search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கழுக்குன்றம் அருகே மாமியாரை கொன்று தடுப்பணையில் வீசிய மருமகன்
    X

    திருக்கழுக்குன்றம் அருகே மாமியாரை கொன்று தடுப்பணையில் வீசிய மருமகன்

    • ஆனந்தன் மாமியார் சாந்தியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கி கொலை செய்தார்.
    • ஆனந்தனின் அக்காள் மகனான 15 வயது சிறுவன் கொலைக்கு உடந்தையாக இருந்தான்.

    திருக்கழுக்குன்றம்:

    திருக்கழுக்குன்றம் அருகே, வாயலூர் கிராமம் அருகில் உள்ள தடுப்பணையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூவத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இறந்து போன பெண்ணின் பெயர் சாந்தி(50) நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர். கணவரை இழந்த சாந்திக்கு மஞ்சு( 33) என்ற மகள் உள்ளார். இவரது கணவர் ஆனந்தன் (37) இவர் மரக்காணம் அருகே உள்ள புதுபாக்கம் பகுதியை சேர்ந்தவர்.

    சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சு மரக்காணம் -புதுபாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, ஆனந்தனை விட்டுபிரிந்து சென்று விட்டார். சாந்தி தனது மகள் மஞ்சு, ஆனந்தனுடன் வாழாத நிலையில் மாமியார் சாந்தி தனது மகள் பெயரில் உள்ள சொத்தை கேட்டு ஆனந்திடம் பலமுறை கேட்டார்.

    அதற்கு ஆனந்தன் சொத்தை கேட்டால் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இந்த நிலையில் சாந்தி தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுராந்தகம் சென்றார். அதனை அறிந்த மருமகன் ஆனந்தன் துக்க நிகழ்ச்சியில் மாமியார் சாந்தியிடம் ஊரில் உங்கள் பேரப்பிள்ளைகள் உங்களை பார்க்க வேண்டும் என கூறுகின்றனர்.

    ஒரு முறை வந்து உங்கள் பேரபிள்ளைகளை பார்த்து விட்டு செல்லுங்கள் என நைசாக பேசினார். பேரப்பிள்ளைகள் மீது பாசம் கொண்டு சாந்தியும் பார்க்க சென்றுள்ளார்.

    அந்த நேரத்தில் ஆனந்தன் மாமியார் சாந்தியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கி கொலை செய்தார். இதற்கு ஆனந்தனின் அக்காள் மகனான 15 வயது சிறுவன் உடந்தையாக இருந்தான். பின்னர் காரில் ஏற்றி வாயலூர் தடுப்பனை அருகே உடலை வீசி விட்டு சென்று விட்டனர். பின்னர் மறுநாள் சாந்தியின் விட்டிற்கு சென்று சாந்தி வளர்த்து வந்த ஆடு, மற்றும் மாடுகளை ஏற்றி வந்து விட்டனர்.

    நத்தேடு கிராமமக்கள் சிலர் சந்தேகப்பட்டு, கூவத்தூர் போலீசாரிடம் தெரிவித்த தகவலின் படி மருமகன் ஆனந்தன் மற்றும் அவரது சகோதரி மகன் 15 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் விசாரித்ததில் மாமியாரை கொலை செய்ததை ஆனந்தன் ஒப்புக்கொண்டார். பின்னர் ஆனந்தனை செங்கல்பட்டு சிறையிலும், சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும் போலீசார் அடைத்தனர்.

    Next Story
    ×