என் மலர்

  நீங்கள் தேடியது "Anisha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishal #Anisha
  விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

  பதில்:- முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன்.

  ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் தண்டனைகள் போதாது என்பது என் கருத்து.

  கே:- அனிஷாவுடனான திருமணம் எப்போது?

  ப:- அக்டோபர் 9-ந் தேதி திருமணம், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

  கே:- மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் துப்பறிவாளன் 2 உறுதியாகிவிட்டதா?

  ப:- ஆமாம். ஆகஸ்டு 15-ந் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம்.

  கே:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளதே?

  ப:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் அரசு காட்டும் அக்கறையையும் ஆர்வத்தையும் பைரசி வி‌ஷயத்திலும் காட்டும் என நம்புகிறேன். காரணம் பைரசி தான் தமிழ் சினிமாவை அழித்துக்கொண்டு இருக்கிறது.  கே:- உங்கள் அணியில் இருந்து விலகிய ஆர்கே.சுரேஷ், உதயா இருவரும் நீங்கள் சிறு படங்கள் ரிலீஸ் செய்ய உதவவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?

  ப:- அவர்களுடைய படங்கள் நன்றாக இல்லை. அதனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதுதான் உண்மையான காரணம். ஒரு படத்தை 4 பேர் தான் பார்க்க வருகிறார்கள் என்னும்போது அந்த படத்தை 2 வாரங்கள் ஓட்டியே ஆக வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை நான் கட்டாயப்படுத்த முடியாது. அது ரஜினி படமோ புதுமுகத்தின் படமோ இதுதான் நிலைமை.

  கே:- தயாரிப்பாளர் சங்கத்தின் ரிலீஸ் ஒழுங்கு கமிட்டி ஏன் தோல்வி அடைந்தது?

  ப:- என் படத்தை நிறுத்துவதற்கு நீ யார் என்ற கேள்வி வரும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு படத்தை உருவாக்க போதிய நேரம் எடுத்துக் கொள்பவர்கள் ரிலீஸ் செய்ய மட்டும் அவசரப்படுகிறார்கள். மற்றவர்கள் வருமானத்தை சாப்பிட ஆசைப்படுபவர்கள் இருக்கும்வரை இந்த பிரச்சினை தீராது.

  கே:- தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் வந்தால் மீண்டும் போட்டியிடுவீர்களா?

  ப:- மீண்டும் போட்டியிடுவேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கையில் எடுத்த எந்த வி‌ஷயத்தையும் பாதியில் விடமாட்டேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #Vishal #Anisha #VishalAnisha #VishalWedsAnisha 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர். #Vishal #VishalAnisha #VishalAnishaEngagement
  நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

  விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர்.  விஷாலும், அனிஷாவும் சில மாதங்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்தனர். விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் தனியார் சொகுசு ஓட்டலில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். #Vishal #VishalAnisha #VishalWedsAnisha #VishalAnishaEngagement 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஷாலும், ஆந்திராவை சேர்ந்த நடிகை அனிஷாவும் காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் வைத்து வருகிற 16-ந் தேதி நடைபெற இருக்கிறது. #Vishal #Anisha #VishalMarriage
  நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகே திருமணம் என்று கூறி வந்தார்.

  இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகை அனிஷா ஆலா ரெட்டியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்திருந்தார். அன்றைய தினமே விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த செய்தியை உறுதி செய்தார்.

  பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். சில மாதங்களாக விஷாலும், அனிஷாவும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்துள்ளனர்.  விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

  இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி விஷாலிடம் கேட்டதற்கு திருமண தேதி பின்னர் முறையாக அறிவிக்கப்படும் என்று கூறினார். தனது திருமணம் சென்னையில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும் என்று விஷால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vishal #Anisha #VishalMarriage

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனிஷாவின் வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். #Vishal #VishalAnisha
  விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அனிஷாவிடம் காதலில் விழுந்தது பற்றி விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

