search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேக்ஸ்வெல்"

    • என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 30 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3 முதல் 10 இடங்கள் முறையே சென்னை, ஐதராபாத், லக்னோ, குஜராத், பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளனர்.

    இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை பெங்களூரு அணி வெளிப்படுத்தி வருகிறது. பெங்களூரு அணி தான் மோதிய 7 ஆட்டத்தில் 6 தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினாமான ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து சிறிதுகாலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை. என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்.

    இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.

    • ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
    • ஆர்சிபி அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 15.3 ஓவரில் இலக்கை 199 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வி மூலம் ஆர்சிபி அணி 5 தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் காயம் காரணமாக ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக அமையும்.

    ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

    • இந்த தொடரில் ஆறு இன்னிங்சில் 3 முறை டக்அவுட்.
    • ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 முறை டக்அவுட் ஆகியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு இந்த ஐபிஎல் சீசன் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. பார்ம் இன்றி தவித்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக இன்று நான்கு பந்துகளை சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டாகி வெளியேறினார். இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். அதில் மூன்று முறை டக்அவுட்டாகியுள்ளார்.

    சிஎஸ்கே-வுக்கு எதிரான முதல் போட்டியிலும், எல்எஸ்ஜி-க்கு எதிரான 4-வது போட்டியிலும் டக்அவுட் ஆகியுள்ளார். மொத்தம் ஆறு இன்னிங்சில் 32 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 5.4 ஆகும். கேகேஆர் அணிக்கெதிராக மட்டுமே 28 ரன்கள் அடித்துள்ளார்.

    மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் இது ஒட்டுமொத்தமாக 17-வது டக்அவுட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட்டாகிய பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    • மயங்க் அகர்வால் பந்தில் மேக்ஸ்வெல் டக்அவுட் ஆனார்.
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன பேட்ஸ்மேன் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் விளையாடிய லக்னோ அணி 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. ஆனால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அபாரமாக பந்து வீச ஆர்.சி.பி. அணி முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீனை வீழ்த்தி அசத்தினார். அந்த அணியால் 153 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் ஆர்.சி.பி. 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் தனது சொந்த மைதானத்தில் அந்த அணியின் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

    அந்த அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தான் சந்தித்த 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மேக்ஸ்வெல் 16 முறை டக்அவுட் ஆகியுள்ளார். மேலும் அதிக முறை டக்அவுட்டாகிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

    முன்னதாக ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 17 முறை டக்அவுட் ஆகி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை டக்அவுட் ஆனவர்கள் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளனர். மந்தீப் சிங், பியூஸ் சாவ்லா மற்றம் சுனில் நரைன் ஆகியோர் 15 முறை டக்அவுட்டாகி மூணாவது இடத்தில் உள்ளனர்.

    • சென்னையில் ஆர்சிபி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
    • விராட் கோலியைப் போன்று மேக்ஸ்வெல் பேட்டிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இதற்காக சென்னையில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ரனர். இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவரது பின்னாடி நின்று கொண்டிருந்த மேக்ஸ்வெல், விராட் கோலியைப் போன்று பேட்டிங் செய்து காட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முன்னதாக மேக்ஸ்வெல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்வதை போன்று இமிடேட் செய்திருந்தார்.

    இந்த இரு வீடியோக்களை வைத்து ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • சென்னை வந்த ஆர்சிபி, தங்களது புதிய பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.
    • இந்த நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி நகைச்சுவையான சில விஷயங்களை அரங்கேற்றி உள்ளனர்.

    10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் நாளைமறுநாள் தொடங்க உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணிகள் வீரர்களும் சென்னையில் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை வந்த ஆர்சிபி, தங்களது புதிய பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி நகைச்சுவையான சில விஷயங்களை அரங்கேற்றி உள்ளனர். அந்த வகையில் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்த 6 ஆர்சிபி வீரர்கள் இடம் பெற்றனர். அதில் டுபிளிசிஸ், விராட், மேக்ஸ்வெல், சிராஜ், பட்டித்தார், மணிபால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    அப்போது முன்பக்க ஜெர்சியை புகைப்படம் எடுக்கப்பட்டது. அதேபோல பின்பக்க ஜெர்சியை படம் எடுக்க திரும்புமாறு செய்தியாளர்கள் தெரிவித்தனர். திரும்பிய வீரர்களில் மேக்ஸ்வெல் மட்டும் இடுப்பை ஆட்டி நடனம் ஆடினார். இதனை பார்த்த டுபிளிசிஸ், விராட், சிராஜ் ஆகியோர் சிரித்தனர்.

