search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை"

    • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் என்று கூறி 3 பேர் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து நகை, பணத்தை மிரட்டி பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ஜெயராம் (வயது 47), கோவை அண்ணா நகரை சேர்ந்த அய்யப்பன் (51), ஆறுமுகம் (47) ஆகிய 3 பேரை பிடித்தனர். இவர்கள் தனியாக வசிக்கும் பெண்களை குறி வைத்து போலீசார் போல் நடித்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து

    சென்றது தெரிய வந்தது. கஞ்சா வழக்கு போடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஆறுமுகம் போலீஸ் போல் போலியான அடையாள அட்டை மற்றும் காக்கி சீருடை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.

    • செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    • குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    சிறையில் உள்ள சிறுபான்மையினரை விடுவிக்க அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட துணைத் தலைவர் ஷபி, கல்வியாளர் அணி மாநில தலைவர் மாலிக் பாஷா, மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி, தொகுதி தலைவர் சல்மான், செயற்குழு உறுப்பினர் அசாருதீன், நகர தலைவர் சலிம் பாஷா, நகர பொருளாளர் அப்துல் ரஹீம், ஊடக அணி பொறுப்பாளர் குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இவரது மனைவி கேரளாவில் தங்கி பணி செய்து வருகிறார்.
    • தாய்மாமன், கேரளாவில் உள்ள மாணவியின் தாயிடம் நடந்ததை கூறி உடனே வரவழைத்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி, கோயம்மேடு மார்க்கெட்டில் பணி செய்து வந்தார். இவரது கையில் அடிபட்டதால் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி கேரளாவில் தங்கி பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 5-ம் வகுப்பு பயிலும் மகள் உள்ளார். இந்நிலையில் ெதாழிலாளி, தனது 10 வயது மகளை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போன 5-ம் வகுப்பு மாணவியிடம், அவரது தாய்மாமன் விசாரித்துள்ளார்.

    மாணவி நடந்த விஷய ங்களை தாய்மாமனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி யடைந்த தாய்மாமன், கேரளாவில் உள்ள மாணவியின் தாயிடம் நடந்ததை கூறி உடனே வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த தாய், மகளிடம் விசாரணை மேற்கொண்டு நடந்த சம்பவத்தை உறுதி செய்தார். உடனடியாக வேப்பூர் போலீசாரிடம் புகார் செய்தார். போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவில் நகை- உண்டியல் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோவில்களில் உண்டியல் உடைத்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததையடுத்து கடலூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், டி.எஸ்.பி.ரூபன்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் வட்டத்தூர், கொண்டசமுத்திரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் திருடியது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் சேத்தியா த்தோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி.ரூபன்குமாரின் தனிப்படை போலீசார் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாபு, கோபி, ஏட்டுகள் மணிகண்டன், சங்கர், ரஜினி, விஜயகுமார், புகழ் ஆகிய குழுவினர் அடங்கிய போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கண்மணி ராஜா (37) என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் வட்டத்தூர், கொண்ட சமுத்திரம், பாளையங்கோட்டை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கோவில் நகைகள், உண்டியலை உடைத்து பணம் திருடியதாக அவர் ஒப்புகொண்டார். அவரிடமிருந்து ரூ.8லட்சம் மதிப்புள்ள 15½ பவுன் கோவில் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் கண்மணி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

    • சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் மாவட்ட சிறை உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்கு தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சிறை கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகளை கண்காணித்த போது கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட கோவை காமராஜபுரத்தை சேர்ந்த கவுதம் (29), போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதம் முன்பு சிறையில் அடைக்கப்பட்ட கணபதி சிங் (45) ஆகியோர் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது.

    இருவரிடம் இருந்த செல்போன்களை சிறைக் காவலர்கள் எடுக்க முயன்ற போது செல்போன் தர மறுத்து அவர்களிடம் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவுதமிடம் இருந்து ஒரு பட்டன் செல்போன், சிம் கார்டு, 2 பேட்டரிகள், இயர் போன் ஆகியவற்றையும், கணபதி சங்கிடமிருந்து ஒரு சிம் கார்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கண்காணிப்பாளர் சிவகுமார் அளித்த புகாரின் பெயரில் கோபி போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோபி சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இதில் சிறை காவலர்கள் யாரேனும் இவர்களுக்கு உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணம் திருடிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
    • போலீசார் அவர் வைத்திருந்த பணம் ரூ.3 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் செல்போனை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.

