வி. எஸ். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி- கலந்தாய்வு கூட்டம்

சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
வி. எஸ். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி- கலந்தாய்வு கூட்டம்
Published on

திசையன்விளை:

திசையன்விளை வி. எஸ். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.

இதில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர். பாலர் கல்வி, தொடக்க கல்வி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி என்ற அடிப்படையில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

மேலும் வருகிற கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எந்தெந்த நூல்களை பயன்படுத்தலாம் என்றும், அவர்களின் கையெழுத்து சீர்பெற கையெழுத்து பயிற்சி ஏடுகளை தொடக்கக் கல்வி நிலையிலேயே அறிமுகப்படுத்தி இந்த பயிற்சிகள் தொடர்ந்து அளிப்பது குறித்தும் கலந்தாய்வு செய்தனர். இக்கூட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பள்ளியின் முதல்வரிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com