search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன்: சீமான்
    X

    செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன்: சீமான்

    • துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன்
    • நான் வேளாண் குடிமகன் என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன்.

    துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமை செயலகத்தில், விவசாயி சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இருக்கிறோம். அவர் பரிந்துரைப்பதாக கூறியிருக்கிறார். இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வரும். அடுத்ததாக உச்சநீதிமன்றம் செல்வேன்.

    நான் முதலில் புலி கேட்டேன். அது தேசிய விலங்கு என்று சொன்னீங்க. அடுத்து மயில் கேட்டேன். தேசிய பறவைன்னு சொன்னீங்க. ஆனால் தேசிய மலர் தாமரையை பிஜேபிக்கு எப்படி கொடுத்தீங்கன்னு கேட்டேன்.

    நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். 7 விழுக்காடு. இருப்பதிலேயே தனித்த கட்சி என்றால் திமுக, அதிமுகவிற்கு பிறகு நாங்கள் தான்.

    நீங்கள் 8 விழுக்காடு தொட வேண்டும் என்கிறீர்கள். 7 தொட்டவுடன் சின்னத்தை தூக்கி விடுகிறீர்கள்? இது தான் ஜனநாயகமா? லஞ்சம், ஊழல் செய்பவர்கள் தான் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். எப்படி ஒழியும்?

    துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன் என்று அவர் கூறியுள்ளார். எந்த சின்னமாக இருந்தாலும் நான் போட்டியிடுவேன் என்றும் எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள் சீமானுக்கு என்ன சின்னம் என்று பார்த்து தான் போடுவார்கள்.

    நான் வேளாண் குடிமகன் என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன். அதையொட்டி சின்னம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் போராடுகிறேன்" என்று சீமான் தெரிவித்தார்.

    Next Story
    ×