என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அமைச்சர் ஐ. பெரியசாமியிடம், வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் மனு
    X

    அமைச்சர் ஐ. பெரியசாமியிடம், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் மனு கொடுத்த காட்சி.

    ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அமைச்சர் ஐ. பெரியசாமியிடம், வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் மனு

    • நகர்ப்புற உள்ளாட்சிகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    திசையன்விளை:

    ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் குறித்து அறிவிக்கப்படவில்லை.

    மேற்படி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட உள்ள மாதாந்திர மதிப்பூதியம் போன்று ஊரக உள்ளாட்சி பிரநிதிகளாக உள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சரிடம் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×