என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கால்நடை மருத்துவமனை கட்டிட திறப்பு விழா
  X

  கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் உள்ளார்.

  கால்நடை மருத்துவமனை கட்டிட திறப்பு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆர்.எஸ்.மங்கலத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.
  • அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

  ஆர்.எஸ்.மங்கலம்

  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் அருகில் புதிதாக ரூ.35.19 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.

  கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர் நடராஜன், முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு, ஆர்.எஸ்.மங்கலம் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

  அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்து விளக்கேற்றி கால்நடை மருத்துவமனையை திறந்துவைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் சிவகுமார், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர், முன்னாள் யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த், யூனியன் ஆணையாளர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் வைரவன், கால்நடைத்துறை மருத்துவர்கள் ராஜா, மனிஷா, கனிஅமுதன், கொத்திடல்-களக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், முருகபூபதி, அஜய்நாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×