search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary"

    • திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதனைத்தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மதுரை

    திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் திருமங்கலம் கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், மதுரை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா, விடத்தகுளம் உதவி மருத்துவர் கஜேந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் பிரபாகரன், சீனிவாச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை மற்றும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • மானூர் யூனியன் பேட்டை ரூரல் ஊராட்சி கொண்டாள வளவு சமுதாய நலக்கூடத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • முகாமில் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கு தடுப்பூசி , சத்து மாவு மற்றும் சினை ஊசி போடப்பட்டது.

    நெல்லை:

    மானூர் யூனியன் பேட்டை ரூரல் ஊராட்சி கொண்டாள வளவு சமுதாய நலக்கூடத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் வரவேற்று பேசினார். ஊராட்சி துணைத்தலைவர் சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட கால்நடைத்துறை துணை இயக்குனர் தியோபிலஸ் ரோஜர், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கலையரசி, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ஜான் சுபாஷ் தொழில்நுட்ப உரை ஆற்றினர். சிறப்பு விருந்தினராக சென்னை முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர் சத்யநாராயணன் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

    முகாமில் பேட்டை ரூரல் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மணிகண்டன், ஹரி நாராயணன்,அம்பை உதவி இயக்குனர் தங்கராஜ், ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கால்நடை உதவி மருத்துவர் ரேவதி நன்றி கூறினார்.இந்த முகாமில் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கு தடுப்பூசி , சத்து மாவு மற்றும் சினை ஊசி போடப்பட்டது.

    • இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நற்செயல் சொசைட்டி சார்பில் 22-வது அகில இந்திய மருந்தியல் நச்சியல் துறை தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நற்செயல் சொசைட்டி சார்பில் 22-வது அகில இந்திய மருந்தியல் நச்சியல் துறை தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை தாங்கினார். நாமக்கல் கால்நடை மருத்து வக் கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்றார். இதில் உத்தர பிரதேச கால்நடை மருத்துவக் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ வஸ்தவர, ராஜஸ்தான் பல்கலை துணை வேந்தர் சதீஷ் கே கர்க், ஐ.எஸ்.வி.பி.டி தலைவர் தாக்கர், கருத்தரங்க அமைப்புச் செயலாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கருத்தரங்கம் முடிவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்வகுமார் கூறியதாவது:-

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை மூலம் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை பிரிவில் பி.வி.எஸ்.சி கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பிரிவில் பி.டெக் உணவு தொழில்நுட்பம், பி.டெக் பால்வளம், பி.டெக் கோழி வளர்ப்பு ஆகிய பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது 2023-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியல் ஏற்கனவே கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

    கிராமப்புற மற்றும் 7.5 சதவீத அரசு ஒதுக்கீடுகள் வழங்கப்படும் இடங்கள் விரைவில் நிரப்பப்படும். பொது பிரிவு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை இந்த வாரத்தில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார்.

    முக்கூடல்:

    பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகள், கோழி ஆகியவற்றிற்கு சிறப்பு மருத்துவம் அளிக்கப்பட்டது. சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளை மருத்துவத்திற்காக மக்கள் கொண்டு வந்தனர்.

    கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார். முக்கூடல் கால்நடை உதவி மருத்துவர் ஹேமாசாயி, அத்தாள நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் முயல்வி ஆகியோர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை உதவியாளர் தர்மலிங்கம் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர். 

    • மேலும் கால்நடைகளுக்கு தாது உப்புக்களும், சிறந்த கன்று பராமரிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
    • பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முகாமை தொடங்கி வைக்கிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முகாமை தொடங்கி வைக்கிறார். இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் சிறப்பு மகப்பேறியியல் மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட உள்ளது.

    மேலும் கால்நடைகளுக்கு தாது உப்புக்களும், சிறந்த கன்று பராமரிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. எனவே இக்கிராம மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து முகாமில் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊராட்சி மன்றம் சார்பில் கால்நடை மருத்துவத்துறை பற்றிய கண்காட்சி முகாம் நடைபெற்றது.
    • குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்றம் சார்பில் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடை மருத்துவத்துறை பற்றிய கண்காட்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மனோரா ரோட்டரி சங்க தலைவர சிவச்சந்திரன் தலைமை வகித்தார். முகாமை பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார்.

    கால்நடைமருத்துக்கல்லூரி முதல்வர் டாக்டர் நர்மதா, கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சுமதி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கிடாசலம், சங்க முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன், விவேகானந்தன், அண்ணாத்துரை மற்றும் உறுப்பினர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்துகொண்டனர்.

    முகாம் ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவர் தெய்வ விருத்தம் செய்திருந்தார்.

    செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார். முகாமில் குடற்புழு நீக்கம், சுண்டுவாத அறுவைச் சிகிச்சை, அல்ட்ரா ஸ்கேன் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது. 1800 கால்நடைகள் பயன்பெற்றன.