    இது மட்டுமல்லாம் ஸ்பான்சர் (KEI) நிறுவனத்தின் பெயரை கேப்டன் டுபிளிசிஸ் திறந்து வைத்தார். அப்போது வெடி சத்தத்துடன் வண்ண காகிதங்கள் பூக்களை போன்று சிதறியது. இதை எதிர்பாராத டுபிளிசிஸ் காதை மூடிக்கொண்டு ஓடினார். இதனை பார்த்த விராட் மற்றும் மேக்ஸ்வேல் வாய்விட்டு சிரித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
    • டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரை கைப் பற்றியது.

    இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார். இது அவரது 126-வது சிக்சர் ஆகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதற்கு முன் ஆரோன் பிஞ்ச் 125 சிக்சர்கள் அடித்ததே சாதனையாகும். அவரை தற்போது மேக்ஸ்வெல் முந்தியுள்ளார். மற்ற ஆஸ்திரேலிய வீரரர்களில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களும், வாட்சன் 83 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

    சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    ரோகித் சர்மா 190 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், குப்தில் (நியூசிலாந்து) 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அடிலெய்டு:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம்(120) அடித்ததன் மூலம் ரோகித் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் (5 சதம்) சாதனையை மேக்ஸ்வெல் (5 சதம்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் அசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.

    மேலும் நாட் அவுட் மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும் ரோகித் 2-வது இடத்திலும் உள்ளனர். இதுபோக 4-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117), பாப் டு பிளெசிஸ்(119) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

    • மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார்.
    • டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - இங்கிலீஸ் களமிறங்கினர். இங்கிலீஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய வார்னர் 22 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டோய்னிஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ருத்ர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

    • மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
    • இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

    கவுகாத்தி:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தது.

    பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 68 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்த நெருக்கடியான சூழலில் களம் கண்ட ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தனக்கே உரிய பாணியில் மட்டையை நாலாபுறமும் சுழட்டினார்.

    கடைசி இரு ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய அக்ஷர் பட்டேலின் ஓவரில் 22 ரன் எடுத்தனர். இதையடுத்து கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தை மேக்ஸ்வெல் நேர்பகுதியில் சர்வ சாதாரணமாக பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

    மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மேலும் ஆட்டநாயகன் விருதை அவரே பெற்றார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேக்ஸ்வெல்லுக்கு இது 4-வது சதமாக பதிவானது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவரான இந்திய வீரர் ரோகித் சர்மாவின் (4 சதம்) சாதனையும் சமன் செய்தார்.

    மேலும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியர்களின் அதிவேக சதத்தை சமன் செய்தார். ஏற்கனவே ஆரோன் பிஞ்ச், ஜோஷ் இங்லிஸ் தலா 47 பந்தில் சதம் அடித்திருந்தனர்.

    • மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நாடு திரும்புகிறார்கள்.
    • நான்கு வீரர்கள் அணியுடன் இணைய உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    இன்று 3-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த 6 வீரர்களை ஆஸ்திரேலியா ரிலீஸ் செய்துள்ளது.

    உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா திரும்புகிறார்கள். இன்றைய போட்டி முடிவடைந்த பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள்.

    ஏற்கனவே ஆடம் ஜாம்பா, சுமித் ஆகியோர் ஆஸ்திரேலிய புறப்பட்டு விட்டனர்.

    உலகக் கோப்பையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட் மட்டுமே டி20 அணியில் நீடிக்கிறார்.

    பென் மெக்டெர்மொட், ஜோஷ் பிலிப், பென் திவார்ஷுய்ஸ், கிறிஸ் கிரீன் அணியுடன் இணைய இருக்கிறார்கள்.

    • இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும்.
    • இதைசொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு இந்திய ரசிகர்கள் அருவருக்கத்தக்க மெசெஜ்களை அனுப்புவதாக வினி ராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இதைசொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    இந்தியராக நீங்கள் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில், உங்கள் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் உங்கள் கணவர் விளையாடும் அணியையும் ஆதரிக்க வேண்டியது முக்கியம். இந்த மாதிரி பேசுவதை விட்டு, உங்களது கோபத்தை உலகில் நிகழும் முக்கியமான பிரச்சினை மீது திருப்புங்கள்.

    என்று வினி ராமன் கூறினார்.

    மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×