search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadblocks"

    • சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.

    மதுரை

    மதுரையில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு கோடையை மிஞ்சும் வகை யில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில் சில நாட்களாக மாலை வேளைகளில் பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    ஆனால் அதே வேளை யில் மழைக்கு தாங்காத மாநகராட்சி சாலைகளால் மக்கள் மறுபுறம் கடும் அவ தியடைந்து வருகிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கார ணங்களுக்காக தோண்டப் பட்ட குழிகள் சிறிய குளம், குட்டைகளாக மாறியுள்ளன. குறிப்பாக பழங்காநத்தம், செல்லூர் உள்ளிட்ட பகுதிக ளில் பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்.

    சேறும், சகதியுமான சாலை

    மதுரை மாநகராட்சி 27-வது வார்டு செல்லூர் 60 அடி சாலை மெயின் ரோட் டில் சேறும் சகதியாக வயல்வெளி போல் காட்சி அளிப்பதால் அந்த வழியாக நடந்து செல்வோர், வாக னங்களில் செல்வோர் சாக சம் செய்வது போல் கடக்க வேண்டியதுள்ளது. சீர மைப்பு மற்றும் மராமத்து பணிகள் மந்த நிலையில் நடப்பதால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ற னர்.

    இதுகுறித்து 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.மாயத்தேவன் கூறுகை யில், செல்லூர் 60 அடி ரோட்டில் சேரும், சகதியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரு கின்றனர். நடந்து செல் வோர், வாகனங்களில் செல் வோர் விழுந்து செல்கின்ற னர்.

    தினமும் ஆயிரக்கணக் கானோர் கடந்து செல்லும் இந்த ரோட்டில் உடனடியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். பலமுறை இது குறித்து மாமன்ற கூட்டங்க ளில் எடுத்துரைத்தும் ஆணையாளரிடம் மனு வழங்கியும் பணிகள் நடை பெறவில்லை. சம்பந்தழு ழுட்ட மாநகராட்சி அதிகாரி யிடம் சொல்லியும் அவரும் எதுவும் செய்து கொடுப்ப தில்லை.

    நான் கவுன்சிலராக பொறுப்பேற்ற போது செல்லூர் 60 அடி ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது. 15 மாதங்கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவ டையவில்லை. மேலும் குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகள் ரிப்பேர் ஆகி உள்ளதால் தூய்மை பணியா ளர்கள் குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. மேலும் குப்பைத்தொட் டியை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகளும் சரிவர இந்த வார்டுக்கு வருவ தில்லை.

    எனது வார்டு அ.தி.மு.க. வார்டு என்பதால் மாநக ராட்சி அதிகாரிகள் இந்த வார்டை தொடர்ந்து புறக்க ணித்து வருகின்றனர். பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் தேங்கி இருக் கும்போது கழிவுநீர் உறிஞ் சும் வாகனத்தை அனுப்பச் சொன்னால் அனுப்புவ தில்லை. மேலும் இந்த வார்டில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. சமீ பத்தில் ஒரு வெறி நாய் எட்டு பேருக்கும் மேல் கடித்தது. உடனடியாக அதி காரிகளுக்கு இதைச் சொல் லியும் நாய் பிடிக்கும் வண்டியை அனுப்பி நாய் களை பிடிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யவில்லை.

    இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளி யில் செல்ல முடியவில்லை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல பயப்படு கின்றனர். மேலும் இந்த வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் சாலை வசதி கள் இல்லாமல் உள்ளதால் குண்டும், குழியுமாக காணப் படுகிறது. மழை நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிக மாகி வருகிறது.

    எனவே உடனடியாக அனைத்து தெருக்களிலும் தார்ச் சாலைகளை அமைப் பதற்கு மாநகராட்சி அதிகா ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக் களை திரட்டி சாலை மறிய லில் ஈடுபட போகிறேன் என்றார்.

    • சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்படுகின்றனர்.
    • நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. நெல்லிக்குப்பம் பகுதியில் நடக்கும் சாலைப் பணிகளில் சரியான முறையில் அளவீடு செய்யவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வரும் அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று காலை சாலை மறியல் நடைபெற்றது.

    மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அண்ணா சிலை முன்பு திரண்டனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். ்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விரிவாக்க பணிகளையும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் சரியான முறையில் செய்யவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கருகிய பயிர்கள் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள அருந்தவம்புலம் கடைத்தெ ருவில் கருகி வரும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற உரிய தண்ணீர் திறந்து விடக்கோரியும் கருகி போன நெற்பயிருக்கு நிவாரண தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியல் போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சம்பந்தம் ,மகேந்திரன், மங்கையர்கரசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் .

    இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேதார ண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர போஸ், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தாசி ல்தார் சுரேஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிட ப்பட்டது.

    இதனால் திருத்து றைப்பூண்டி_ நாகப்ப ட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன.
    • கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள உலகியநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன. இதில் ஒரு கிணற்றில் ஊற்று தண்ணீர் இல்லை. மற்றொரு கிணற்றில் உள்ள குடிநீர் மூலம் மட்டுமே ஊர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் தினமும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என உறுதி அளித்தனர். அதன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு சரியாக வேலை வழங்கப்படவில்லை. சம்பளம் சரியாக தரவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்தநிலையில் பாதிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கடலூர் - பாலூர் சாலையில் பாதிரிக்குப்பம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில்,

    ஏற்கனவே எங்களுக்கு வேலையும், சம்பளமும் சரியாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஆட்குறைப்பு செய்யப் போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் வசதியானவர்களுக்கு வேலை கொடுத்துவிட்டு, ஏழை எளிய மக்களின் வேலையை பறிக்கிறார்கள்.இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார்கள்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தரவாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக கடலூர் பாலூர் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.
    • நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகே வாரி புறம்போக்கு உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த வாரியின் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து செல்கின்றன. இந்நிலையில் வாரி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமி ப்புகளை அகற்ற கோரி தனிநபர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற எஸ்.ஒகையூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். 

    தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாசில்தார் (பொறுப்பு) பாலகுரு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிகாரிகள் வருகிற 28- ந் தேதி வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது.
    • அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராம த்தில் தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செல்போன் டவர் பொது மக்களின் குடியிரு ப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வருவதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேல்மலையனூர் அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் அவலூ ர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடு ப்பதாக கூறியதின்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போ க்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • பெண்கள் மகாத்மா காந்தி 100 -நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தனர்.
    • பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் உங்களுக்கு இன்று வேலை இல்லை நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் மகாத்மா காந்தி 100 -நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 5 மற்றும் 6-வது வார்டில் உள்ள பெண்களுக்கு சரிவர மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை கொடுக்கவில்லை. இதனை யடுத்து இன்று காலை அந்த பகுதி 5,6-வது வார்டு பெண்கள் அனைவரும் சேர்ந்து ஊரக வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் உங்களுக்கு இன்று வேலை இல்லை நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வானூர்- காட்ராம்பாக்கம் சாலையில் திடீரென மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிடிஓக்கள் இங்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி பெண்கள் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.

    • 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வரும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான முறையில் வேலை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங் களை காங்கிரசார் நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி, அண்மை யில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து செய்த விமர்சனம் காரணமாக, குஜராத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டது. இதை எதிர்த்து, குஜராத் ஹைகோர்ட்டில் ராகுல்காந்தி தாக்கல் செய்த அப்பீல் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங் களை காங்கிரசார் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் சாலை யில், காரைக்கால் மாவட்ட காங்கிரசார், மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமையில் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    போராட்டத்தில், புதுவை முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன், சுப்பிர மணியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கரன் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள், தங்கவடி வேலு, கருணாநிதி, சுப்பை யன், அரசன், ரஞ்சித், முரளி, நிர்மலா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில், ராகுல் காந்தியின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடி யாத பா.ஜ.க. அரசு, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறிக்கும் வகையில், திட்ட மிட்டு பொய்வழக்குகளை ஜோடித்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது என காங்கிரஸார் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டி யன்பால் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர். இதை யடுத்து, காங்கிர சார் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இந்த போராடத்தால், காரைக் கால் புதுச்சேரி-சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கிராம மக்கள் பஸ்சை மறித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளா ளப்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் பலமுறை பள்ளி நிர்வாகத்தி டம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் சத்திர வெள்ளாளப்பட்டி கிராம மக்கள் இன்று காலை ஊருக்கு வந்த அரசு பஸ்சை மறித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் மாணவிகள், பெற்றோர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி கூறப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு எஸ். புதுக்கு ப்பத்தில் குட்டையாண்டி குளம் உள்ளது. இந்தக் குளம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடுவீரப்பட்டு - சத்திரம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோஷங்களை எழுப்பினர்.

    தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி மற்றும் வருவாய் துறையினரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அளவீடு செய்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த தாசில்தார் ஆனந்தி உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×