search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare"

    • மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்
    • மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங் கப்பட்டு உள்ளன.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநா யக்கன்பாளையம் அருகே கூடலூரில் மாவட்ட வரு வாய் அலுவலகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வடக்கு வருவாய் கோட்டாட்டாட்சி யர் கோவிந்தன், கூடலூர் நகராட்சி தலைவர் அறி வரசு, பேரூராட்சித்தலைவர் விஸ்வபிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது சமூகப்பா துகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 60 ஆயிரமும், வருவாய் துறை மூலம் 79 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 971 ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 57 பேருக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் இணையவழி பட்டாவும், மகளிர் சுய உதவிக்குழுவில் 2 பேருளுக்கு 28 லட்சம் மதிப்பிலான மானியத் தொகை, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 4 பேருக்கு 7 ஆயிரத்து 805 ரூபாய் மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதில் தாசில்தார் தங்கராஜ், கமிஷனர் பால்ராஜ், சிறப்பு தாசில்தார்கள் யமுனா, சரண்யா, நகராட்சி துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சபி அஹமது, நந்தினி, சபின் அஹமதுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 34 பயனாளிகளுக்கு ரூ7.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில்எபொதுமக்களிடம் இருந்து 377 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதன்படி தேவகோட்டை வட்டத்தை சேர்ந்த ராசு என்பவர் பாம்பு கடித்து இறந்ததையொட்டி அவரது குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத் திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான் இடுபொருட் களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் ரூ.7 ஆயிரத்து 200 மானி யத்துடன் கூடிய மா பழக்கன்று மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.மானாமதுரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தின் சார்பில் 9 உறுப்பினர்களுக்கு ரூ.6 லட்சத்திற்கான கறவை மாட்டு வளர்ப்பிற்கு கடன் திட்டத்திற்கான ஆணை களையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், திருக்கோஷ்டியூர் மற்றும் இடைக்காட்டூர் நியாயவிலை கடைகளில் விற்பனை யாளர்களாக தேர்வு பெற்ற முதல் பரிசு ரூ.4ஆயிரத்தை யும், 2-ம் பரிசு ரூ.3ஆயிரத் தையும் கலெக்டர் வழங்கி னார்.

    சிவகங்கை மற்றும் சக்கந்தி நியாயவிலை கடை களில் எடையாளர்களாக தேர்வுபெற்ற முதல் பரிசு ரூ.3ஆயிரம், 2-ம் பரிசு தொகை ரூ.2ஆயிரத்திற்கான காசோலைகள் என மொத்தம் 34 பயனாளி களுக்கு ரூ.7லட்சத்து 20 ஆயிரத்து 700 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா பனங்குப்பத்தில் நடைபெற்றது.
    • விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா பனங்குப்பத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் .சுடர்கொடி வரவேற்புரை ஆற்றினார். திட்ட அறிக்கையை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குணசேகர் வாசித்தார். இம்முகாமின் நிறைவு விழாவில் விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் கலந்து கொண்டு மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி பாராட்டி கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,

    இந்த முகாமானது கடந்த ஒரு வாரமாக சகாதேவன்பேட்டை, இராமையன்பாளையம், பனங்குப்பம், நல்லரசன்பேட்டை, தொடர்ந்தனூர் ஆகிய ஊர்களில் நடைபெற்றிருக்கிறது. முகாமின் மூலம் இந்த 5 ஊர்களிலும் மழை நீர் சேகரிப்பின் அவசியம், சாலைகளைச் சீரமைத்தல், கோயில்களைச் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், சிறு சேமிப்பின் அவசியம், எய்ட்ஸ் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு. இயற்கை உணவு முறையின் அவசியம், பிற நோய்களின் தன்மைகளை எடுத்துரைத்தல் போன்ற பணிகளை செய்யத் வலியுறுத்தி உள்ளீர்கள் என்பது வரவேற்கத்தக்கது. மேலும் மாணவர்களாகிய நீங்கள் இதுபோன்ற சமூகப் பணியில் ஈடுபடுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதில் கோலியனூர் யூனியன் சேர்மன் சச்சிதாநந்தம், சகாதேவன்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பிரபலட்சுமி குமார், கவுன்சிலர் கிருபாநிதி பனங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி மணி,கவுன்சிலர் பச்சையம்மாள் இன்பசேகரன் தொடர்ந்தனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா செந்தில் குமார், தளவானூரி கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கேசவன், முன்னாள் தலைவர்கள் ராஜேஸ்வரி சுதாகர், செந்தில்குமார், துணைத்தலைவர்கள் சுதா -சங்கர் , சரவணன், அன்புசேகர் விழுப்புரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் . சிவகங்கா . பேராசிரியர் கார்த்திகேயன் . இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் தனம் விஜயரங்கம், குணசேகர், சுடர்கொடி, சத்யா, ஹரிகரன் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களும் கிராமப் பொதுமக்களும் கல்லூரி பேராசிரியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் விஜயரங்கம் நன்றி உரையாற்றினார்.

