search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tysaiyanvilai"

    • டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர்.

    திசையன்விளை:

    வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி .எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

    9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர். அதற்கு ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நன்றி கூறினார். 

    • விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
    • சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது.

    திசையன்விளை:

    பிரசித்தி பெற்ற திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான கொடைவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் கலர் கோலப்போட்டி, நாடகம், இன்னிசை கச்சேரிகள், மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்சியாக நேற்று அன்னபூஜையுடன் விழா தொடங்கியது. காலை 11 மணிக்கு மன்னர் ராஜா கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க குதிரைகள் முன் செல்லமுத்து குடைபவனி வர மஞ்சள் பெட்டி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிவழியாக சென்று கோவிலை அடைந்தது.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது. மாலையில் சமய சொற்பொழிவு, இரவு கரகாட்டம், மகுட ஆட்டம், வில்லிசை, பரிசளிப்பு விழா, சிலம்பாட்டம், பொம்மலாட்டம் பேஷன் ஷோ, முன்னாள் அரசு வக்கில் பழனி சங்கர் சார்பில் நகைச்சுவை பட்டிமன்றம், இசை திறன் போட்டி, நள்ளிரவு சுவாமிக்கு விசேச அலங்கார பூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சுவாமி முட்டை விளையாட்டு உள்பட பல்வேறு நிகழ்சிகள் அதிகாலை வரை நடந்தது.

    விழாவில் ஸ்டார் சேம்பர் பிரிக்ஸ் ஏ.எஸ். குமார், கே.ஆர்.பி. டிரேடர்ஸ் என்ஜினீயர் கனகராஜ், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் டாக்டர் புஸ்பலெட்சுமி, டி.கே. ராஜா அண்ணாமலை, தங்கையா சுவிட்ஸ் கணேசன், முருகேசன், ஜி.பி.எம். குமார், ஆகாஷ், முன்னாள் அரசு கூடுதல் வக்கீல் பழனிசங்கர், ரோட்டரி அட்வகேட் கில்டா பழனிசங்கர், நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், தொழில் அதிபர் சரவணக்குமார், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி தலைவர் கமலா சுயம்புராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் செய்திருந்தார்.

    • தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கிவைத்தார்.
    • ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர். அணியும் விளையாடியது.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளை அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்- பெண் மின்னொளி கபடி போட்டி நேற்று இரவு தொடங்கியது.

    போட்டி தொடக்கம்

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து விளையாட்டு, வீரர்களை ஆர்.எஸ்.பாரதிக்கு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

    ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர். அணியும் விளையாடியது. இதில் அரியானா அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர் அணியும் விளையாடியது இதில் அரியானா அணி வெற்றிபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    போட்டி தொடக்க விழாவில் ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அனிதா பிரின்ஸ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ஆர்.சுபாஷ் தங்கையா கணேசன், ஜி.பி.எம்.குமார், நவ்வலடி சரவணகுமார், அப்புவிளை மகேஷ்வரன், அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இன்று மாலை திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து கபடி வீரர்கள்- வீராங்கனைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்துள்ளார்.

    • கொலை செய்யப்பட்ட முத்தையா, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
    • சுரேசும், மதியழகனும் சேர்ந்து கத்தியால் முத்தையாவை குத்திக்கொலை செய்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமி தாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா(வயது 19). இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கொலை

    நேற்று முன்தினம் இரவில் முத்தையா தன்னுடைய நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பின்னர் நீண்ட நேர மாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    உடனே அவரை குடும்பத்தினர், உறவினர்கள் தேடிப் பார்த்தபோது சுவாமிதாஸ் நகரில் உள்ள காட்டு பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    நண்பர்கள் சிக்கினர்

    கொலை செய்யப்பட்ட முத்தையா, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. எனவே காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக அவருடைய நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தையாவின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நண்பர்களில் ஒருவரின் கையில் காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

    அப்போது அவர் கூறுகையில், எங்களுடைய நண்பரான அப்புவிளை கக்கன் நகரை சேர்ந்த சுரேஷ்(19), மதியழகன்(31) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் வைத்து மது அருந்தினோம்.

    அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுரேசும், மதியழகனும் சேர்ந்து கத்தியால் முத்தையாவை குத்திக்கொலை செய்தனர். அதனை தடுக்க சென்ற எனக்கு காயம் ஏற்பட்டது என்றார்.

    இதையடுத்து கொலை செய்த சுரேஷ் மற்றும் மதியழகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே முத்தையா காதல் விவகாரத்தில் தான் கொலை செய்யப்பட்டார் என்று கூறி அவரது உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் போலீசார் அந்த கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

    • நகர்ப்புற உள்ளாட்சிகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    திசையன்விளை:

    ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் குறித்து அறிவிக்கப்படவில்லை.

    மேற்படி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட உள்ள மாதாந்திர மதிப்பூதியம் போன்று ஊரக உள்ளாட்சி பிரநிதிகளாக உள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சரிடம் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஒவ்வொரு மன்றத்திற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
    • மன்றத்தின் நோக்கம் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்களை வகுப்பு வாரியாக 6 குழுக்களாக பிரித்து இலக்கிய மன்றம், இயற்கை மன்றம், சேவை மன்றம், கணித மன்றம், கலை மற்றும் கைவினை மன்றம், நுண்கலைகள் மன்றம் என பிரித்தனர். ஒவ்வொரு மன்றத்திற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்க ப்பட்டனர். ஒவ்வொரு மன்றத்திலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவ்வுறுப்பினர்களுக்கு ஒரு தலைவர் மற்றும் துணைத்தலைவர் என தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுக விழா நடைபெற்றது.

