search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை ரிங்ரோடு கலைஞர் திடலில் 75 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடை.

    மதுரை ரிங்ரோடு கலைஞர் திடலில் 75 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    • மதுரை ரிங்ரோடு கலைஞர் திடலில் இன்று மாலை 75 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    மதுரை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தலின்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நலத்தி ட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரையில் இன்று நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.

    பாண்டிகோவில் ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த விழாவிற்கு கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்குகிறார். இதில் 75 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.180 கோடி கடன் உதவிளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    இந்த விழாவில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், மேயர் இந்திராணி பொன் வசந்த், சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தை வேலு, அக்ரி கணேசன் மற்றும் மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகுபாண்டி, இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜி. பி. ராஜா, மூவேந்திரன், வைகை மருது,எஸ்ஸார் கோபி, அதலை செந்தில் குமார், ஈஸ்வரன் போஸ் முத்தையா கிருஷ்ணா பாண்டி குட்டி என்ற ராஜரத்தினம், பாலா என்ற பாலசுப்பிரமணியன், நேதாஜி ஆறுமுகம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, வாசு, ரோகிணி பொம்மை தேவன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×