என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister I.Periyasamy"

    • நகர்ப்புற உள்ளாட்சிகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    திசையன்விளை:

    ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் குறித்து அறிவிக்கப்படவில்லை.

    மேற்படி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட உள்ள மாதாந்திர மதிப்பூதியம் போன்று ஊரக உள்ளாட்சி பிரநிதிகளாக உள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சரிடம் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • செம்பட்டி அருகே, சீவல்சரகு ஊராட்சி, சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளை ரூ.1 கோடிய 62 லட்சம் மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகள், கடந்த மே மாதம் 11-ம் தேதி தொடங்கப்பட்டது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி இப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

    செம்பட்டி :

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சீவல்சரகு ஊராட்சி, சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளை ரூ.1 கோடிய 62 லட்சம் மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகள், கடந்த மே மாதம் 11-ம் தேதி தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சமத்துவபுரத்திற்கு சென்று வீடுகள் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

    மேற்கூரை முழுவதும் பழுதடைந்த வீடுகளை முழுமையாக சீரமைக்க உத்தரவிட்டதோடு, சீரமைப்பு பணிகள் வீட்டில் இருப்பவர்களுக்கு திருப்தி அடையும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.

    ஆய்வின் போது, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், செயற்பொறியாளர் அணுராதா, ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் (கிழக்கு) முருகேசன் (மேற்கு) ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், உதவி பொறியாளர் முருகபாண்டி, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், சீவல்சரகு ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜேந்திரன், தி.மு.க ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன் மற்றும் சமத்துவபுரம் பொதுமக்கள், தி.மு.க நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×