்த இச்சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆசிட் வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • பிரான்சிகா மீது அடையாளம் தெரியாத 4 பெண்கள் ஆசிட் வீசி விட்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள எலூரை சேர்ந்தவர் எட்லா பிரான்சிகா (வயது 35). இவர் அங்குள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் வரவேற்ப்பாளராக பணியாற்றி வந்தார்.

    இவருடைய கணவர் ராஜமுந்திரியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரான்சிகா கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரான்சிகா வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    அவரது வீட்டின் அருகே வந்தபோது பைக்கில் வந்த 4 பேர் அவர் மீது ஆசிட் வீசினர்.

    இதில் அவரது தலை மற்றும் முகம் மார்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தபடி சாலையில் விழுந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓடிச்சென்று பிரான்சிகாவை மீட்டனர் .

    சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக பிரான்சிகாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார் .

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்சிகா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஆசிட் வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    பிரான்சிகா மீது அடையாளம் தெரியாத 4 பெண்கள் ஆசிட் வீசி விட்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ஆனாலும் போலீசாருக்கு மேலும் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செல்லம்மாளின் நடத்தையில் நரியழகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    • நரியழகன் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காப்பாரபட்டியை சேர்ந்தவர் நரியழகன் (வயது50). இவரது மனைவி செல்லம்மாள்(45).

    இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. மீதமுள்ள இரு மகள்களில் ஒருவர் காரைக்குடியில் நர்சாக வேலை பார்க்கிறார். மற்றொருவர் பெற்றோருடன் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார்.

    நரியழகனுக்கு மது குடிக்கம் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்லம்மாள் கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் செல்லம்மாளின் நடத்தையில் நரியழகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று நள்ளிரவும் அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது.

    அப்போது ஆத்திரமடைந்த செல்லம்மாள், வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் படுகாயமடைந்த நரியழகன் சுருண்டு விழுந்து இறந்தார். கணவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த செல்லம்மாள், வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டார்.

    நரியழகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலையிலேயே அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நரியழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நரியழகன் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரை அடித்துக் கொன்றுவிட்டு தலைமறைவான அவரது மனைவி செல்லம்மாளை வலைவீசி தேடி வருகின்றனர். நடத்தை சந்தேகத்தில் சண்டையிட்ட கணவரை, உருட்டுக்கட்டையால் அடித்து மனைவியே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாகமலை புதுக்கோட்டையில் நடந்த பெண் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • அந்த பெண் செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜாமணி என தெரியவந்துள்ளது

    மதுரை

    மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு முட்புதரில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த கல்யாணி என்ப வரின் மனைவி ராஜாமணி என தெரியவந்துள்ளது.

    இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? நகை-பணத்துக்காக மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு உடலை வீசிச்சென்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை.

    இதனால் கொலை யாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளத்தொடர்பு காரணமாக பெண் கொலையாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்திருந்தன.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே சென்னசந்திரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கடந்த 7-ந்தேதி கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்திருந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த பெண் யார்? எந்த ஊர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக அந்த பெண் கொலையாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான பெண், தர்மபுரி அதியமான்கோட்டையை சேர்ந்த பூங்கொடி (40), ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புக்கசாகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில்தான் பூங்கோதை கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கொலையில் சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர், போலீசாரின் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உஷா வீட்டில் பல்லவிளையை சேர்ந்த ஜெயா வேலைப்பார்த்து வந்தார்.
    • கடந்த மாதமே ஜெயா உள்ளிட்டவர்கள் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அருள்மிக்கேல். இவரது மனைவி உஷா (வயது 68).

