என் மலர்
நீங்கள் தேடியது "encroachment disposal"
- ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஷிவந்தியம் வடக்கு தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்றதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த நிலையில் கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து சிலர் சிமெண்டு சிலாப் மூலம் மூடி பயன்படுத்தி வந்தனர். இதனால் கால்வாயை தூர்வார முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் வினிதா மற்றும் அதிகாரிகள் வடக்கு தெருபகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பொக்லைன் எந்திரம் உதவியுடன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிமெண்டு சிலாப்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.