என் மலர்
சினிமா

யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சுசீந்திரன் அடுத்ததாக இயக்கும் `சாம்பியன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கான காரணம் குறித்து சுசீந்திரன் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Champion #Suseenthiran
விளையாட்டை மையப்படுத்திய வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் அடுத்ததாக `சாம்பியன்' என்ற படத்தை இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.
இந்த நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாதது குறித்து இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுசீந்திரன் கூறியிருப்பதாவது,
யுவன் ஷங்கர் - உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை... யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்... யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனை சுற்றியுள்ள நண்பர்கள் தான் (புதிய நண்பர்கள்) காரணம்... இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தின் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.
இவ்வாறு கூறியிருக்கிறார்.

இந்த படத்தில் ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாகவும், மிருணாளினி நாயகியாகவும் நடிக்கிறார்கள். ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அரோல் கொரலி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Champion #Suseenthiran
Next Story