    • பெரும்பத்தூர் கால்நடை மருந்தக கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது.
    • விழாவில் சதன்திருமலைகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், மணலூர் ஊராட்சியில், மணலூர் கிராமத்தில், பெரும்பத்தூர் கால்நடை மருந்தக கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சதன்திருமலைகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் லாலா சங்கரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வி, மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி, பெரும்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவசேனா நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    கால்நடை பராமரிப்பு துறை நெல்லை மண்டல இணை இயக்குநர் டாக்டர். பொன்வேல், கோட்ட உதவி இயக்குநர் டாக்டர். கலையரசி, சங்கரன்கோவில் உதவி இயக்குநர் டாக்டர் ரஹமத்துல்லா மற்றும் மருத்துவர்கள் மகிழன், சுருளிராஜ், வசந்தா, ராஜா, சசிதரன், கால்நடை ஆய்வாளர் கோபால், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முத்துமாரியப்பன், அனிதா ஆகியோர் விழா ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் அருகில் புதிதாக ரூ.35.19 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர் நடராஜன், முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு, ஆர்.எஸ்.மங்கலம் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்து விளக்கேற்றி கால்நடை மருத்துவமனையை திறந்துவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் சிவகுமார், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர், முன்னாள் யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த், யூனியன் ஆணையாளர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் வைரவன், கால்நடைத்துறை மருத்துவர்கள் ராஜா, மனிஷா, கனிஅமுதன், கொத்திடல்-களக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், முருகபூபதி, அஜய்நாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குமாரபாளையத்தில் புதிதாக பரவி வரும் கால்நடை நோயால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு ஏற்பட்டு, அது அனைத்து கால்நடைகளுக்கும் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார் ஆகியோர் நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இது சாதாரண வைரஸ் நோய், இதற்காக அச்சப்பட வேண்டியதில்லை என்று கூறினர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கால்நடை டாக்டர்கள் அச்சப்படா தீர்கள் என்றாலும், கால்நடைகளின் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து விவசாயிகளும் மருத்துவமனைக்கு தங்கள் கால்நடைகளை அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்வதென்பது சாத்தியமில்லை.

    ஆகவே ஒவ்வொரு கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு தடுப்பூசி போட்டால், விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதோடு பல கால்நடைகளை நோய் பாதிப்பு, நோய் பரவலில் இருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
    உடுமலை:

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கால்நடை பராமரிப்புத்துறையில் புதிதாக 854 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கும் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் கட்டமாக விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் முழுமையாக வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன.

    கறவைப்பசு வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு கறவைப்பசுக்கள் இந்த மாதத்தில் வழங்கப்படும். விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.
    திருநெல்வேலியில் கால்நடை, கோழித்தீவன தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கையில் எம். எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

    பசுந்தீவனம் வீணாவதை தவிர்க்க ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு தானியங்கி புல் வெட்டும் கருவிகள் 75 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்படும். விவசாயிகள் வளர்க்கும் சேலம் மேச்சேரி செம்மறி ஆடுகளின் மரபுத் தரம் உயர்த்தப்படும். மாட்டினம் மற்றும் ஆட்டினங்கள் ரூ.6.29 கோடி செலவில் காப்பீடு செய்யப்படும்.

    கால்நடை நிலையங்களில் மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ்) மற்றும் அசோலா செயல்விளக்க அலகுகள் ஏற்படுத்தப்படும். 500 கால்நடை நிலையங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்மாதிரி கால்நடை கட்டுப்பாட்டுக் கருவிகள் வழங்கப்படும்.

    ஈச்சங்கோட்டை, ஓசூர், உதக மண்டலம் கால்நடைப் பண்ணைகளில் உறைவிந்து உற்பத்தி நிலையங்களில் தரமான உறைவிந்தைப் பெறுவதற்கு ஏதுவாக பொலிகாளைகள் மற்றும் காளைக் கன்றுகளுக்கு கால்நடை கொட்டகைகள் ஏற்படுத்தப்படும்.

    கால்நடை நிலையங்களில் உள்ள குளிர் சங்கிலி வசதிகளை மேம்படுத்த 480 தொடர் குளிர் சாதனப் பெட்டிகள், ஒரு குளிர் பதன அறை, ஆயிரத்து 61 குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் ஆயிரத்து 500 தடுப்பூசிப் பெட்டிகள் கால்நடை நிலையங்களுக்கு வழங்கப்படும்.

    திருநெல்வேலியில் கால்நடை மற்றும் கோழித்தீவன தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும். சென்னை மாதவரத்தில் ஊரக கோழி உள்ளடு மற்றும் திறன் வளர்ப்பு மையம் அமைக்கப்படும்.

    கால்நடை மற்றும் கோழியின நோய்களைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான மையம், சென்னை மாதவரத்தில் ஏற்படுத்தப்படும்

    மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்) அலகுகளை உருவாக்க சென்னை மாதவரத்தில் மையம் அமைக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் ஆலம்பாடியில் இன ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். 
    ×