திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர்.
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
Published on

திசையன்விளை:

வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி .எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர். அதற்கு ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நன்றி கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com