search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police are keen to"

    • வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.
    • இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் ரவி-ரங்கநாயகி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு இவர்களுக்கு தெரிந்த சிவக்குமார்-பிரவீனா ஆகியோர் தனது உறவினர் உதயகுமார் என்பவர் பவானியில் புதிதாக ஜவுளி நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், அதற்கு பங்குதாரர்கள் வேண்டும் என கூறியுள்ளனர்.

    மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்க உள்ளதாக ஆசை வார்த்தை கூறியு ள்ளனர்.இதனை நம்பிய தம்பதியினர், ரங்கநாயகிற்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை உதய குமா ரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் பவானியில் விநாயகா இன்டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    தொடர்ந்து ரங்கநாயகியின் சொத்து ஆவணங்களை சிவக்குமார், உதயகுமார், பிரவீனா மற்றும் 2 ஆகிய 5 பேர் கும்பலாக சேர்ந்து கொண்டு வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.

    பின்னர் ரங்கநாயகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனை யடுத்து போலீசார் தலைமறை வான 5 பேரையும் தேடி வந்தனர். இதில் தாராபுரத்தை சேர்ந்த ஜவுளி கடையில் பணியாற்றி வரும் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த மோசடிக்கு முக்கிய காரணமான சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பழைய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • கைது செய்யப்பட்ட குமரேசன், தமிழ்ச்செல்வன் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு இந்திரா நகரில் ஜெயின் சமூகத்தினர் வழிபடும் ஜெயின் கோவில் உள்ளது. கடந்த 11-ந் தேதி இரவு பூசாரி சுப்தேவ் என்பவர் கோவிலை பூட்டி சென்றார்.

    பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு மூலவர் மகாவீர் சிலையின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலி மற்றும் கோவிலில் வைக்கப் பட்டிருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கோவிலுக்குள் மர்ம நபர்கள் நுழைந்து உண்டி யலையும், நகையையும் திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் மணிக்கூண்டு பகுதியில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணசெட்டி தெருவை சேர்ந்த குமரேசன் (27) என்பதும், ஜெயின் கோவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் குமரேசன் கொடுத்த தகவலின் பேரில் திருட்டில் தொடர்பு உடைய வீரப்பன்சத்திரம் கொத்து க்காரர் தோட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த திருட்டு வழக்கில் கடலூரை சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரிடம் தான் திருட்டு போன நகை உள்ளது. அந்த பழைய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட குமரேசன், தமிழ்ச்செல்வன் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • ஈஸ்வரனை கடத்தியதாக சீனிவாசன், பிரைட் பால் ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.ஈஸ்வரன் (46). புன்செய்ப்புளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை அடித்து பணம் கேட்டு கடத்தி ரூ.1.50 கோடி பறித்து சென்றதாக புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்தது தெரிய வந்தது. அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறை வாகிவிட்டனர்.

    இதனையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரனை கடத்தியதாக சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (49). கோவை தொண்டாமுத்தூர் என். ஆர். நகரை சேர்ந்த பிரைட் பால் (40) ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சத்திய மங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×