    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    மதுரை

    காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய செயலா ளர் பால்ச்சாமி தேவர் படத்திறப்பு, பிரைஸ் அறக் கட்டளை தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி னார். தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், ராஜேந்திரன், ஜெயப்பெருமாள், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்ெதாகை, விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், நெல் விதை கள், பெண்களுக்கு சேலை, தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு சைக்கிள் ஆகியவற்ைற அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கி னார்.

    இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., திருச்சுழி யூனியன் சேர்மன் பொன்னுத்தம்பி, காரியா பட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லம், போஸ் தேவர், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கைகால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகளையும் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை ரிங்ரோடு கலைஞர் திடலில் இன்று மாலை 75 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    மதுரை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தலின்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நலத்தி ட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரையில் இன்று நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.

    பாண்டிகோவில் ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த விழாவிற்கு கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்குகிறார். இதில் 75 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.180 கோடி கடன் உதவிளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    இந்த விழாவில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், மேயர் இந்திராணி பொன் வசந்த், சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தை வேலு, அக்ரி கணேசன் மற்றும் மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகுபாண்டி, இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜி. பி. ராஜா, மூவேந்திரன், வைகை மருது,எஸ்ஸார் கோபி, அதலை செந்தில் குமார், ஈஸ்வரன் போஸ் முத்தையா கிருஷ்ணா பாண்டி குட்டி என்ற ராஜரத்தினம், பாலா என்ற பாலசுப்பிரமணியன், நேதாஜி ஆறுமுகம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, வாசு, ரோகிணி பொம்மை தேவன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ரூ.1.50லட்சம் மதிப்பிலான சீருடைகளுடன், பண்டிகை கால உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருமங்கலம்

    தீபாவளியையொட்டி திருமங்கலம் நகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1.50லட்சம் மதிப்பிலான சீருடைகளுடன், பண்டிகை கால உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    துணைத் தலைவர் ஆதவன் அதியமான், சுகாதார அலுவலர் சண்முகவேல், முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமார்,ீ கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னச்சாமி, சங்கீதா மற்றும் சுகாதார பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை.
    • பின்னர் அன்னதானம் நடைபெற்றது.


    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசாமி கோவிலுடன் இணைந்த சொர்ண மலை கதிர்வேல் முருகன் கோவிலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீநிவாச பஸ் சர்வீஸ் தொழிலதிபர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கமலேஸ் தீப்பெட்டி ஆலை அதிபர் நடராஜன் வரவேற்று பேசினார். மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன், முன்னாள் அறநிலையத்துறை அதிகாரி மலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியன் பாண்டியன் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அன்னதான நிகழ்ச்சியில் ஆஞ்சநேயர் விலாஸ் கடலைமிட்டாய் அதிபர் சக்திவேல், தூத்துக்குடி புரோட்டா கடை அதிபர் முத்து பிரகாஷ், பத்திரம் எழுத்தர் செல்லையா,

    தொழிலதிபர்கள் தனபால், அசோக் மாறன், அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் லவராஜா, சண்முகசுந்தரம், மாரிமுத்து, செல்வம், சுப்பிரமணியன், முருகன், முத்துமாரியப்பன், பொண்ணுபாண்டி, காளிராஜ், பாலமுருகன், கதிரேசன் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பிக்நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக் நகர் பகுதி கழகம் சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
     
    நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவரணி உமரிசங்கர், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், ஸ்பிக் நகர் பகுதி  தி.மு.க. செயலாளர்  பொன்னரசு, 58-வது வட்டம் கருப்பசாமி, நிர்வாகிகள் சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், மரியகிராஜன், அந்தோணிராஜ், எஸ்.ஆர். ஜெ.அருண் குமார், கே.பி.ஆர்.ராஜ், திருமணி ஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர்கள் 58-வது வார்டு பச்சிராஜ், 55-வது வார்டு ராஜதுரை, அத்திமரப்பட்டி பால்பாண்டி நாடார், தங்கராஜ், கல்பனா, வசந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    சாத்தான்குளம் வட்டத்தில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் 100 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது.
    சாத்தான்குளம்:
     
    சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.  புகாரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.   

    2-ம் நாளான நேற்று பிடானேரி, எழுவரைமுக்கி, சாத்தான்குளம், உள்வட்டம், பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டியிருப்பு, புதுக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குறை தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். 

    அதில் பெறப்பட்ட 206 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் உடனடியாக 100 பேர்களுக்கு  பட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட  உதவிகள் வழங்கப்பட்டன.  

    இதில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், தாசில்தார் தங்கையா, மண்டல துணை தாசில்தார் மைக்கேல், தலைமையிடத்து  துணை தாசில்தார் கோமதி சங்கர், வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம் உள்பட பலர் கொண்டனர்.

    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ×