search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாஹீர் கான்"

    • அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.
    • குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் சூர்யகுமாரை அவுட்டாக்க பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் ஐடியா கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார். இதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் பந்து வீச தடுமாறுகிறார்கள்.

    இருப்பினும் பிட்ச்சின் ஒரு பக்கமாக வீசும் போது ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பதால் டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட்டாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கும். ஆனாலும் லாங் ஆன், மிட் விக்கெட், கவர்ஸ் திசைக்கு மேல் என பந்தின் வேகத்தை பயன்படுத்தி பேட்டின் வேகத்தை திறந்து சூர்யா அடிப்பதால் பவுலர்கள் தடுமாறுகின்றனர்.

    அவர் தனது பீல்டர்களை தேர்வு செய்து மட்டுமல்லாமல் அவருக்கு தேவையான இடத்தை தேர்வு செய்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் போது நீங்கள் அவருக்கு எதிராக திட்டங்களை செயல்படுத்துவது எளிதாக இருக்காது.

    எனவே நல்ல பந்துகளை வீசி அவரை அவுட்டாக்கும் வாய்ப்பை நீங்களே பெற வேண்டும். அதுவே அவரை தடுப்பதற்கான ஒரே வழியாகும். அது தான் இப்போட்டியின் இறுதியில் நடந்தது.

    இவ்வாறு ஜாகீர் கான் கூறினார்.

    ×