    விழாவில் ஒவ்வொரு மன்ற உறுப்பினர்களும் தலைவர்- துணைத் தலைவர் எனத் தங்களை அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மன்ற உறுப்பினர்களும் தங்கள் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்திறன் குறித்து ஆடல் -பாடல் நாடகத்துடன் கூடிய செய்முறை விளக்கம் அளித்தனர். முடிவில் பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவர்களுக்கு இம்மன்றங்களின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்து மாதந்தோறும் இம்மன்றத்தின் மூலம் மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகப் போட்டிகள் பல நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கூறினார்.

    • தங்களிடம் இருப்பதைக் கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை குறுநாடகம் மூலம் மாணவர்கள் நடித்துக் காட்டினர்
    • நம்மை நாமே மகிழ்வுடன் வைத்திருக்க பழக வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. 9-ம் வகுப்பு மாணவர்கள் காலை வழிபாடு நடத்தினர். சிறப்பு நிகழ்ச்சியாக மாணவர்கள் தங்களிடம் இருப்பதைக் கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை குறுநாடகம் மூலம் நடித்துக் காட்டினர். வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து கிடைப்பதல்ல. நாமே எல்லாவற்றையும் நேர்மறையான சிந்தனையுடன் எதிர்கொண்டு நம்மை நாமே மகிழ்வுடன் வைத்திருக்க பழக வேண்டும் என்று கூறினர்.

    மேலும் பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பேசும் போது, மகிழ்ச்சி என்பது பிறரிடம் இருந்து கிடைப்பதல்ல நமக்கு வரும் சூழல்களை நாமே எளிதாக எதிர்கொண்டு நம் உள்ளத்தை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்டு பிறரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    • சிறப்பு விருந்தினராக அம்பை ஒன்றிய சேர்மன் பரணிசேகர் கலந்து கொண்டார்.
    • தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் எடுத்து கூறினார்.

    திசையன்விளை:

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான 2 ஆண்டு கால ஆட்சி முடிவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின் படி, தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியின் ஈடில்லா ஆட்சி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் க.புதூர் பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபிந்தர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளரும், அம்பை ஒன்றிய பெருந்தலைவர் பரணிசேகர் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்து கூறினார்.மேலும் அரசு எவ்வாறு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.இலவச மகளிர் திட்டம் மற்றும் அரசு அமைந்த பிறகு பகுதிகளில் நடைபெற்ற, நடந்து முடிந்த மற்றும் நடக்க உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்து கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு, ஒன்றிய கவுன்சிலர் நட ராஜன், இசக்கி பாபு, பிரேமா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம் அமைச்சியார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் கெனி ஸ்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரு கன், ஊராட்சி மன்ற தலை வர்கள் ராதிகா சரவண குமார், பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சாந்தா மகேஷ்வரன், மணி கண்டன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், நடேஷ் அரவிந்த், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜ சேகர், பொற்கி ழி நடராஜன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராம கிருஷ்ணன், ராம் கிஷோர் பாண்டியன், சங்கர், எழில் ஜோசப், டெ ன்னிஸ், காமில், சாகுல், கோகுல், சுடலை மணி, முத்தையா, ஸ்டா ன்லி, சுபாஷ், சுரேஷ், முத்து, ராஜா, வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.
    • கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி. எஸ். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.

    இதில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர். பாலர் கல்வி, தொடக்க கல்வி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி என்ற அடிப்படையில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

    மேலும் வருகிற கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எந்தெந்த நூல்களை பயன்படுத்தலாம் என்றும், அவர்களின் கையெழுத்து சீர்பெற கையெழுத்து பயிற்சி ஏடுகளை தொடக்கக் கல்வி நிலையிலேயே அறிமுகப்படுத்தி இந்த பயிற்சிகள் தொடர்ந்து அளிப்பது குறித்தும் கலந்தாய்வு செய்தனர். இக்கூட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பள்ளியின் முதல்வரிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார்.
    • மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

    திசையன்விளை:

    சி.பி.எஸ்.இ. ெபாதுத் தேர்வில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார். மேலும் பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார். மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன.
    • வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பை வழங்கப்படுகிறது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா க.உவரியில் மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

    இப்போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன. கிரிக்கெட் போட்டியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், சுழற்கோப்பையும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமெச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், க.உவரி ேஜக்கப், ரமேஷ், எழில் ஜோசப், காமில், சுடலைமணி, முத்தையா, டென்னிஸ் மற்றும் விளையாட்டு வீரர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • வாழை தோட்டம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
    • ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே குமாரபுரம் பஞ்சாயத்து வாழை தோட்டம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.

    அதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து திசையன்விளை பேரூராட்சி சண்முகபுரத்தில் உயர்கோபுர மின் விளக்னை இயக்கி வைத்தார். விழாவில் திசையன்விளை பேரூராட்சிகவுன்சிலர்கள் நடேஷ் அரவிந்த், கமலா, சுயம்புராஜன், பொன்மணி நடராஜன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், குமாரபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆனிஷா பயாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×