    புளியம்பட்டி, 

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் பின்புறம் முத்துச்சாமி என்பவர் கார்மெண்ட்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு கேரள மாநிலம் சுற்றுலா சென்றபோது இவரது கம்பெனியின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் சத்தியமங்கலம் வடக்கு ப்பேட்டையில் சுற்றித்திரிந்து நபரை பிடித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம் நஞ்சன்கோடு சிந்தகள்ளி சேர்ந்த ரங்கசாமி (வயது 27) என்பதும், புளிய ம்பட்டி பனியன் கம்பெனியில் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரங்கசாமியை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த பணம் ரூ.3 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் செல்போனை பறிமுதல் பறிமுதல் செய்தனர். பின்னர் ரங்கசாமியை நீதிம ன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர்.

    • தொழிலாளர் நல அதிகாரி எச்சரிக்கை
    • குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணி கண்டபிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மின்னணு மற்றும் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பழுது பார்க்கும் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தி னர் பணியில் ஈடுபடுத்தப்படு கிறார்களா? என்று நாகர்கோவில் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகி யோருடன் நடத்தப்பட்டது.

    14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்க ளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்ப டும். குழந்தை தொழிலா ளர்களை பணியில் அமர்த்து வது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணிலோ, 04652-229077 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டு நடக்கிறது.

    மதுரை

    சிறைவாசிகளை நல்வ–ழிப்படுத்தும் வகையில் பல் வேறு விதமான சீர்தி ருத்த பணிகளை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிறை வாசிகளின் மனதை ஆற்றுப் படுத்தும் விதமாகவும், அவர்களை அமைதிப்ப டுத்தி நல்வழிப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி உலக அமைதி பேச்சாளர் பிரேம் ராவத் குழுவினர் மூலமாக தமிழ கம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைக ளிலும் அமைதி கல்வி திட்டம் என்ற பெயரில் பயிற்சி வகுப்பு அறிமுகப்ப டுத்தப்பட்டு நடக்கிறது.

    இதில் அமைதி, மதிப்பை உணர்தல், உள் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளுதல், தன்மா னம், தேர்ந்தெடுத்தல், நம் பிக்கை, திருப்தி ஆகிய தலைப்பின் கீழ் தினந்தோ றும் 45 நிமிட காணொளி சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இறுதி நாளான நேற்று இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறைவாசிகளுக்கு பிரேம் ராவத்தின் இளைஞர் அமைதி அமைப்பின் சார் பாக சான்றிதழ்களை மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் மத்திய சிறை கண்கா ணிப்பாளர் பரசுராமன் சிறை அலுவலர் மற்றும் நல அலுவலர்கள் கலந்து கொண்டு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண், பெண் சிறைவாசிகள் சுமார் 200 பேருக்கு சான்றி–தழ்களை வழங்கினர்.

    • வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
    • பாலியல் தொந்தரவு வழக்கில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பெண்ணுக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிம ன்றம் தீர்ப்பளித்தது.

    உடையார்பாளையம் அருகேயுள்ள பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா(வயது25). கடந்த 2021 ஆம் ஆண்டு இவரை, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வழக்கி ல் ஜெயங்கொண்டம் அனை த்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்ற த்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி இளையராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும், ரூ.5,000 அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி இளையராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரை ஞர் ம.ராஜா ஆஜராகினார்.

    • பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது.
    • இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பரமத்தி வேலூர்:

    கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள செம்படாபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி (52 ) பைனான்ஸ் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (47) இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி பரமத்தி அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர் சுப்பிரமணி (50) என்பவரை கைது செய்தனர்.இந்த விபத்து குறித்த வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி கண்ணன் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை காவலர் கடைசியாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    • பவானி பெண்ணை கொன்ற வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி,

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு அண்ணாமலை யார் வீதியைச் சேர்ந்தவர் சிவகார்த்தி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மேனகா (47). இவர்களுக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் மேனகாவின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ய ப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியதில் மேனகாவை கொன்றது அவரது மகளின் காதலன் தினேஷ் பாலா (22) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறும் போது, மேனகாவின் மகள் யூ-டியூப் எடிட்டரான தினேஷ் பாலாவை காத லித்து வந்துள்ளார்.

    இரு வீட்டிலும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பா டுகளும் நடந்து வந்தது. இந்நிலையில் மேனகாவின் நடவடிக்கை சரியில்லா ததால் அவரது மகள் தாயை கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று மேனகா வீட்டில் இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த தினேஷ் பாலா தனது வருங்கால மாமியா ரிடம் அவரது நடவடிக்கை குறித்து பேசி உள்ளார். அப்போது இருவர் இடை யே தகராறு ஏற்ப ட்டுள்ளது.

    இதில் ஆத்திர மடைந்த மேனகா, தினேஷ் பாலாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தினேஷ் பாலா மேனகாவை கழு த்தை நெரித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் தனது காதலியிடம் கூறியுள்ளார். அவரும் கொலையை மறை க்க காதலனுக்கு உதவி செய்துள்ளார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் பாலா மற்றும் அவரது காதலியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்ட தினேஷ் பா லா கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.

    ×