  ’நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அனிஷாவை முதன்முதலாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. எங்கள் நட்பு கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து திருமணம் வரை வந்துள்ளது. நான் தெரு நாய்களை பற்றி ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். தெரு நாய்கள் பற்றிய படம் குறித்து நான் அனிஷாவிடம் தெரிவித்து அவரின் கருத்தை கேட்டேன். அந்த படம் குறித்த விவாதங்களின் போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நான் தான் காதலை முதலில் சொன்னேன்.  அனிஷாவை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளார். அனிஷா தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையும் செய்து வருகிறார். அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பது அவர் விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். அனிஷாவை பற்றிய ரகசியம் ஒன்றை சொல்கிறேன். அவர் புலிக்கு பயிற்சி அளிக்கும் திறமை கொண்டவர். அவர் எந்த புலியையும் எளிதில் தூங்க வைத்துவிடுவார். அப்படி ஒரு வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்’. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்பவரை திருமணம் செய்ய இருக்கும் விஷால், அவருடன் ஏற்பட்ட காதல் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். #Vishal #Anisha
  நடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் விரைவில் ஐதராபாத்தில் நடக்கிறது.

  ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சரிதா தம்பதியின் மகள் ஆவார். ‘அர்ஜூன் ரெட்டி’, ‘பெல்லி சூப்லு’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள அனிஷா, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கணை ஆவார்.

  அனிஷாவுடான காதல் குறித்து விஷால் கூறியதாவது:-

  கடந்த நவம்பர் மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த ‘அயோத்யா’ படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தார். அபூர்வா இயக்கத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் ‘ஆல் அபவுட் மிச்செலோ’ ஆங்கில படக்குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அப்படத்தில் அனிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரும்பாலான விவசாய குடும்ப பெண்கள் பணியாற்றுவதை கண்டு வியந்து இப்படத்தை தயாரிக்க முன்வந்தேன். அன்று முதல் படம் தொடர்பாக அனிஷாவை சந்தித்து வந்தேன்.

  தற்போது அது திருமணத்துக்கு வந்துள்ளது. அவரை கடவுள் எனக்காக அனுப்பி இருக்கிறார். அவரிடம் நான் தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன்.

  திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்க வேண்டாம் என்று கூற மாட்டேன். அவருக்கு எது இஷ்டமோ அதை செய்யலாம். சமீபத்தில் அனிஷா புலிக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்றை பார்த்தேன். அதில் புலிக்கு பயிற்சி அளித்து அதை தூங்க வைக்கிறார்.

  இந்த ஆண்டு மிருகங்கள் தொடர்பான படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறேன். இதில் அனிஷாவின் பங்களிப்பு, கருத்து கேட்க விரும்புகிறேன். எல்லாம் சரியாக அமைந்தால் இந்த ஆண்டு படம் இயக்குவேன். அதில் அனிஷாவும் இடம் பெறுவார்.  புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் எனது திருமணம் நடக்கும் என்று கூறி இருந்தேன். அதற்கு அனிஷாவும் சம்மதித்து உள்ளார். கட்டிடம் கட்டும் வரை காத்து இருப்பதாக கூறி உள்ளார்.

  இவ்வாறு விஷால் கூறினார்.

  இதற்கிடையே அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ``புதிய வாழ்க்கைக்குள் கால் பதிக்கிறேன். என்னோடு பயணிக்க, என் சுக துக்கங்களில் பங்குபெற என் காதலை நான் சந்தித்து விட்டேன். இவருக்குக்காகதான் என் வாழ்க்கை முழுவதும் காத்துக்கொண்டிருந்தேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Vishal #Anisha #VishalMarriage
  நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

  இந்த நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

  திருமணம் குறித்து விஷால் கூறியதாவது:-

  “எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டோம்.

  எங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்துவிட்டது. இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள்.  நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும்.”

  இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

  மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரவுகின்றன. இது எனது சொந்த வாழ்க்கை. எனது திருமணம் பற்றி நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். #Vishal #Anisha #VishalMarriage

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயோக்யா படத்தில் பிசியாக இருக்கும் விஷால், ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறினார். #VishalMarriage #Vishal #Anisha
  தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட நடிகர் விஷால் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் மனுதாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

  நடிகர் விஷால் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். திருமணம் பற்றி கேட்ட போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும்தான் திருமணம் செய்வேன் என்றும், நடிகையை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்வேன் என்றும் பலவாறு கூறிவந்தார்.

  தற்போது முதல் முறையாக அவரே தனது திருமண தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். மணமகள் பெயர் அனிஷா ரெட்டி. ஆந்திரா - தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தைச் சேர்ந்தவர். தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார்.  திருமணம் பற்றி ‘அயோக்யா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஷாலிடம் கேட்டபோது கூறியதாவது:-

  எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு. நாளை (வெள்ளிக்கிழமை) தான் எனது பெற்றோரும் அனிஷா பெற்றோரும் சந்தித்து பேசுகிறார்கள். இதில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி முடிவு செய்யப்படும்.

  இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். திருமண தேதியை இந்தவார இறுதியில் அறிவிப்போம். அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இது தெரிந்துவிட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன்.

  நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார். #VishalMarriage #Vishal #Anisha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். #VishalMarriage #Vishal #Anisha
  ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனாவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர், பட்டத்து யானை, பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, பாயும்புலி, மருது, கதகளி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

  தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக விஷால் கூறியிருக்கிறார்.

  இந்த நிலையில், விஷால் - வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் விஷால் நண்பர் மட்டுமே என்று வரலட்சுமி விளக்கம் அளித்திருந்தார். விஷால் கூறும்போது, வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர், சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன் என்று கூறியிருந்தார்.  நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு, தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர்.

  மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.  விஷாலுக்கு மணமகள் முடிவானதையும், ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி பிரத்யேகமாக தெரிவித்தார். #VishalMarriage #Vishal #Anisha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் ஏ.சி. எந்திரங்கள் வாங்கியதில் ரூ.37 லட்சம் மோசடி செய்ததாக டி.வி. நடிகை அனிஷா கைது செய்யப்பட்டது எப்படி என்று தகவல் வெளியாகியுள்ளது. #Anisha
  சின்னத்திரையில் பிரபலமான நடிகை அனிஷா ஏ.சி. எந்திரங்கள் வாங்கியதில் ரூ.37 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

  டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், டி.வி. தொடர் நடிகையாகவும் இருப்பவர் பூர்ணிமா என்கிற அனிஷா (34). இவருடைய கணவர் சக்திமுருகன் (38). இவர்கள் இருவரும் கிண்டி, நெசப்பாக்கம் ஆகிய இடங்களில் மின்சாதன பொருட்கள் வாங்கி விற்கும் நிறுவனங்களை நடத்தி வந்தனர்.

  இதில், பணம் வரவு- செலவு பொறுப்பாளராக அனிஷா இருந்து வந்தார். வாங்கி விற்கும் பொருட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கான காசோலைகளில் அனிஷாதான் கையெழுத்து போடுவார்.

  கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏ.சி. எந்திரங்களின் மொத்த விற்பனையாளர் பிரசாந்த்குமார் என்பவரிடம் ஏ.சி. எந்திரங்களை வாங்கி விற்றனர். இதில் 107 ஏ.சி. எந்திரங்களை வாங்கி விட்டு அதற்கான பணத்தை கொடுக்கவில்லை.

  இந்த பணத்துக்காக டி.வி. நடிகை அனிஷா கையெழுத்து போட்டு கொடுத்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரசாந்த்குமார் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் அனிஷாவின் கணவர் சக்தி முருகன் தலைமறைவாகி விட்டார்.

  போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பண மோசடிக்கு டி.வி.நடிகை அனிஷா உடந்தையாக இருந்தது தெரியவந்தது. சக்தி முருகனின் சகோதரர் ஹரிகுமாரும், இவர்களுக்கு உதவியாக இருந்து வந்தார் என்பதும் தெரிந்தது.  இதையடுத்து, கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை அனிஷா, சக்திமுருகனின் தம்பி ஹரிகுமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சக்திமுருகனை தேடி வருகிறார்கள்.

  இதுபோல் மற்றொரு மோசடி தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் சக்தி முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாரை நூம்பல் பாலாஜி நகர் யுவராஜ் என்பவர் கொடுத்துள்ளார்.

  இதில் டிராவல் நிறுவனம் நடத்துவதாக கூறி சக்தி முருகன் 25-க்கும் அதிகமான கார்களை வாங்கி விட்டு அதன் உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதில் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டிராவல் மானேஜராக பணி புரிந்து வந்த ரமேஷ் (29) என்பவரும் தலைமறைவாகி விட்டார். இதிலும் அனிஷாவுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  இவைதவிர டி.வி. நிறுவனங்களில் விற்பதற்காக வாங்கிய ஏராளமான டி.வி.களுக்கும் சக்திமுருகன் பணம் கொடுக்கவில்லை என்று வளசரவாக்கம் போலீசில் மற்றொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

  இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இதில் சக்திமுருகன் எத்தனை லட்சம் மோசடி செய்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  ×