search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide attempt"

    • காளியப்பனுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தற்கொலை முயற்சி அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றி வருபவர் காளியப்பன் (45). இவர் அன்னதானப்பட்டி, லைன்மேடு போலீஸ் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் காளியப்பனுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த காளியப்பன் வீட்டில் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி தெரிய வந்ததும் குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே நேற்று பகல் 12 மணியளவில் 55 வயது மதிக்க நபர் ஒருவர், சாலையோரம் அமர்ந்திருந்தார்.
    • அவர் அங்கிருந்த கூர்மையான கற்களை எடுத்து தனது கை, கால்களை குத்தி கிழித்துக் கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே நேற்று பகல் 12 மணியளவில் 55 வயது மதிக்க நபர் ஒருவர், சாலையோரம் அமர்ந்திருந்தார்.

    கூர்மையான கற்கள்

    அவர் அங்கிருந்த கூர்மையான கற்களை எடுத்து தனது கை, கால்களை குத்தி கிழித்துக் கொண்டார். இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள், அந்த நபரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காயங்களுக்கு மருந்து போட்டு, அவரை மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்தனர்.

    சாக்கடையில் குதித்தார்

    இதனிடையே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அந்த நபர், அரசு மருத்துவமனை அருகே உள்ள சாக்கடையில் குதித்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

    இதனால அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்று விட்டார். இரவு சுமார் 9 மணியளவில் பரமத்திவேலூர் பஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார்.

    கொதிக்கும் எண்ணெய்

    அங்கு சில்லி சிக்கன் போடுவதற்காக அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை திடீரென எடுத்து தன் தலையில் ஊற்றிக் கொண்டார். யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் இருந்தவர்கள் தெரித்து ஓடினார்கள்.

    கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக்கொண்டதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு அருகாமையில் உள்ள பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மனநலம் பாதிப்பு

    இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர், திருச்செங்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன் (வயது 55) என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறது. அவர் குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கடையின் வெளிப்பகுதியில் இதுபோன்று அடுப்பு வைத்து சமையல் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர்.
    • விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40). இவர் தனது மனைவி காயத்ரி, தாயார் நாகம்மாள் (60) மற்றும் 2 குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். வடிவேல் மற்றும் காயத்ரி இருவரும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    நாகம்மாள் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வடிவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். மாலை வேலைக்கு சென்ற தனது தாயாரை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.பின்னர் தனது தாயாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.

    இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கொள்ளையில் ஈடுபட முயன்ற வாலிபர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பிக்க தூக்கு ப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • மீனவ பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன் குப்பத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் மீன்பிடித்து வந்து தங்களது படகுகளை தந்திராயன்குப்பம் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைப்பது வழக்கம். தந்திராயன்குப்பம் அருகே உள்ள மீனவ கிராமம் சின்னமுதலியார் சாவடி. இந்த கிராமத்திலும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனையடுத்து சின்னமுதலியார்பேட்டை சாவடியில் உள்ள மீனவர்கள் சில நாட்களாக தங்களது படகுகளை சின்னமுதலியார் சாவடி கடற்கரை ஓரமாக நிறுத்தாமல் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வருகின்றனர். இதனால் தந்திராயன்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை அவர்களது பகுதி கடற்கரை ஓரங்களில் நிறுத்த இடமில்லாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் படகுகளை கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைப்பதில் மீனவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

