search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varalakshmi Sarathkumar"

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். #VishalMarriage #Vishal #Anisha
    ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனாவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர், பட்டத்து யானை, பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, பாயும்புலி, மருது, கதகளி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக விஷால் கூறியிருக்கிறார்.

    இந்த நிலையில், விஷால் - வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் விஷால் நண்பர் மட்டுமே என்று வரலட்சுமி விளக்கம் அளித்திருந்தார். விஷால் கூறும்போது, வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர், சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன் என்று கூறியிருந்தார்.



    நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு, தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர்.

    மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.



    விஷாலுக்கு மணமகள் முடிவானதையும், ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி பிரத்யேகமாக தெரிவித்தார். #VishalMarriage #Vishal #Anisha

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாரி 2' படத்தின் விமர்சனம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi
    மாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் செய்து வந்த கடத்தல் தொழில்களை விட்ட தனுஷ், தான் வைத்திருந்த ஆட்டோவை சாய் பல்லவியிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல சேட்டை செய்கிறார். ரோபோ சங்கர் மற்றும் வினோத் இருவரும் தனுஷின் நண்பர்களாக எப்போதும் உடனிருக்கிறார்கள்.

    தனுஷை காதலிக்கும் சாய் பல்லவி, ரவுடி பேபி என்று தனுஷை கலாய்ப்பதுடன், அவரையே சுற்றி வருகிறார். தனுஷின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா. போதை மருந்து கடத்தி, போதைக்கு அடிமையான கிருஷ்ணாவை தனுஷ் நல்வழிப்படுத்தி, கடத்தல் தொழிலை விடவைக்கிறார்.



    போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று எப்படியாவது தனுஷை போதை பொருளை கடத்த வைக்க முயற்சி செய்கிறது. தனுஷ் அதற்கு ஒத்துப்போகாததால் தனுஷ் - கிருஷ்ணாவை பிரித்து, தனுஷை கொல்ல திட்டமிடுகின்றனர்.

    மறுபுறம் பகையுடன் ஜெயலில் இருந்து வெளிவரும் டோவினோ தாமஸ் தான் அனுபவித்த வலியை தனுஷுக்கு கொடுக்க நினைக்கிறார். கிருஷ்ணாவின் தம்பி மூலமாக தனுஷ் - கிருஷ்ணா இருவரையும் பிரித்து விடும் டோவினோ, தனுஷுக்கு செக் வைக்கிறார். 

    இதில் சாய் பல்லவியும் சிக்கிக் கொள்கிறார். சாய் பல்லவியை காப்பாற்றுவதற்காக தனுஷ் அவருடன் தலைமறைவாகிறார். இதற்கிடையே டோவினோ பெரிய தாதாவாகி, அரசியலில் இறங்க முயற்சிக்க, முக்கிய பொறுப்பில் இருக்கும் வரலட்சுமி தனுஷை தேடுகிறார்.



    கடைசியில், வரலட்சுமி தனுஷை கண்டுபிடித்தாரா? தனுஷ், சாய் பல்லவி என்ன ஆனார்கள்? தனக்கு வந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார்? தனுஷ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பினாரா? என்பதே சேட்டையான மாரியின் மீதிக்கதை.

    மாரியாக சேட்டை செய்வதில் தனுஷ் அப்படியே இருக்கிறார். மாரி முதல் பாகத்தில் இருந்ததைப் போலவே இதிலும் கலக்கியிருக்கிறார். முதல் பாதியில் மாரியாகவும், இரண்டாவது பாதியில் இயல்பான தோற்றத்திலும் வருகிறார். தனுஷை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி உள்ளூர் பெண்ணாகவே மாறியிருக்கிறார். தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் வரலட்சுமியை பாராட்டியே ஆக வேண்டும். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.



    தனுஷின் நண்பனாக கிருஷ்ணா அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். டோவினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தனுஷ் - டோவினோ இடையேயான மோதல் ரசிக்கும்படியாக இருந்தது. ரோபோ சங்கர், வினோத் இணைந்து காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மற்றபடி காளி வெங்கட், ஸ்டன்ட் சில்வா, வித்யா பிரதீப் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.

    முதல் பாதியில் தனுஷை மாரியாக காட்டிய இயக்குநர் பாலாஜி மோகன், இரண்டாவது பாதியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மாரியாக வரும் தனுஷை பழைய ஃபார்மில் காட்டியிருப்பது சிறப்பு. படத்தின் கதைக்கு ஏற்றபடி திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `மாரி 2' நல்லா செஞ்சிருக்கலாம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், வரலட்சுமியின் நடிப்பை புகழ்ந்து பேசினார். #Maari2 #Dhanush
    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா, வினோத், டோவினோ தாமஸ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இதில் நடிகர் தனுஷ் பேசியதாவது,

    வரலட்சுமியுடன் நடிக்க கஷ்டமாக இருந்தது. படத்தில் வரலட்சுமி ஒரு வசனம் சொல்கிறார் என்றால், நாம் அதற்கு பதில் யோசிப்பதற்கு முன்பே அதை சொல்லி முடித்துவிடுவார். வரலட்சுமியின் நடிப்பே வேற மாதிரி இருக்கும். அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்க அவர்களுக்கு ஏற்ப நடிக்க ஆரம்பித்தேன். படப்பிடிப்பில் ரோபோ ஷங்கர், வினோத் இல்லை என்றால் அன்றையே ஷீட் போரடிக்கும்.

