என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சம்பவம் Loading.. மும்பை அணியில் இணைந்து பயிற்சியை தொடங்கிய SKY
- இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
- சூர்யகுமார் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பதி:
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து 17 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதன் முடிவில் கொல்கத்தா முதல் இடத்திலும் ராஜஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளது. 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே சென்னை, லக்னோ, பஞ்சாப் அணிகள் உள்ளன.
இந்த புள்ளி பட்டியலில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை.
அவர் காயம் காரணமாக என்சிஏ-வில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். முதல் கட்ட சோதனை அவர் உடல் தகுதியுடன் இல்லை என என்சிஏ அறிவித்தது. இதனால் அவர் முதல் 3 போட்டிகளில் விளையாடவில்லை.
இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ தெரிவித்தது. இந்நிலையில் சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று இணைந்துள்ளார். அவர் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் 7-ந் தேதி டெல்லி அணியுடனான போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.