    இதனை கண்டித்து தந்திராயன்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடமும், வானூர் தாசில்தாரிடமும் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுநாள் வரை அந்த மனுவிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்திராயன்குப்பம் மீனவர்கள் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்படைந்து வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சமீபகாலமாக தங்கள் பகுதி மீனவ கிராமத்திற்கு பக்கத்து மீனவ கிரமமான சின்னமுதலியார் சாவடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை அவர்கள் பகுதி கடற்கரையில் நிறுத்தாமல் எங்களது பகுதி கடற்கரை ஓரமாக நிறுத்துகின்றனர். இதனால் நாங்கள் எங்களது படகுகளை கடற்கரை ஓரமாக நிறுத்த இடமில்லாமல் தினந்தோறும் அல்லல்பட்டு வருகிறோம். இதனை சரிசெய்ய பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அந்த மனுவிற்கு இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பிரச்சனைக்கு அதிகாரிகளால் தீர்வு எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் அளித்த மனுவிற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி இந்த சாலை மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலை மறியலில் ஈடுபட்டபோது அங்கு இருந்த சில பெண்கள் மற்றும் ஆண்கள் தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை கையில் எடுத்து அவர்கள் மீது ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முற்பட்டனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த (பெண்) போலீசார் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர்களை மீட்டனர். இதனையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகள் மூலம் இந்த பிரச்சினைக்கு உடனடியா தீர்வு எடுக்கப்படும் என போலீசார் கூறியதின்பேரில் மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனால் அதிகாரிகள் எங்களிடம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்லாமல் அங்கேயே கூட்டம் கூட்டமாக நின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பதட்டமாக உள்ளது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். படகுகளை கடற்கரை ஓரமாக நிறுத்துவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மீனவ பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தர்மபுரி அருகே வேப்பமரத்தூரில் கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • சம்பவம் நடந்த வேப்பமத்தூர் கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி அருகே வேப்பமரத்தூரில் கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    13 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கும்பாபிஷேகத்தை நடத்தவிடாமல் மர்ம நபர்கள் சிலர் தடுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த கிராம மக்கள் திருவிழாவில் செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷம் கலந்து குடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

    மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களை நேரி சந்தித்து நலம் விசாரித்து அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    சம்பவம் நடந்த வேப்பமத்தூர் கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரத் (வயது 22). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • கல்லூரியில் பரத் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுத்து, வகுப்பறையில் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை சத்யா நகர் பகுதி சேர்ந்தவர் குமரன். இவரது மகன் பரத் (வயது 22). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டார். பின்னர் சிகிச்சை முடிந்ததும், வழக்கம் போல் கல்லூரிக்கு வந்துள்ளார். ஆனால், கல்லூரியில் பரத் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுத்து, வகுப்பறையில் அனுமதிக்க மறுத்து விட்ட னர். இதனால் மன முடைந்த பரத், சம்ப வத்தன்று விஷத்தை குடித்து விட்ட தாக அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாலாஜி தனியாக பொன்னேரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த உப்பளம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. திருமணமான சில மாதத்திலேயே சாந்தி கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் பாலாஜி தனியாக பொன்னேரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த அவர் பொன்னேரி ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • நெல்லிக்குப்பத்தில் சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.
    • போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.வழக்கம் போல இன்று காலையில் அவர் பணிக்கு வந்தார். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது, தான் தூக்க மாத்திரை அதிகளவில் விழுங்கியதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரையை ஏன் விழுங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா விழுப்புரம் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை முயற்சி செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போதே பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    • புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார்.
    • கண் இமைக்கும் நேரத்தில் வாலிபர் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையைச் சேர்ந்தவர் வாசிமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவரும் மதுரை பேரையூரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் சந்துரு (வயது 23) என்பவரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனர். இவர்கள் பழக்கம் நாளுக்கு நாள் நெருக்கமானது.

    புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார். இந்த விபரம் புவனேஸ்வரி குடும்பத்துக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சந்துருவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த சந்துரு நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. உன்னை நேரடியாக பார்க்க உன் வீட்டுக்கே வருகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன்படி நேற்று அவரது வீட்டுக்கு வந்த சந்துரு என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? என கண்ணீர் வடிக்க கேட்டுள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்ததால் இங்கிருந்து உடனடியாக சென்று விடு என அவர் கூறியுள்ளார். அதனை கேட்காமல் சந்துரு தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி உன் கண் முன்னால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறினார்.

    கண் இமைக்கும் நேரத்தில் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.

    இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் மீது சாக்குப் போட்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூரில் நடுரோட்டில் புரோட்டோ மாஸ்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் ஜீவாநகரில் நடுரோட்டில் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மயங்கி கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மயங்கி கிடந்தவரின் ஊர் , பெயர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வின்சர் (வயது 40) என்பதும், திருப்பூரில் உள்ள புரோட்டாக்கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் நெல்லையில் வசித்து வருகின்றனர். வின்சர் திருப்பூரில் தனியாக தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    வின்சர் மயங்கி கிடந்த இடத்தில் பிளேடு ஒன்று கிடந்தது. இதனால் அவர் பிளேடால் தன்னைத்தானே கழுத்து மற்றும் கையில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கணவர் வேறு திருமணம் செய்ததால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா எண்ணமங்கலம் ஓங்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேமா (28).

    இவர் இன்று தனது குழந்தையுடன் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ைண கேனை எடுத்து தன் மீதும், குழந்தை மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று கேனை அவரிடமிருந்து பறித்தனர். பின்னர் அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பானது.

    பின்னர் பிரேமா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. எங்கள் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து நாங்கள் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஏற்காட்டில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின்னர் எனது தாயார் வீடான எண்ணமங்கலத்தில் குடும்பம் நடத்தி வந்தோம்.

    எனது கணவர் அடிக்கடி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவார். நாங்கள் கடந்த 2019-ம் வருடம் ஜூன் மாதம் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தோம்.

    இந்நிலையில் கடந்த 2019-ம் வருடம் டிசம்பர் மாதம் எனது கணவர் எம்.பி.ஏ.தேர்வு எழுத வேண்டியுள்ளதால் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் என்னை அழைத்து செல்வதாக என்னிடம் கூறினார். நீண்ட நாட்களாக அவர் வந்து என்னை அழைத்து செல்லவில்லை.

    நான் எனது கணவரிடம் தொலைபேசியில் இதுகுறித்து கேட்டபோது எனது சாதிப்பெயரை சொல்லி என்னை தகாத வார்த்தையால் திட்டினார். மீண்டும் அவரிடம் பேசியபோது என்னை கொன்று விடுவதாக மிரட்டினார்.

    இது தொடர்பாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்திருந்தேன். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து நான் பலமுறை எனது கணவர் வீட்டிற்கு சென்று என்னுடன் வாழும்படி கேட்ட போது எனது கணவரும் அவரது பெற்றோரும் என்னை தகாத வார்த்தைகளால் சொல்லி திட்டினர். மேலும் இங்கு வந்தால் உன்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினர்.

    இந்நிலையில் கடந்த 27-ந் தேதி எனது கணவருக்கும் கோவையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதுப்பற்றி கேள்விப்பட்ட நான் அதிர்ச்சியடைந்து இது குறித்து எனது கணவரிடம் கேட்டபோது. நீ கோவை வந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

    இதுகுறித்து பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் இன்று வா, நாளை வா என்று அழைத்தனர். எனவே என்னை திருமணம் செய்து ஏமாற்றிய எனது கணவர், அவரது பெற்றோர், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி இன்று காலை முதல் முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த முதியவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் கரிமேடு மோதிலால் மெயின்ரோடு, சாமியார் மடம் தெருவைச் சேர்ந்த சுப்பையா (68) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேலும் விசா ரணை நடத்தினர்.

    அப்போது அவர் “எனக்கு சொந்தமான நிலத்தை ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். நான் இது தொடர்பாக கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்காக இன்று காலை புறப்பட்டு வந்தேன். அப்போது மன விரக்தி காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன்” என்றார்.

    இதையடுத்து தல்லா குளம் போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டி செல்வி. இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் நுழை வாயிலில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பாண்டிச்செல்வி யின் பையில் மண்எண்ணை பாட்டில் இருந்தது தெரிய வந்தது.

    அவரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். அப்போது பாண்டிச்செல்வி, எனது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று விட்டார். அவருடன் என்னை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
    ×