search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    க.உவரியில் கிரிக்கெட் போட்டி - மாவட்ட பஞ்சாயத்து தலைவர்  வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்
    X

    க.உவரியில் கிரிக்கெட் போட்டி - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்

    • போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன.
    • வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பை வழங்கப்படுகிறது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா க.உவரியில் மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

    இப்போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன. கிரிக்கெட் போட்டியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், சுழற்கோப்பையும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமெச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், க.உவரி ேஜக்கப், ரமேஷ், எழில் ஜோசப், காமில், சுடலைமணி, முத்தையா, டென்னிஸ் மற்றும் விளையாட்டு வீரர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×