search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suryakumar Yadav"

    • இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
    • சூர்யகுமார் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திருப்பதி:

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து 17 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதன் முடிவில் கொல்கத்தா முதல் இடத்திலும் ராஜஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளது. 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே சென்னை, லக்னோ, பஞ்சாப் அணிகள் உள்ளன.

    இந்த புள்ளி பட்டியலில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை.

    அவர் காயம் காரணமாக என்சிஏ-வில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். முதல் கட்ட சோதனை அவர் உடல் தகுதியுடன் இல்லை என என்சிஏ அறிவித்தது. இதனால் அவர் முதல் 3 போட்டிகளில் விளையாடவில்லை.

    இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ தெரிவித்தது. இந்நிலையில் சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று இணைந்துள்ளார். அவர் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனை மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் 7-ந் தேதி டெல்லி அணியுடனான போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை.
    • அவர் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.

    திருப்பதி:

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா முதல் இடத்திலும் ராஜஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளது. அதேபோல் கடைசி 2 இடங்களில் ஆர்சிபி, மும்பை அணிகள் உள்ளன.

    இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை. அவர் 3-வது போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் உடல் நலம் சரியாகவில்லை என என்சிஏ நிராகரித்தது.

    இந்நிலையில் நேற்று அவர் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் அவர் இனி வரும் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சூர்யகுமார் நாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையவுள்ளார்.

    வரும் 7-ந் தேதி டெல்லி அணியுடனான போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • மும்பை அணி இந்த தொடரில் இன்னும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறது.
    • மும்பை அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 15 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் உள்ளது.

    மும்பை அணி இந்த தொடரில் இன்னும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கி தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொடரில் மும்பை அணிக்கு பேட்டிங் ஆர்டர் சிறப்பாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் மும்பை அணி தடுமாறி வருகிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காத மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டகாரர் சூர்யகுமார் யாதவ் அடுத்த போட்டியில் இருந்து களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதிக்கான சோதனையில் தேர்ச்சி பெறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல் தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது. இதனால் அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் ஏற்கனவே 2 போட்டிகளை தவறவிட்டார்.
    • அந்த 2 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

    காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் ஏற்கனவே 2 போட்டிகளை தவறவிட்டார். அந்த 2 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனால் மும்பை ரசிகர்கள் அவர் எப்போது களத்திற்கு திரும்புவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

    சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் போட்டிக்கான முழு உடல் தகுதியை எட்டாததால் மேலும் சில ஐ.பி.எல். ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
    • ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த போட்டியில் களமிறங்கவில்லை.

    • சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டா ஸ்டோரியில் பிரோக்கன் ஹார்ட் வைத்திருந்தார்.
    • அதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.

    ஐபிஎல் தொடர் 2024 வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்குகிறார்.

    ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது வரை அதற்கு ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் தற்போது டிரெண்டாகி வருகிறார்.

    அது ஏன் என்றால். அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் பிரோக்கன் ஹார்ட் வைத்திருந்தார். இவர் ஏன் இப்படி வைத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருசில ரசிகர்கள் ரோகித்க்கு ஆதரவாகவும் பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படி வைத்ததாகவும் வதந்திகள் பரவி வந்தனர்.

    இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதிக்கான சோதனையில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அடுத்த சோதனை நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதன் காரணமாக தான் அவர் அந்த ஸ்டோரி வைத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலையில் உள்ளது.

    • கடந்த டிசம்பர் மாதம் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
    • உடற்தகுதி பெற்றுள்ளார் என பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி சான்று அளிக்கவில்லை.

    இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

    ஐபிஎல் 2024 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. ஆனால் ஒருசில வீரர்கள் காயத்தால் சில அணிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    சூர்யகுமார் யாதவ் கடந்த டிசம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடும்போது காயத்திற்கு உள்ளானார். காயத்திற்கு ஆபரேசன் செய்துள்ள அவர் இதுவரை விளையாடாமல் உள்ளார். பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐபிஎல் போட்டிக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 24-ந்தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 27-ந்தேதி எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் உடற்தகுதி பெற்று விட்டார் என பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி சான்று அளிக்கவில்லை.

    இன்ஸ்டாகிராமில் காயம் குறித்து தகவல் தெரிவித்த சூர்யகுமார் யாதவ், பேட்டிங் செய்வது போன்ற வீடியோ ஏதும் வெளியிடவில்லை. இதனால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அடிலெய்டு:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம்(120) அடித்ததன் மூலம் ரோகித் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் (5 சதம்) சாதனையை மேக்ஸ்வெல் (5 சதம்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் அசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.

    மேலும் நாட் அவுட் மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும் ரோகித் 2-வது இடத்திலும் உள்ளனர். இதுபோக 4-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117), பாப் டு பிளெசிஸ்(119) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவ் காயம் ஏற்பட்டது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நாடு திரும்பிய சூர்யகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதன் காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரால் எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கணுக்கால் காயம் ஏற்பட்டதோடு மட்டுமின்றி தற்போது அவர் குடலிறக்க பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று அங்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார் என்றும் அதன் பிறகு சில மாதங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.

    இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் தான் துவங்கும் என்பதனால் அதற்குள் அவர் தயாராகும் வரை கால அவகாசமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது.
    • 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நீக்கியது.

    5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நீக்கியது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் ரோகித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இணையதளங்களில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ், இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. 'உடைந்த இதயம்' எமோஜியை அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது தான் காரணம் என பதிவு செய்து வருகின்றனர். ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.



     "மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமே தயாராக இருங்கள்.. உங்கள் வீழ்ச்சி நெருங்கிக் கொண்டிருக்கிறது" என தீவிர ரசிகை ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

    குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.
    • குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் சூர்யகுமாரை அவுட்டாக்க பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் ஐடியா கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார். இதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் பந்து வீச தடுமாறுகிறார்கள்.

    இருப்பினும் பிட்ச்சின் ஒரு பக்கமாக வீசும் போது ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பதால் டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட்டாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கும். ஆனாலும் லாங் ஆன், மிட் விக்கெட், கவர்ஸ் திசைக்கு மேல் என பந்தின் வேகத்தை பயன்படுத்தி பேட்டின் வேகத்தை திறந்து சூர்யா அடிப்பதால் பவுலர்கள் தடுமாறுகின்றனர்.

    அவர் தனது பீல்டர்களை தேர்வு செய்து மட்டுமல்லாமல் அவருக்கு தேவையான இடத்தை தேர்வு செய்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் போது நீங்கள் அவருக்கு எதிராக திட்டங்களை செயல்படுத்துவது எளிதாக இருக்காது.

    எனவே நல்ல பந்துகளை வீசி அவரை அவுட்டாக்கும் வாய்ப்பை நீங்களே பெற வேண்டும். அதுவே அவரை தடுப்பதற்கான ஒரே வழியாகும். அது தான் இப்போட்டியின் இறுதியில் நடந்தது.

    இவ்வாறு ஜாகீர் கான் கூறினார்.

    • ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதம் அடித்துள்ளார்.
    • மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர்.

    ஜோகன்ஸ்பர்க்:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.

    ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் சூர்யகுமார் யாதவ் தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ( இருவரும் தலா 4 சதம் ) உடன் முதல் இடத்தை சூர்யகுமார் பகிர்ந்துள்ளார்.

    ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும், மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி 4 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×