     

    அவர்கள் இருவரும் இருந்தால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். மாரி 2 படத்தில் நடிக்க கேட்கும் போது ரோபோ ஷங்கர் கால்ஷீட் கொடுக்க முடியாதபடி பிசியாக இருந்தார். அது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. #Maari2 #Dhanush

    சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. #Sarkar #ARMurugadoss
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு பின்னர் வெளியானது. 

    படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளும் நீக்கப்பட்டன. 

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் முருகதாசுக்கு எதிராக புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முருகதாசுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

    இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான எப்.ஐ.ஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவராஜனிடம் பிரபலமானவர்கள் செய்தால் அது தவறு; பிரபலம் இல்லாதவர்கள் செய்தால் அது தவறில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். #Sarkar #ARMurugadoss
    சர்கார் பட விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். #Sarkar #ARMurugadoss
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு பின்னர் வெளியானது. 

    படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளும் நீக்கப்பட்டன.



    இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் முருகதாசுக்கு எதிராக புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முருகதாசுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முறையிட்டுள்ளார். இந்த வழக்கை இன்று பிற்பகலில் அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. #Sarkar #ARMurugadoss

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய படக்குழு மோதலை உறுதிப்படுத்தியது. #Maari2 #Dhanush
    `வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதேநாளில் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


    இந்த நிலையில், மாரி-2 டிசம்பர் 21-ஆம் தேதி, குறித்த தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம்  மோதலை மாரி-2 படக்குழு உறுதிசெய்துள்ளது. மேலும் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா இசையில், சமீபத்தில் வெளியான `ரவுடி பேபி' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Maari2 #Dhanush

    ‘சர்கார்’ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், வசூல் விவரங்களை தாக்கல் செய்ய கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay #MaduraiHighCourt
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரபாண்டி மதுரை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நவம்பர் 6-ந்தேதி தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் மதுரையில் 5-க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியானது.

    ஆன்லைனில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.500 முதல் 1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தேன். ஆனால் அரசு விதிகளை பின்பற்றாமல் பலமடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

    ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. ஆகவே அது தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.



    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதி கேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தனி நபர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி விதிக்குட்பட்ட கட்டணத்தை வசூலித்து அந்த நபர்கள் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாக இதுபோல கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘சர்கார்’ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் நவம்பர் 6 முதல் 16-ந் தேதி வரையில் மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #Sarkar #Vijay #MaduraiHighCourt

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. #Maari2 #Dhaush
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாகிறது.

    தனுஷ் தற்போது வரலாற்று கதையம்சம் கொண்ட படமொன்றை இயக்கி, நடித்து வருகிறார். #Maari2 #Dhanush

    கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் `சர்கார்' படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் வெற்றியை மிக்ஸி, கிரைண்டருடனான கேக் வெட்டி படக்குழு வெற்றியை கொண்டாடியுள்ளனர். #Sarkar #SarkarSuccessParty
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்'. 
    படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுக-வை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொழுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்ததால் எதிரிப்பு கிளம்பியது.

    அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்ததுடன், சர்கார் பட பேனர்களும் கிழிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், 6 நாட்களில் சர்கார் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.



    இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு சந்திப்பு நடந்தது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர். அந்த கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வடிவம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. #Sarkar #SarkarSuccessParty #SarkarSuccessMeet

    சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தொடுத்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்துள்ளனர். #ARMurugadoss #Sarkar
    விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுக-வை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

    மேலும் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. 

    அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்ததுடன், சர்கார் பட பேனர்களும் கிழிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

    இந்த நிலையில், படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழு அறிவித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது. 



    இதற்கிடையே படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய நேற்று இரவு போலீஸார் அவரது வீட்டின் கதவை தட்டியதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

    இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #ARMurugadoss #Sarkar #Vijay

    சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் சர்கார் படத்தின் டிக்கெட் வாங்க விஜய் ரசிகர்கள் கூடிய நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த வந்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sarkar #Vijay
    கூடுவாஞ்சேரி, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேஷ்வரா தியேட்டர் உள்ளது.

    இங்கு தீபாவளியையொட்டி நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது.

    படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று நடந்தது. டிக்கெட் எடுப்பதற்காக விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலை முதலே தியேட்டர் முன்பு குவிந்தனர்.

    இதனால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் உருவானது.

    இதுபற்றி அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

    ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரால் அவர்களை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

    இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் டிக்கெட் எடுக்க வந்திருந்தவர்கள் அலறியடித்து சுவர் ஏறிக் குதித்து ஓட்டம் பிடித்தனர். போலீசாரின் தடியடியில் ரசிகர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் தடியடி காரணமாக தியேட்டரில் சிறிது நேரம் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. #Sarkar #Vijay

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sarkar #Vijay
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மகேந்திர பாண்டி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். 

    அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் சர்கார் படத்துக்கு ரூபாய் 500 முதல் 1,000 வரை ஆன்லைனில் வசூலித்து விதி மீறலில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பும் நடைபெறுகிறது. எனவே, மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் 2017-ல் உள்துறை செயலர் (சினிமா) வெளியிடபட்ட அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.



    நேற்று இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்துவைத்தனர். #Sarkar #Vijay 

    ×