    கொலை - கொள்ளை

    கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்த உஷா வீட்டில் பல்லவிளை பகுதியை சேர்ந்த ஜெயா என்பவர் பணிப்பெண்ணாக வேலைப்பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ஜெயாவின் மகன் ரஞ்சித் (18), அவரது உறவுக்கார சிறுவன் ஒருவன் ஆகிய 2 பேர் சேர்ந்து உஷாவை கொலை செய்து அவரிடமிருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். போலீஸ் விசாரணையில் 2 பேரும் புதிய மோட்டார் சைக்கிள் வாங்குதற்காக உஷாவை கொலை செய்து நகையை கொள்ளையடித்து தெரியவந்தது.

    பணிப்பெண் சிக்கினான்

    இதையடுத்து ரஞ்சித், சிறுவன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவர்களின் உறவினர்களான உதயபிரகாஷ், அவரது மனைவி சுபா ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்நிலையில் பணிப்பெண் ஜெயாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. உஷா வீட்டில் நடப்பதை நோட்டமிட்டு ஜெயா அவரது மகன் ரஞ்சித் மற்றும் கொலையில் ஈடுபட்ட சிறுவனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    1 மாதத்திற்கு முன்பே திட்டம்

    இதன்படியே சம்பவத்தன்று அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடந்த மாதமே ஜெயா மற்றும் அவரது மகன் உள்ளிட்டவர்கள் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளனர். இதற்காக ஜெயா வீட்டில் துப்புரவு பணி செய்த போது அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களின் வயர்களை துண்டித்துள்ளார். ஆனால் திடீரென உஷாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்ததால் கொள்ளையடிக்கும் திட்டம் நிறைவேறவில்லை.

    இதற்கிடையே தங்களது வீட்டில் சி.சி.டி.வி. வயர்கள் துண்டிக்கப்பட்டது குறித்து தகவலறிந்து வெளிநாட்டில் வசித்து வரும் உஷாவின் மகன் போலீசில் புகார் செய்தார். அப்போது பணிப்பெண் ஜெயா மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    2 பேர் கைது

    இந்நிலையில் ஜெயா உள்ளிட்டவர்கள் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வீட்டை நோட்டமிடுவதற்காக தனது மகன் ரஞ்சித் மற்றும் மற்றொரு சிறுவனை உஷாவின் வீட்டிற்கு கூலி வேலைக்காக பணிப்பெண் ஜெயா அழைத்து சென்று சுற்றிக்காட்டியதும் விசாரணையில் அம்பலமானது.

    இதைத்தொடர்ந்து பணிப்பெண் ஜெயா மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உறவினரான இந்துஜூடன் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவனின் அண்ணணான ஜான்சன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள்.

    • ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
    • சுமதி கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு அடிக்கடி சண்டை போடுவார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு சுமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலங்குளம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சுமதி நேற்று மாலை சாமி கும்பிட வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவர் கண்ணனும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தினுள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    நானும், எனது மனைவியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனக்கு ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுமதி, என்னிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு, அடிக்கடி என்னிடம் சண்டை போடுவார்.

    ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை என்னுடன் வீட்டில் வைத்து சண்டை போட்டுவிட்டு சுமதி கோவிலுக்கு சென்றாள். அங்கு நானும் சென்று வாக்குவாதம் செய்தேன். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சொத்து பிரச்சினையில் தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மேலக்குயில்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பம்பையா. இவரது மனைவி சிந்தாமணி(வயது 75). இவர் தனது 2 மகன்கள் மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார்.

    சிந்தாமணியின் 2-வது மகன் வேந்தன்(50). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது தாய் சிந்தாமணி வீட்டிலேயே வசித்து வந்தார். அவர் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வேந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். அவரை சிந்தாமணி கண்டித்து வந்தார். சிந்தாமணிக்கு பூர்வீக சொத்துக்கள் உள்ளது. அதனை பிரித்து தரும்படி வேந்தன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    வழக்கம்போல் நேற்று இரவும் வேந்தன் தாய் சிந்தாமணியிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர் உனக்கு சொத்து தரமுடியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த வேந்தன் விறகு கட்டையை எடுத்து வந்து சிந்தாமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனைகண்ட வேந்தன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுபற்றி அறிந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சிந்தாமணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுபற்றி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வேந்தனை பிடித்து கைது செய்தனர். சொத்து பிரச்சினையில் தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆனந்தன் மாமியார் சாந்தியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கி கொலை செய்தார்.
    • ஆனந்தனின் அக்காள் மகனான 15 வயது சிறுவன் கொலைக்கு உடந்தையாக இருந்தான்.

