என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் சுடுகாட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
- பாலாஜி தனியாக பொன்னேரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த உப்பளம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. திருமணமான சில மாதத்திலேயே சாந்தி கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் பாலாஜி தனியாக பொன்னேரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் மனவேதனையில் இருந்த அவர் பொன்னேரி ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story






