search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seeman"

    • நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.
    • அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.

    சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி 4 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்புகள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார்.

    ஆனால் பாரதிய ஜனதாவில் அவருக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.க. கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் அவரது நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. கடந்த மாதம் அவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்து பேசினார். அப்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.

    அதை சீமானும் ஏற்றுக் கொண்டதால் வித்யாராணி நாம் தமிழர் கட்சியில் இணைந்து இருப்பதாக தெரிகிறது. அவரை மீண்டும் பாரதிய ஜனதாவில் செயல்பட வைக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறங்குகிறார். இன்று (சனிக்கிழமை) மாலை இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்.
    • எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அந்த கட்சியின் தலைவர் சீமான் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தன்னிச்சையானதோ, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதோ இல்லை' என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 15-ந் தேதி விசாரித்தது.

    வாதங்களை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கரும்பு விவசாயி சின்னம் கோரும் நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்.

    * எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள்.

    * மாற்றாக விவசாயத்தை முன்வைத்து ஒரு சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள் என்று கூறினார்.

    • நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
    • 40 தொகுதிகளின் வேட்பாளர்களை சீமான் அறிமுகம்.

    மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது.

    இந்நிலையில், 40 தொகுதிகளின் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

    அதன்படி, வரும் 23ம் தேதி மாலை சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

    அங்கு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? என்ற பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • வரும் 20ம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது.

    சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

    இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். அவ்வழக்கில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உரிய பதிலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வரும் 20ம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது. ஆதலால் வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதனையொட்டி, கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    • ‘ஸ்ரீ பள்ளிகளை’ தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது.
    • புதிய கல்விக்கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் ஸ்ரீ பள்ளிகளாகும்

    பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி 'ஸ்ரீ பள்ளிகளை' தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ்நாட்டில் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது மெல்ல மெல்ல பாஜகவின் புதிய கல்விக்கொள்கையை நுழைப்பது தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.

    புதிய கல்விக்கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் ஸ்ரீ பள்ளிகளாகும். அதனை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திமுக அரசு புதிதாக குழு அமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை, ஒன்றியப்பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு ஒற்றை மயத்தையும், காவிக்கொள்கையையும் திணிக்கும் பொருட்டு மோடி அரசால், எதேச்சதிகாரப்போக்கோடு உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றெனக் கூறி, புதிதாக மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்க கடந்த 2022ஆம் ஆண்டு சூன் 1 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு.

    ஆனால் ஓராண்டுக்குள் தேசியக் கல்விக்கொள்கைக்கு சாதகமாக மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதாக குற்றம் சுமத்தி, அக்குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் விலகியது திமுக அரசு உருவாக்கவுள்ள கல்விக் கொள்கையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையின் கூறான இல்லம் தேடிக்கல்வியை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியதும், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி எனும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை நியமனம் செய்ததும், பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை விமர்சித்ததற்காக ஆசிரியர் உமாமகேசுவரியை அண்மையில் பணி இடைநீக்கம் செய்து தண்டித்ததும் திமுக அரசின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது.

    தற்போது அத்தனை சந்தேகங்களையும் உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவின் வர்ணாசிரம கல்விக்கொள்கையை முற்று முழுதாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த 'ஸ்ரீ பள்ளிகளை' தொடங்கும் திமுக அரசின் முடிவு பாஜகவின் கைப்பாவையாகவே திமுக செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது.

    மாநிலத் தன்னாட்சியென வாய்கிழியப்பேசும் திமுக, மாநில அரசின் தன்னுரிமையைக் காவுகொடுத்து, பாஜக அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துணைபோவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனமில்லையா? சனாதனத்திற்கு எதிரானது திராவிடமென முழங்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கல்வியைக் காவிமயமாக்க எப்படித் துணைபோகிறார்? இதுதான் சமூகநீதி ஆட்சியா? இதுதான் இருளகற்றும் விடியல் ஆட்சியா? இந்துத்துவ பாஜக அரசு முன்வைக்கும் ஆரிய மாடலை அடியொற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் உங்களது பாசிச எதிர்ப்பா முதல்வரே?

    இதுதான் ஆரியத்தைத் திராவிடம் வீரியமாக எதிர்க்கின்ற முறையா? ஒன்றிய அரசு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த ஒரு துரோகம் போதாதா? மக்களை இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும், நிர்வாகச் செயல்பாடும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல; திராவிட ஆட்சியின் மூலவரான அறிஞர் அண்ணா அவர்களுக்கே செய்யும் கொடுந்துரோகமாகும்.

    ஆகவே, இவ்விவகாரத்தில் திமுக அரசு இனியாவது தனது தவற்றை உணர்ந்து, பாஜகவின் வர்ணாசிரம கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, சமூகநீதி அடிப்படையில் தனித்துவமிக்க மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.
    • நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சீமான் படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

    புதுப்பேட்டை:

    பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.

    இந்த நிலையில் சீமானின் சின்னம் என்ன என்ற வாசகத்துடன் தேர்தல் ஆணையத்தை கேட்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சீமான் படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

    இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
    • ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • முத்துமலை முருகன் கோவிலில் பாரதிராஜா சுவாமி தரிசனம் செய்தனர்.
    • நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன்.

    கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ்பாண்டியன், சின்னம் தராத நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

    இந்த பிரச்சாரத்தை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பங்கேற்று துவக்கி வைத்தார். முன்னதாக அவர் முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் பிறகு இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அதில், நான் அரசியல்வாதி அல்ல. பொது மனிதனாக சொல்கிறேன். நாம் தமிழர் கட்சியினர் சீமான் வழியில் வெற்றி பெறுவார். இளைஞர்கள் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன். எந்த சின்னம் கொடுத்தாலும் சீமான் வெற்றி பெறுவார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். என் பிள்ளை சீமானுக்கு புல்லும் ஆயுதம்

    சீமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்து போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் இதுபோல குற்றச்சாட்டுகளை தெரிவித்து தான் வருகிறார்கள்" என அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேஸ் சிலிண்டர் விலையை ரூ.100 அளவிற்கு குறைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது
    • பாஜக ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் இப்போதுதான் முதல்முறையாக மகளிர் தினம் வருகிறதா?

    இந்திய பிரதமர் மோடி அவர்கள் மகளிர் நாளினை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலையை ரூ.100 அளவிற்கு குறைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

    அதில், "எரிகாற்று உருளை என்பது மகளிருக்கு மட்டுமானதா? வீட்டுக்கானதில்லையா? குடும்பத்திற்கானதில்லையா? பாஜக ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் இப்போதுதான் முதல்முறையாக மகளிர் தினம் வருகிறதா? கடந்த 5 ஆண்டுகளில் 58 முறை எரிகாற்று உருளையின் விலையை 45% உயர்த்திவிட்டு, இந்த ஆண்டு மட்டும் குறைப்பதற்கு காரணம் மகளிர் நாள் வருவதனாலா? இந்த ஆண்டு தேர்தல் நாள் வருவதனாலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    நேற்று சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பெண்களுக்கு மகளிர் தின பரிசாக, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீமானை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மீண்டும் முயற்சித்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியானது.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும் 20 ஆண் வேட்பாளர்களும் களம் இறங்குகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்.

    நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கு ஏற்கனவே தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் சீமானிடம் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

    இதுபற்றி சீமானே வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் தனித்து போட்டியிடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீமானை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மீண்டும் முயற்சித்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியானது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் இதனை மறுத்துள்ளனர். இது தொடர்பாக அந்த கட்சி நிர்வாகிகள் கூறும்போது, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்த பிறகும் நாங்கள் கூட்டணி சேரப்போவதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    இது தொடர்பாக சீமானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. கூட்டணி சேரப்போவதாக தவறான தகவல்களை, வதந்தியை பரப்புகிறார்கள். ஒருவேளை அது போன்ற தகவலை பரப்புபவர்கள் எங்களுக்காக பேசிக்கொண்டிருக்கிறார்களோ? 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும் 20 ஆண் வேட்பாளர்களும் களம் இறங்குகிறார்கள். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் விரைவில் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளேன். கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதில் முடிவு கிடைத்தவுடன் தேர்தல் பணிகளில் விரைவாக ஈடுபடுவோம்.

    இவ்வாறு சீமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    • நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
    • பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

    சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

    இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். அவ்வழக்கில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, கரும்பு விவசாயி சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்படாதது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன். நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். 7 விழுக்காடு. இருப்பதிலேயே தனித்த கட்சி என்றால் திமுக, அதிமுகவிற்கு பிறகு நாங்கள் தான். நீங்கள் 8 விழுக்காடு தொட வேண்டும் என்கிறீர்கள். 7 தொட்டவுடன் சின்னத்தை தூக்கி விடுகிறீர்கள்? இது தான் ஜனநாயகமா? என்று பேசியுள்ளார்.

    • துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன்
    • நான் வேளாண் குடிமகன் என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன்.

    துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமை செயலகத்தில், விவசாயி சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இருக்கிறோம். அவர் பரிந்துரைப்பதாக கூறியிருக்கிறார். இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வரும். அடுத்ததாக உச்சநீதிமன்றம் செல்வேன்.

    நான் முதலில் புலி கேட்டேன். அது தேசிய விலங்கு என்று சொன்னீங்க. அடுத்து மயில் கேட்டேன். தேசிய பறவைன்னு சொன்னீங்க. ஆனால் தேசிய மலர் தாமரையை பிஜேபிக்கு எப்படி கொடுத்தீங்கன்னு கேட்டேன்.

    நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். 7 விழுக்காடு. இருப்பதிலேயே தனித்த கட்சி என்றால் திமுக, அதிமுகவிற்கு பிறகு நாங்கள் தான்.

    நீங்கள் 8 விழுக்காடு தொட வேண்டும் என்கிறீர்கள். 7 தொட்டவுடன் சின்னத்தை தூக்கி விடுகிறீர்கள்? இது தான் ஜனநாயகமா? லஞ்சம், ஊழல் செய்பவர்கள் தான் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். எப்படி ஒழியும்?

    துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன் என்று அவர் கூறியுள்ளார். எந்த சின்னமாக இருந்தாலும் நான் போட்டியிடுவேன் என்றும் எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள் சீமானுக்கு என்ன சின்னம் என்று பார்த்து தான் போடுவார்கள்.

    நான் வேளாண் குடிமகன் என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன். அதையொட்டி சின்னம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் போராடுகிறேன்" என்று சீமான் தெரிவித்தார்.

    ×