என் மலர்

  நீங்கள் தேடியது "GK Reddy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய் - தமன் குமார் - சுபிக்‌ஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நேத்ரா' படத்தின் விமர்சனம். #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika
  தமன் குமாரும், சுபிக்‌ஷாவும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், சுபிக்‌ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த திருமணத்தில் விருப்பமில்லாததால், கனடாவில் இருக்கும் தனது நண்பர் வினய்யிடம் உதவி கேட்கிறார் சுபிக்‌ஷா.

  இதையடுத்து தமன் குமார், சுபிக்‌ஷாவை கனடாவுக்கு வரவைக்கும் வினய், வேறுஒரு வேலையாக வெளிநாடு செல்கிறார். இந்த நிலையில், கனடா வரும் இவர்களுக்கு அந்த நாட்டு போலீசார் உதவுகிறார்கள். பின்னர், இமான் அண்ணாச்சி வேலை பார்க்கும் ஹோட்டலில் தமன் குமாருக்கு வேலை கிடைக்கிறது.  இந்த நிலையில், தமன் குமார் காணாமல் போகிறார். இதுகுறித்து சுபிக்‌ஷா, போலீசில் புகார் தெரிவிக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்க, தமன் குமார் என்ற ஒருவர் வரவேயில்லை என்றும், சுபிக்‌ஷா மட்டுமே வந்ததாகவும் அனைவரும் கூறுகின்றனர். இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க தொடங்குகிறார் வெங்கடேஷ். இதற்கிடையே வினய் கனடா திரும்புகிறார்.

  கடைசியில், தமன் குமாரை மாயமானதன் பின்னணி என்ன? அவர் என்னவானார்? அவரை யார் கடத்தினார்கள்? சுபிக்‌ஷா - தமன் குமார் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  தமன் குமார் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில் சுபிக்‌ஷா தனது திறமையை நிரூபித்திருக்கிறார். காதல், நட்பு, போராட்டம் என சுபிக்‌ஷாவை சுற்றியே கதை நகர்கிறது. கதையின் ஓட்டத்திற்கு வினய் முக்கிய காரணியாகிறார். வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். 

  இமான் அண்ணாச்சி ஓரிரு இடங்களில் காமெடி செய்கிறார். ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் காமெடி ஓரளவுக்கு வேலை செய்கிறது. மற்றபடி வெங்கடேஷ், ரித்விகா, வின்சென்ட் அசோகன், ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.  ஆள் தெரியாத ஒரு ஊரில் காதலனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். படம் பெரும்பாலும் கனடாவிலேயே உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாதி வேகமாக நகர, இரண்டாவது பாதியின் நீளம் அதிகமாக இருப்பது படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தியிருக்கலாம்.

  என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.

  மொத்தத்தில் `நேத்ரா' தெளிவில்லை. #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika #AVenkatesh 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். #VishalMarriage #Vishal #Anisha
  ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனாவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர், பட்டத்து யானை, பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, பாயும்புலி, மருது, கதகளி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

  தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக விஷால் கூறியிருக்கிறார்.

  இந்த நிலையில், விஷால் - வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் விஷால் நண்பர் மட்டுமே என்று வரலட்சுமி விளக்கம் அளித்திருந்தார். விஷால் கூறும்போது, வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர், சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன் என்று கூறியிருந்தார்.  நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு, தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர்.

  மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.  விஷாலுக்கு மணமகள் முடிவானதையும், ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி பிரத்யேகமாக தெரிவித்தார். #VishalMarriage #Vishal #Anisha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன், டப்பிங் பணிகளை துவங்கியிருக்கிறார். #Champion
  சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' திரைப்படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சுசீந்திரன் தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் படத்தின் டப்பிங் பணிகளும் இன்று துவங்கியிருக்கிறது. 

  சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையமாக வெளியான `வெண்ணிலா கபடி குழு', `ஜீவா' படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சாம்பியன் படத்தை கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கி இருக்கிறார்.

  இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்பிரகாஷ், ஆர்.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  அரோல் கோரொலி இசையமைக்கும் இந்த படத்துக்கு, சுஜித் சாரங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

  சுசீந்திரன் இயக்கத்தில் `ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #Champion

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரன் அடுத்ததாக இயக்கும் `சாம்பியன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கான காரணம் குறித்து சுசீந்திரன் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Champion #Suseenthiran
  விளையாட்டை மையப்படுத்திய வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் அடுத்ததாக `சாம்பியன்' என்ற படத்தை இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. 

  இந்த நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாதது குறித்து இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுசீந்திரன் கூறியிருப்பதாவது, 

  யுவன் ஷங்கர் - உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை... யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்... யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனை சுற்றியுள்ள நண்பர்கள் தான் (புதிய நண்பர்கள்) காரணம்... இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தின் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். 

  இவ்வாறு கூறியிருக்கிறார்.   இந்த படத்தில் ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாகவும், மிருணாளினி நாயகியாகவும் நடிக்கிறார்கள். ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அரோல் கொரலி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Champion #Suseenthiran

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவான வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா ஆகிய இரு படங்களும் வெற்றிபெற்ற நிலையில், தனது அடுத்த ஸ்போர்ஸ் படத்தை சுசீந்திரன் இன்று துவங்கியுள்ளார். #Champion
  சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.  இப்படம் எதிர்பார்த்தளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேநேரத்தில் ‘ஜீனியஸ்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

  இந்த நிலையில், சுசீந்திரன் அடுத்ததாக கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். `சாம்பியன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருப்பதாக சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   சுசீந்திரன் கூறியிருப்பதாவது, 

  `இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து `சாம்பியன்' என்ற திரைப்படத்தை துவங்கி உள்ளோம். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரோஷன் என்ற புதுதுமுக ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்' என்று கூறியிருக்கிறார். #Champion #Suseenthiran


  ×