search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளென் மேக்ஸ்வெல்"

    • ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதம் அடித்துள்ளார்.
    • மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர்.

    ஜோகன்ஸ்பர்க்:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.

    ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் சூர்யகுமார் யாதவ் தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ( இருவரும் தலா 4 சதம் ) உடன் முதல் இடத்தை சூர்யகுமார் பகிர்ந்துள்ளார்.

    ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும், மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி 4 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் மேக்ஸ்வெல், வார்னர் சதமடித்தனர்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை தொடரின் 24வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 44 பந்தில் 106 ரன்னும், வார்னர் 93 பந்தில் 104 ரன்னும் குவித்தனர்.

    தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து 90 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 309 ரன் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்தது.

    ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

    இவர் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியின் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேக்ஸ்வெல்லுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது.
    • அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டி 20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வெல் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டி20 தொடர் நிறைவடைந்த பின்னர் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதை முன்னிட்டு மேக்ஸ்வெல் ஏற்கனவே ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது.

    வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதற்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் அவர் டி20 தொடருக்கான அணியிலிருந்தும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×