என் மலர்tooltip icon

    சினிமா

    அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சுசீந்திரன்
    X

    அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சுசீந்திரன்

    சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவான வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா ஆகிய இரு படங்களும் வெற்றிபெற்ற நிலையில், தனது அடுத்த ஸ்போர்ஸ் படத்தை சுசீந்திரன் இன்று துவங்கியுள்ளார். #Champion
    சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.  இப்படம் எதிர்பார்த்தளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேநேரத்தில் ‘ஜீனியஸ்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

    இந்த நிலையில், சுசீந்திரன் அடுத்ததாக கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். `சாம்பியன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருப்பதாக சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 



    சுசீந்திரன் கூறியிருப்பதாவது, 

    `இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து `சாம்பியன்' என்ற திரைப்படத்தை துவங்கி உள்ளோம். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரோஷன் என்ற புதுதுமுக ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்' என்று கூறியிருக்கிறார். #Champion #Suseenthiran


    Next Story
    ×