search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் தீவிரம்"

    • வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.
    • இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் ரவி-ரங்கநாயகி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு இவர்களுக்கு தெரிந்த சிவக்குமார்-பிரவீனா ஆகியோர் தனது உறவினர் உதயகுமார் என்பவர் பவானியில் புதிதாக ஜவுளி நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், அதற்கு பங்குதாரர்கள் வேண்டும் என கூறியுள்ளனர்.

    மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்க உள்ளதாக ஆசை வார்த்தை கூறியு ள்ளனர்.இதனை நம்பிய தம்பதியினர், ரங்கநாயகிற்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை உதய குமா ரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் பவானியில் விநாயகா இன்டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    தொடர்ந்து ரங்கநாயகியின் சொத்து ஆவணங்களை சிவக்குமார், உதயகுமார், பிரவீனா மற்றும் 2 ஆகிய 5 பேர் கும்பலாக சேர்ந்து கொண்டு வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.

    பின்னர் ரங்கநாயகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனை யடுத்து போலீசார் தலைமறை வான 5 பேரையும் தேடி வந்தனர். இதில் தாராபுரத்தை சேர்ந்த ஜவுளி கடையில் பணியாற்றி வரும் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த மோசடிக்கு முக்கிய காரணமான சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நாகமலை புதுக்கோட்டையில் நடந்த பெண் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • அந்த பெண் செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜாமணி என தெரியவந்துள்ளது

    மதுரை

    மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு முட்புதரில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த கல்யாணி என்ப வரின் மனைவி ராஜாமணி என தெரியவந்துள்ளது.

    இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? நகை-பணத்துக்காக மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு உடலை வீசிச்சென்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை.

    இதனால் கொலை யாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
    • காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர்.

    சென்னிமலை, 

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் அதே பகுதியில் ஈங்கூர் பாலப்பாளையம் பிரிவு அருகே உள்ளது. கடந்த 23-ந் தேதி மாலையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் சத்தியமூர்த்தி (47) என்பவர் பாலப்பாளையம் பிரிவு கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனை முடிந்த பிறகு ரூ.23 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ஈங்கூரில் உள்ள நிறுவனத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பாலப்பா ளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது வேறு ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சத்திய மூர்த்தியை வழிமறித்து காருடன் கடத்தி சென்றனர். பின்னர் ஈரோடு அருகே ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் காட்டு பகுதியில் சத்தியமூர்த்தியை காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

    இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரன் என்பவர் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் செ ன்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். மேலும் பல்வேறு பகுதி களில் கண்காணிப்பு கேமரா க்களையும் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நால்ரோடு என்ற இடத்தில் தனிப்படை போலீசார் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர். பின்னர் அவர்களை சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா, கண்ணங்குடி அருகே கள்ளர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மனோகர் (வயது 29) என்பதும், மற்றொருவர் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் நவநீதன் (வயது 27) என்பதும் தெரிய வந்தது. இதில் மனோகர் கடந்த 8 வருடங்களாக சத்தியமூர்த்தி வேலை செய்யும் அதே நிறுவனத்தில் ஸ்டோர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மற்றொருவரான நவநீதன் என்பவரும் அதே நிறுவனத்தில் 6 மாதங்கள் வேலை செய்து பின்னர் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

    மனோகரும், நவநீதனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது மனோகர் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் அந்த நிறுவனத்தில் தினமும் சத்தியமூர்த்தி பண பரிவர்த்தனைக்காக அதே பகுதியில் உள்ள கிளை நிறுவனத்திற்கு சென்று வந்ததை மனோகர் கண்கா ணித்து ள்ளார். இது பற்றி தனது நண்பர் நவநீதனுக்கு தெரிவித்துள்ளார். பின்னர் இந்த தகவலை மனோகரும், நவநீதனும் தங்களது உறவி னர்களுக்கு தெரிவித்து ள்ளனர். அவர்கள் இந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து மனோகர் மற்றும் நவநீத னின் உறவினர்கள் 4 பேர் சத்தியமூர்த்தியை கண்கா ணித்து அவர் வரும்போது காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சம் பணத்தை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து பணம் கொள்ளை போன தற்கு உடந்தையாக இருந்த மனோகர் மற்றும் நவநீதனை சென்னிமலை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மனோகர் மற்றும் நவநீதன் கொடுத்த தகவலின் பேரில் பணத்தை கொள்ளை யடித்து சென்ற தலை மறைவான 4 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி, மார்ச்.2-

    கன்னியாகுமரி நடுத்தெருவை சேர்ந்தவர் லால் சந்த் (வயது 55).

    இவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் பாலாஜி பேன்சி ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இங்கு மேலா ளராக பக்சாராம் (50) பணி யாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் உள் பக்க அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் கடையின் மேற் கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவர், கடையில்உள்ள கல்லா பெட்டியை திறந்து பார்த்தார். அப்போதுஅதில் வைத்திருந்தரூ.14ஆயிரத்து 500திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசா ரணைநடத்தினார்கள்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த னர். கடந்த 4 மாதங் களுக்கு முன்பு இதே கடையில் மேற் கூரையை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை அடிக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதில் துப்பு துலங்கு வதற்கு முன்பு இப்போது 2-வது முறையாக கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அதில் சந்தேகப்படும் படியான உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றம் கட்டிட தொழிலாளி கொலையில் தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • கடந்த சில வருடங்களாக முன் விரோதம் உள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பரங் குன்றத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). கட்டிட தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 13 வயதில் மகனும் உள்ள னர்.

    சுரேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் தீனதயாளன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக முன் விரோதம் உள்ளது.இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் தனது மகனுடன் சென்றபோது தீனதயாளன் மற்றும் அவரது நண்பர்கள் சிங்கராஜ், விக்னேஸ்வரன் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தீனதயாளன் உள்பட 3 பேரும் சுரேசை அரிவா ளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங் குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில் தீன தயாளன் வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்கள் சிங்கராஜ், விக்னேஸ்வரன் ஆகியோரு டன் சேர்ந்து அடிதடி, மிரட்டுவது, பெண்களை கேலி கிண்டல் செய்வது உட்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சுரேஷ் அவர்களை கண்டித்ததாக தெரிகிறது. ஏற்கனவே இருந்து வந்த முன் விரோதம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் தன்னை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த தீன தயாளன் உட்பட 3 பேர் குடிபோதையில் சுரேசை வெட்டி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையில் தலை மறை வாக உள்ள தீன தயாளன் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் ரவி தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளி களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    • பழைய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • கைது செய்யப்பட்ட குமரேசன், தமிழ்ச்செல்வன் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு இந்திரா நகரில் ஜெயின் சமூகத்தினர் வழிபடும் ஜெயின் கோவில் உள்ளது. கடந்த 11-ந் தேதி இரவு பூசாரி சுப்தேவ் என்பவர் கோவிலை பூட்டி சென்றார்.

    பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு மூலவர் மகாவீர் சிலையின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலி மற்றும் கோவிலில் வைக்கப் பட்டிருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கோவிலுக்குள் மர்ம நபர்கள் நுழைந்து உண்டி யலையும், நகையையும் திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் மணிக்கூண்டு பகுதியில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணசெட்டி தெருவை சேர்ந்த குமரேசன் (27) என்பதும், ஜெயின் கோவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் குமரேசன் கொடுத்த தகவலின் பேரில் திருட்டில் தொடர்பு உடைய வீரப்பன்சத்திரம் கொத்து க்காரர் தோட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த திருட்டு வழக்கில் கடலூரை சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரிடம் தான் திருட்டு போன நகை உள்ளது. அந்த பழைய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட குமரேசன், தமிழ்ச்செல்வன் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • ஈஸ்வரனை கடத்தியதாக சீனிவாசன், பிரைட் பால் ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.ஈஸ்வரன் (46). புன்செய்ப்புளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை அடித்து பணம் கேட்டு கடத்தி ரூ.1.50 கோடி பறித்து சென்றதாக புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்தது தெரிய வந்தது. அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறை வாகிவிட்டனர்.

    இதனையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரனை கடத்தியதாக சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (49). கோவை தொண்டாமுத்தூர் என். ஆர். நகரை சேர்ந்த பிரைட் பால் (40) ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சத்திய மங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×