search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1.5 கோடி மோசடி: தலைமறைவாக இருக்கும் தந்தை, மகனை பிடிக்க போலீசார் தீவிரம்
    X

    ரூ.1.5 கோடி மோசடி: தலைமறைவாக இருக்கும் தந்தை, மகனை பிடிக்க போலீசார் தீவிரம்

    • வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.
    • இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் ரவி-ரங்கநாயகி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு இவர்களுக்கு தெரிந்த சிவக்குமார்-பிரவீனா ஆகியோர் தனது உறவினர் உதயகுமார் என்பவர் பவானியில் புதிதாக ஜவுளி நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், அதற்கு பங்குதாரர்கள் வேண்டும் என கூறியுள்ளனர்.

    மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்க உள்ளதாக ஆசை வார்த்தை கூறியு ள்ளனர்.இதனை நம்பிய தம்பதியினர், ரங்கநாயகிற்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை உதய குமா ரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் பவானியில் விநாயகா இன்டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    தொடர்ந்து ரங்கநாயகியின் சொத்து ஆவணங்களை சிவக்குமார், உதயகுமார், பிரவீனா மற்றும் 2 ஆகிய 5 பேர் கும்பலாக சேர்ந்து கொண்டு வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.

    பின்னர் ரங்கநாயகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனை யடுத்து போலீசார் தலைமறை வான 5 பேரையும் தேடி வந்தனர். இதில் தாராபுரத்தை சேர்ந்த ஜவுளி கடையில் பணியாற்றி வரும் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த மோசடிக்கு முக்கிய காரணமான சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×