search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewerage"

    • ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஷிவந்தியம் வடக்கு தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்றதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த நிலையில் கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து சிலர் சிமெண்டு சிலாப் மூலம் மூடி பயன்படுத்தி வந்தனர். இதனால் கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

    இதையடுத்து ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் வினிதா மற்றும் அதிகாரிகள் வடக்கு தெருபகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பொக்லைன் எந்திரம் உதவியுடன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிமெண்டு சிலாப்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் 3-வது குறுக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடை பகுதியில் பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வழிகிறது என அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ., கென்னடியிடம் புகார் தெரிவித்தனர்.
    • தொகுதி முழுவதும் பாதாள சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் 3-வது குறுக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடை பகுதியில் பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வழிகிறது என அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ., கென்னடியிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, ஊர் பிரமுகர்களுடன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர் ஆகியோரை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்தித்து பேசினார். தொகுதி முழுவதும் பாதாள சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்த சந்திப்பின் போது தொகுதி அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி தலைவர் ஆரோக்கிய ராஜ், இருதயராஜ், மற்றும் வம்பா கீரப்பாளையம் பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • திருமங்கலம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியால் புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர்உறிஞ்சு குழாய் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஒன்றியத்தி ற்குட்பட்ட நடுக்கோட்டை கிராமத்தில் பொதுநிதியில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் உறிஞ்சுகுழாய் கடந்த 4 தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் மூலமாக நடுக்கோட்டை ஊராட்சி கீரியகவுண்டபட்டி காலனியில் இருந்து வரத்து கால்வாய் வழியாக வரும் கழிவு நீர் இந்த புதிய உறிஞ்சுகுழாயில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து நடுக்கோட்டை மைக்குடி அருகே கால்வாயில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேலக்கோட்டையில் இருந்து பாரபத்தி வரையில் செல்லும் திருமங்கலம் - காரியாபட்டி ரோட்டி னை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தற்போது 5 மீட்டர் அகலத்திலுள்ள இந்த ரோடு 7 மீட்டராக அகலப்படுத்தும் பணிகளை தொடங்கி யுள்ளனர். இதன் மூலமாக வாகன போக்குவரத்து மைக்குடி விலக்கில் இருந்து கீழக்கோட்டை, நடுக்கோட்டை, மேலக்கோ ட்டை விலக்கு வரையில் சாலை பணிகள் தொடங்கி யுள்ளன.

    முதற்கட்டமாக தற்போது கீழக்கோட்டை கிராமத்தில் சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இந்த பணி அடுத்துள்ள நடுக்கோட்டை பஞ்சாயத்து எல்லையில் நடைபெறும். அப்போது புதியதாக நடுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சு குழாய் அருகே சாலைபணி நடைபெறும் உள்ளதால் உறிஞ்சுகுழாய் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுநிதி ரூ. 1 ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீணாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறி யாளர் சுந்தரவடிவே லுவிடம் கேட்ட போது சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் நடைபெறும் என நாங்கள் ஏற்கனவே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நடுக்கோட்டை ஊராட்சியில் தகவல் கூறிவிட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் சாலை அகலப்படுத்தும் இடத்தில் உறிஞ்சுகுழாய் அமைத்துள்ளனர். அதன்மீது தான் சாலை அகலப்படுத்தும் பணிகள் செல்லும் என்றார்.

    கீழக்கோட்டை கிராம மக்கள் கூறுகையில் இரண்டு துறை அதிகாரிகளும் முதலிலேயே கலந்து ஆலோசித்து பணிகளை தொடங்கி இருக்கலாம். தற்போது அரசுநிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    • சாலையில் செல்லும் பள்ளி மாணவ மாணவர்களும், பொதுமக்களும், கல்லூரி வாகனங்களும் செல்வதற்கு இடையூறாக இருந்தது.
    • யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் நிதியிலிருந்து 15- வது நிதிக்குழு மானியம் மூலம் 16 லட்சம் செலவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

     கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் தெருக்களிலும், சாலைகளிலும் சென்றது. இதனால் சாலையில் செல்லும் பள்ளி மாணவ மாணவர்களும், பொதுமக்களும், கல்லூரி வாகனங்களும் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இந்த சாக்கடை நீரால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பல வருடங்களாகவே சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியமூர்த்தியிடம் சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையை உடனே நிறைவேற்றும் விதமாக யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் நிதியிலிருந்து 15- வது நிதிக்குழு மானியம் மூலம் 16 லட்சம் செலவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பணி தொடங்கும் பொழுது ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா தனவேல், துணைத் தலைவர் தனலட்சுமி, ஒப்பந்தர் செல்வராஜ், ஊராட்சி மன்ற செயலாளர் கருப்பையா, கிளைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் இருந்தனர். 

    • சின்னசேலம் அருகே சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மீண்டும் வீட்டுக்கு சென்று மாணவர்கள் சீருடை மாற்றுச்செல்லும் அவலநிலை உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் தாகம் தீர்த்தபுரம் செல்லும் முக்கிய சாலையில் சாக்கடை நீர் பல மாதங்களாகவே தேங்கி நிற்கிறது. இந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் அதிக அளவில் செல்கிறார்கள். இதனால் சாக்கடை நீரை மிதித்துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் அவநிலையில் மாணவர்கள் உள்ளனர். இந்த சாக்கடை நீர் பல மாதங்களாகவே தேங்கி நிற்கின்றது.

