என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
- மாணவர்கள் பிளாஸ்டிக் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
- தலைமை ஆசிரியர் உலகநாதன் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமையொட்டி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம் முக்கூட்டுச்சாலை, பேரூராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பெரிய கடைத்தெரு வழியாக மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்தனர். விழிப்புணர்வு பேரணியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் தொடங்கி வைக்க, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமச்சந்திரன், முதுகலை ஆசிரியர்கள் இளவரசன், கவியரசன், உதவி திட்ட அலுவலர் ஓவியரசன் பள்ளியின் ஓய்வு பெற்ற பதிவறை எழுத்தர் நாகராஜன் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சிரமேல்குடி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.