    திருக்கழுக்குன்றம்:

    திருக்கழுக்குன்றம் அருகே, வாயலூர் கிராமம் அருகில் உள்ள தடுப்பணையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூவத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இறந்து போன பெண்ணின் பெயர் சாந்தி(50) நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர். கணவரை இழந்த சாந்திக்கு மஞ்சு( 33) என்ற மகள் உள்ளார். இவரது கணவர் ஆனந்தன் (37) இவர் மரக்காணம் அருகே உள்ள புதுபாக்கம் பகுதியை சேர்ந்தவர்.

    சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சு மரக்காணம் -புதுபாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, ஆனந்தனை விட்டுபிரிந்து சென்று விட்டார். சாந்தி தனது மகள் மஞ்சு, ஆனந்தனுடன் வாழாத நிலையில் மாமியார் சாந்தி தனது மகள் பெயரில் உள்ள சொத்தை கேட்டு ஆனந்திடம் பலமுறை கேட்டார்.

    அதற்கு ஆனந்தன் சொத்தை கேட்டால் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இந்த நிலையில் சாந்தி தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுராந்தகம் சென்றார். அதனை அறிந்த மருமகன் ஆனந்தன் துக்க நிகழ்ச்சியில் மாமியார் சாந்தியிடம் ஊரில் உங்கள் பேரப்பிள்ளைகள் உங்களை பார்க்க வேண்டும் என கூறுகின்றனர்.

    ஒரு முறை வந்து உங்கள் பேரபிள்ளைகளை பார்த்து விட்டு செல்லுங்கள் என நைசாக பேசினார். பேரப்பிள்ளைகள் மீது பாசம் கொண்டு சாந்தியும் பார்க்க சென்றுள்ளார்.

    அந்த நேரத்தில் ஆனந்தன் மாமியார் சாந்தியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கி கொலை செய்தார். இதற்கு ஆனந்தனின் அக்காள் மகனான 15 வயது சிறுவன் உடந்தையாக இருந்தான். பின்னர் காரில் ஏற்றி வாயலூர் தடுப்பனை அருகே உடலை வீசி விட்டு சென்று விட்டனர். பின்னர் மறுநாள் சாந்தியின் விட்டிற்கு சென்று சாந்தி வளர்த்து வந்த ஆடு, மற்றும் மாடுகளை ஏற்றி வந்து விட்டனர்.

    நத்தேடு கிராமமக்கள் சிலர் சந்தேகப்பட்டு, கூவத்தூர் போலீசாரிடம் தெரிவித்த தகவலின் படி மருமகன் ஆனந்தன் மற்றும் அவரது சகோதரி மகன் 15 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் விசாரித்ததில் மாமியாரை கொலை செய்ததை ஆனந்தன் ஒப்புக்கொண்டார். பின்னர் ஆனந்தனை செங்கல்பட்டு சிறையிலும், சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும் போலீசார் அடைத்தனர்.

    • முத்துமாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.
    • முத்துமாரியின் உடலில் பல்வேறு இடங்ளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள நேருஜிநகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது37). கூலி தொழிலாளி.

    இவருக்கும் தாளமுத்துநகரை சேர்ந்த முத்துமாரி (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் முத்துமாரியை உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

    அப்போது முத்துமாரி தற்கொலை செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் முதற்கட்டமாக தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர். எனினும் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே முத்துமாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் முத்துமாரியின் உடலில் பல்வேறு இடங்ளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கருப்பசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முத்துமாரியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை கொலை வழக்காக மாற்றிய போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவர் ஏன்? முத்துமாரியை கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகிறார்.

    ×