    தாகம் தீர்த்தாபுரத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் வாசுதே வனூரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாக்கடை நீரை கடந்து செல்லும் பொழுது எங்கே தடுமாறி கீழே விழுந்து விடுவோமோ என்று அவதிப்பட்டு வருகி றார்கள். பள்ளி மாணவர்கள் சாக்கடை நீரை கடக்கும் பொழுது அந்த வழியாக செல்லும் பேருந்துகளால் சாக்கடை நீர்மாணவர்கள் சீருடைகள் மேல் பட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று மாணவர்கள் சீருடை மாற்று ச்செல்லும் அவலநிலை உள்ளது.

    இந்த சாக்கடை நீரால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா, டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு நிறைய பேருக்கு டெங்கு நோய் வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சாக்கடை நீரை அகற்றி பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்

    • தியாகதுருகத்தில் கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம்- திருக்கோவிலூர் சாலையில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக ங்களில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கால்வாய் சந்தைமேடு செல்லும் பாலத்தில் தூர்ந்து போனது. இதனால் கழிவு நீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கிறது. இவ்வாறு தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன. இந்த கழிவு நீர் கால்வாய் கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக திகழ்கிறதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீடுகளை சாக்கடை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • இதனால் 1 மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை பாதாள சாக்கடை கழிவு நீர் சூழ்ந்தது.

    இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் கழிவு நீர் குளம் போல் தேங்கியது.

    இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், உரிய நேரத்தில் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்தனர்.

    இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மேல அனுப்பானடி- சிந்தாமணி மெயின் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வீடுகளை சூழ்ந்துள்ள கழிவு நீரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் அந்த பகுதிக்கு வந்து கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • தீவட்டிபட்டி அருகே சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 6 மாதம் ஆகியும் பணிகள் நடக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த நாச்சனம்பட்டி காலனி 12 - வது வார்டு பகுதியில் சுமார்100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை வசதி இன்றி வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒப்பந்ததாரர் சார்பாக சாக்கடை வசதி அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது.

    ஒவ்வொரு குடியிருப்புகள் முன்பு சுமார் 5 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மரப்பலகை வைத்து வீட்டுக்குள் சென்று வருகின்றனர்.

    முதியோர்கள் இதில் நடக்க இயலாமல் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளம் தோண்டி வெகுநாட்கள் ஆகியும் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாக்கடை வசதி மற்றும் குடிநீர் இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கீழக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலப்பதால் அந்த பகுதியில் மட்டும் கடலின் நிறம் மாறியுள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து வீடுகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் மூலமாக நாள்தோறும் 10 வட்சம் லிட்டர் கழிவுநீர் கடலில் நேரடியாக கலக்கிறது. பல ஆண்டுகளாக எத்தனையோ நகராட்சி நிர்வாகம் மாறிவிட்டாலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.

    தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும்வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர். சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலப்பதால் அந்த பகுதியில் மட்டும் கடலின் நிறம் மாறியுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன்வளம் முற்றிலுமாக அழிவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே கீழக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வேலூர் கஸ்பாவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    வேலூர் கஸ்பா வ.உ.சி. தெருவில் 2 நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது வ.உ.சி. தெருவிற்கு குடிநீர் கொண்டு செல்லும் பைப் லைன் உடைந்து விட்டது.

    இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து உடைந்த பைப் மீது ரப்பர் டியூப் சுற்றி விட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வ.உ.சி. தெருவிற்கு மாநகராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

    அப்போது கழிவுநீர் கலந்த குடிநீர் துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குடிநீர் பைப் லைன் உடைந்து விட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியத்துடன் இருந்து விட்டனர். இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் இந்த குடிநீரை பயன்படுத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடைந்த குடிநீர் குழாய் பைப் லைனை சரி செய்து மீண்டும் குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் மறியலில் ஈடுபட்டும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    காரைக்காலில் கழிவு நீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்பை புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் சீர் செய்தார். #MinisterKamalaKannan
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    திருநள்ளாறு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலையோரம் வெட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்களால் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாய்ந்த மரங்களால் திருநள்ளாறில் கழிவு நீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பால் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

    அந்த நேரத்தில் புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் அந்த வழியாக கட்சியினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கிய அவர் தன்னுடன் காரில் வந்த காங்கிரஸ் கட்சியினருடன் கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்திருந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செல்வம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் அமைச்சர் கமலகண்ணனுடன் சேர்ந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்தில் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தது.

    தம்முடன் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அமைச்சர் கமலகண்ணன் நன்றி தெரிவித்தார். ஏற்கனவே கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவையில் அமைச்சர் கமலகண்ணன் ஈடுபட்டு வருகிறார். அவரின் இந்த செயல்களை பொதுமக்கள் பாராட்டினர். #MinisterKamalaKannan

    வண்ணாரப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டையில் காத்பாடா தெரு, பென்சிலர் லைன், லெபர் லைன் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று தங்க சாலை அருகே உள்ள குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் குடிநீரில் கழிவு நீர் கலந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு வந்து சமாதான பேச்சு நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். அதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விரைவில் குடிநீர் சுத்தமாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    ×