search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கூர் அரசு பெண்கள் பள்ளியில் கலை திருவிழா
    X

    பள்ளியில் கலை திருவிழா நடந்தது.

    மதுக்கூர் அரசு பெண்கள் பள்ளியில் கலை திருவிழா

    • பேச்சுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
    • முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம் நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுக்கூர் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது.

    மாவட்ட கல்வி அலுவலர் திராவிடசெல்வம் தலைமை தாங்கி கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    வட்டார கல்வி அலுவலர் மனோகரன் வரவேற்றார்.

    இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், அரசு பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் வட்டார அளவிலான மாணவிகளின் கலைநிகழ்ச்சிி நடைபெற்றது.

    இதில் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வன்,கல்வியில் கலை நிகழ்ச்சிகள் என்பது மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வருவது எனவும் உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக விளங்குகிறது என்றும் பள்ளியின் பற்றி எடுத்து கூறினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ரங்கராஜன், மாவட்ட திட்ட கூறு ஒருங்கிணைப்பாளர் ஷீலா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் புனிதா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், உதவி தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தங்கம் நன்றி கூறினார்.

    Next Story
    ×