search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி"

    பள்ளி வளாகத்தில் விஷ கதண்டுகள் அகற்றம்

    வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறம் மற்றும் பின்புறம் பல்வேறு வகையான மரங்கள் உள்ளது . அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. அந்த பகுதிக்கு செல்லும் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது . இது குறித்து தலைமை ஆசிரியை வளர்மதி புகளூர் தீயணைப்பு துறை நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக் கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்.இதனால் பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    • பத்ரகாளியம்மன் பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
    • மாணிக்கவேல் ராஜன் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை முன்பு நடந்தது. உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    மேல்நிலைப்பள்ளி செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவாஜி, சங்க பிரதிநிதி வைரமணி, பள்ளி முதல்வர் ரதி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைவர் கரிகாலன் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன், மாவட்ட சிலம்ப கழக செயலாளர் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் மெட்ரிக் பள்ளி உறுப்பினர் மாணிக்கவேல் ராஜன் நன்றி கூறினார்.

    • அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • 2 மகன்கள் உள்ளனர்.

    திருவட்டார்:

    குலசேகரம் அருகே பேச்சிப்பாறை வலியமலை காணி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பால் வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் அபினேஷ் (வயது 13). ஆலம்பாறை பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் வீட்டுக்கு வந்த மாணவன் மணலோடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு தாயுடன் சென்று உள்ளான். அங்கு சென்ற அபினேஷ் தாயுடன் நடந்து வரும்போது பாம்பு ஒன்று அபினேஷ் காலில் கடித்துவிட்டது. இது குறித்து அபினேஷ் தனது தாயாரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் முதலுதவி செய்தார்கள். போக்குவரத்து வசதி இல்லாததால் அந்த பகுதியில் இருந்து உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லமுடியவில்லை. வெகுநேரம் கழித்து குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அபினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து மணிகண்டன் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்டு அபினேஷ் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பேச்சுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
    • முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம் நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுக்கூர் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது.

    மாவட்ட கல்வி அலுவலர் திராவிடசெல்வம் தலைமை தாங்கி கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    வட்டார கல்வி அலுவலர் மனோகரன் வரவேற்றார்.

    இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், அரசு பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் வட்டார அளவிலான மாணவிகளின் கலைநிகழ்ச்சிி நடைபெற்றது.

    இதில் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வன்,கல்வியில் கலை நிகழ்ச்சிகள் என்பது மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வருவது எனவும் உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக விளங்குகிறது என்றும் பள்ளியின் பற்றி எடுத்து கூறினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ரங்கராஜன், மாவட்ட திட்ட கூறு ஒருங்கிணைப்பாளர் ஷீலா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் புனிதா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், உதவி தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தங்கம் நன்றி கூறினார்.

    தி.மு.க. நகர செயலாளர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலன் கருதி அப்பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளை வால்பாறை நகர தி.மு.க. செயலாளர் குட்டி என்ற சுதாகர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

    வால்பாறை வட்டாட்சியர் அருள் முருகன், நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர், பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் அலுவல பணியாளர் பன்னீர், பிரதிநிதி டென்சிங் மற்றும் பலர் உடனிருந்தனர்

    • பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி தினமும் டியூசனுக்கு சென்று வருவார். அவ்வாறு செல்லும் அந்த மாணவியை வாலிபர் ஒருவர் தினமும் பின் தொடர்ந்து சென்று தாலலை கொடுத்தப்படி இருந்துள்ளார். நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். பின்பு டியூசன் முடிந்ததும் இரவில் பீச் ராடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மாணவிக்கு ஏற்கனவே தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அங்கு வந்தார்.

    அவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை செய் துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறினார்.இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்பு அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிப ரிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க விரும்பவில்லை.

    இதனால் அந்த வாலிபர் மீது போலீசாரால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுபோன்ற செயலில் ஈடுப டக்கூடாது என்று அந்த வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர். டியூசனுக்கு சென்று வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலி பருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பீச் ரோடு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    • மனநலம் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு வழிநடத்துவது, குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
    • தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மன்னார்குடி:

    உலக மனநல தினத்தை யொட்டி மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு, நேசக்கரம், திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வெளியிட அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பு லட்சுமி பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் நம்பிக்கை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.

    திட்ட இயக்குனர் விஜயா, மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஆசிரியர் ராஜப்பா, நேசக்கரம் ஆசிரியர் தங்கபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேசக்கரம் ஒருங்கிணை ப்பாளர்கள் கார்த்திகேயன், தீனதயாளன், நேசக்கரம் தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெலிக்ஸ், எழிலரசன் மற்றும் கலை குழுவினர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தத்ரூபமாக நடித்து, அவரை எவ்வாறு வழிநட த்துவது, குணப்படுத்துவது என்று நாடகம் மூலம் விளக்க ப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சட்டமன்றத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சரி செய்ய வேண்டும்

    மார்த்தாண்டம் :

    முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சிதலமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

    கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் சட்டசபையில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியும், கொல்லங்கோடு நகராட்சியில் கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளியும் உள்ளன. இங்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் படித்து தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால் அந்த 2 பள்ளிகளிலும் கட்டிடங்கள் மிகவும் சிதலமடைந்திருக்கிறது. அந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் அதை சரி செய்து தர வேண்டும்.

    இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், நான் ஏற்கனவே சொன்ன மாதிரிதான் 418 பள்ளிக்கூடம் இல்லாமல் மேலும் 173 பள்ளி கூடங்களுக்கு கிட்டத்தட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கு இன்றைக்கு 215 கோடி ரூபாய்க்கு உட்கட்டமைப்பு வசதிக்கு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் கூடுதலாக இன்னும் 252 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் கணக்கீடுகள் செய்யப்பட்டு அதற்கென்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

    அந்தந்த பகுதியை சேர்ந்து இருக்கிற கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த பகுதியில் இருக்கின்ற அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுக்கின்ற அந்த தகவல்களையும் நாங்கள் பெற்று கொண்டு மேலும் பத்திரிகை செய்தி மூலமாக வருகின்ற தகவல்களுக்கும் நாங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அதற்கும் இன்றைக்கு தனியாக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மிக விரைவாக இந்த நிதி எல்லாம் வரவர அதற்கான வேலைகள் உடனடியாக நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சரிடம் எடுத்து சொல்லி ஏனென்றால் 2 வாரத்திற்கு முன்னாடி அவர்கள் துறை சார்ந்து ஒரு கூட்டமே போட்டிருக்கிறார்கள்.

    இத்தனை மாதத்திற்குள் இத்தனை கட்டிடங்கள் இத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் அதை நம்முடைய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இன்னும் விரைவாக அந்த பணிகளை முடிக்கின்ற பணியில் நாங்களும் எங்களை ஈடுபடுத்தி கொள்வோம். அதன் அடிப்படையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • முடிவில் மாணவன் ராஜா நன்றி கூறினார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி யின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா சுவாமிநாதசாமி கோவிலில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லயன் மாணிக்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஷபானா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் குணாளன், பாலலெட்சுமி தொடக்கப்ப ள்ளி தாளாளர் பாலசுப்ர மணியன், சுவாமிமலை கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையை வடிவமைத்த தேவ ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் உதவி திட்ட அலுவலர் வைத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாணவன் ராஜா நன்றி கூறினார்.

    • புனித அந்தோணியார் தொடக்க பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது .
    • மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஒன்றியம் மொன்னையம்பட்டி பஞ்சாயத்து புனித அந்தோணியார் தொடக்க பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது .

    இதனை முன்னிட்டு புனித அந்தோணியார் மேல்நிலைப் தஞ்சாவூர் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் ஆதவன் சங்கம் மற்றும் ஏகம் பவுண்டேஷன் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் முன்னிலையில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன .

    மேலும் இயற்கை காய்கறிகள், வீட்டு தோட்டம் அமைத்தல் மற்றும் பள்ளிக்கு தேவையான மூன்று மருத்துவ முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டது.

    மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இவைகள் அனைத்தையும் பாரத சிற்பி டாக்டர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் பிளாஸ்டிக் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
    • தலைமை ஆசிரியர் உலகநாதன் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமையொட்டி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம் முக்கூட்டுச்சாலை, பேரூராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பெரிய கடைத்தெரு வழியாக மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்தனர். விழிப்புணர்வு பேரணியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் தொடங்கி வைக்க, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமச்சந்திரன், முதுகலை ஆசிரியர்கள் இளவரசன், கவியரசன், உதவி திட்ட அலுவலர் ஓவியரசன் பள்ளியின் ஓய்வு பெற்ற பதிவறை எழுத்தர் நாகராஜன் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சிரமேல்குடி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

    • உதவி தலைமை ஆசிரியர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
    • முடிவில் பள்ளி ஆசிரியர் கோபி கிருஷ்ணா நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நேற்று நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட முகாம் அலுவலர் அருண்குமார் அனைவரை யும் வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெங்கசாமி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தம்பி அய்யன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வீர சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    முகாமை ஆலத்தூர் ஊராட்சி தலைவர் ஜோதிலட்சுமி திராவிட ச்செல்வன் தொடங்கி வைத்தார். விழாவில் ஆசிரியர்கள் தமிழ் பிரியா, விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, "நூலகமும் மாணவர்களும்" என்ற தலைப்பில் பள்ளியின் கணித ஆசிரியர் ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். முடிவில் பள்ளி ஆசிரியர் கோபி கிருஷ்ணா நன்றி கூறினார்.

    ×